கேள்விகளும் பதில்களும் #1 Jeffersonville, Indiana, USA 64-0823M 1சற்று நேரம் நாம் நின்ற வண்ணமாக, ஜெபத்துக்காக தலை வணங்குவோம். கிருபையுள்ள பிதாவாகிய தேவனே, எங்கள் இருதயத்தின் ஆழங்களிலிருந்து இக்காலை வேளையில் உமக்கு நன்றி செலுத்துகிறோம், ஏனெனில் எங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க நீர் வல்லவராயும் சித்தமுள்ளவராயும் இருக்கிறீர். நீர் ஏற்கனவே எங்களுக்கு செய்துள்ளவைகளுக்காக எங்கள் நன்றியறிதலை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம். இக்காலை வேளையில் எங்களுக்கு நீர் உதவி செய்வீர் என்று மிகுந்த எதிர்நோக்குதலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம். இந்த கட்டிடத்தின் வாசலை விட்டு நாங்கள் செல்லும் போது, நாங்கள் உள்ளே வந்ததைக் காட்டிலும் வித்தியாசமான ஒரு நபராக வெளியே செல்வோமாக. பரிசுத்த ஆவியானவர் தாமே இக்காலை வேளையில் எங்களை - எங்கள் தன்மைகளை - வனைந்து, உமது ராஜ்யத்தின் பிரஜைகளாக எங்களை ஆக்குவாராக. இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். (உட்காரலாம்). 2சற்று தாமதித்து இங்கு வந்ததற்காக வருந்துகிறேன், இக்கட்டிடத்துக்கு வருவதற்கு முன்பு, எனக்கு சில காரியங்கள் செய்ய வேண்டியிருந்தது. நிறைய நோயாளிகள். பேட்டிகள். எனவே இக்காலை வேளையில் இங்கு வந்து, அருமையான உங்கள் அனைவரையும் காண்பதில் மகிழ்ச்சியடைகிறோம். எங்களுக்கு அருமையான பொருட்களை அனுப்பித் தந்த அந்த மக்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் - என் மனைவிக்கு வெகு மதியும் எனக்குத் தன்னுடைய மான் துப்பாக்கியை அனுப்பித் தந்த அந்த சகோதரனுக்கும். கர்த்தர் அவரை ஆசீர்வதிப்பாராக. அவருக்கு வயதாகி விட்டதென்றும் அந்த துப்பாக்கியை அவர் இனி உபயோகிக்கப் போவதில்லை என்றும் கூறி, அதை நான் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று அவர் விரும்பினார். எனவே அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். என் உயிருள்ள வரைக்கும், சகோதரனே, என்னால் உபயோகிக்க முடியும் வரைக்கும், அதை நான் வைத்திருப்பேன். உங்களை நினைத்து உங்களுக்காக ஜெபம் செய்யாமல், அதை நான் கையில் எடுக்க மாட்டேன். 3இப்பொழுது. நாம்... இன்றைக்கு அநேக காரியங்கள் செய்ய வேண்டியதாயுள்ளது. இங்கு நான் உள்ள போது, சில கேள்விகளைப் பெற்றுக் கொண்டு, என் சபையோரின் இருதயங்களில் என்ன உள்ளது என்பதைக் கண்டு கொள்ளலாம் என்று எண்ணினேன் - வெவ்வேறு நபர்களின் இருதயங்களில் நான் நிச்சயம் கேள்விகளைப் பெற்றுக் கொண்டேன்! ஆயிரம் வருட அரசாட்சி தொடங்கும் வரைக்கும் பதிலளிக்க போதுமான கேள்விகள் எனக்குக் கிடைத்திருக்கின்றன! இத்தனை கேள்விகளைப் பெற்றுக் கொள்வேன் என்று நான் நினைக்கவேயில்லை. இங்கு ஏறக்குறைய நூறு கேள்விகள் உள்ளன, இன்று காலையில் நூற்றுக்கும் அதிகமான கேள்விகள் வந்துள்ளன. எனவே அவைகளுக்கு சரியான விதத்தில் பதில் சொல்ல முடியாது என்று எண்ணுகிறேன்.... அவை நல்ல கேள்விகள், உண்மையிலேயே நல்லவை. இப்பொழுது, சில கேள்விகளை பகிரங்கமாக எல்லோர் முன்னிலேயும் படிக்க இயலாது. எனவே, உங்களுக்குத் தெரியும் அவர்களை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்... என்னால் சுற்றி வளைத்து சொல்ல முடியாதவைகளை ... அவை குடும்ப பிரச்சினைகள். ... நீங்கள் புரிந்து கொள்வீர்கள். கணவன் மனைவி இருவரையும் என்னைத் தனியாக பேட்டிக் காண கேட்டுக் கொண்டிருக்கிறேன், அப்பொழுது நான் இவ்விஷயங்களைக் குறித்து அவர்களுடன் தனியாகப் பேசலாம். அவை கெட்ட காரியங்கள் அல்ல, அவை குடும்பத்தில் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள், அது மனித இயல்பு , நாம் போய்க் கொண்டிருக்கிற இந்த வாழ்க்கை ஓட்டத்தில் .... நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த காலம் இவைகளை விளைவிக்கிறது, அதனுடன் இப்பிரச்சினைகள் தொடர்பு கொண்டுள்ளன. மானிட குடும்பத்தில்; அத்தகைய கேள்விகளுக்கு பதில் கூறியாக வேண்டும். எனவே, சிறந்த முறையில் அவைகளுக்கு பதிலளிக்க என்னாலான யாவையும் செய்வேன். 4சில நேரங்களில் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், நீண்ட நேரம் ஆகிவிடுகின்றது; இவை ஒன்றையும் விட்டுவிட எனக்கு மனதில்லை. அவை ஒவ்வொன்றுக்கும் என்னால் முடிந்த வரைக்கும் விவரமாக பதில் கூறுவேன். இக்கேள்விகளை நான் ஒரு பையில் அடைத்து வைத்திருக்கிறேன். அவைகளுக்கு பதிலளிக்க, எனக்குத் தேவைப்பட்டால், ஒரு வேதவசனத்தை அதில் குறித்து வைத்து அதை திரும்பவும் அந்த பையில் போட்டு விட்டேன். நேற்று பகல் பூராவும், நேற்றிரவு இரவின் பெரும்பகுதியிலும், அதன் பிறகு இன்று காலை விடியும் வரைக்கும் அவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்..... இன்று காலையில் அவைகளுக்கு இரண்டு மடங்கு கேள்விகள் எனக்கு வந்து சேர்ந்துள்ளன. எனவே, கர்த்தருக்கு சித்தமானால், நாம் என்ன செய்வோமென்றால், என்னால் முடிந்த வரை நடுப்பகல் வரைக்கும் அவைகளுக்கு பதிலளித்து விட்டு, அதன் பிறகு நாம் கலைந்து விட்டு, மறுபடியும் இன்று மாலையில் வந்து, என்னாலான வரைக்கும் அவைகளை இன்றிரவு முடிக்கப் பார்க்கிறேன் - நாம் முடித்துவிட முடியுமா என்று பார்ப்போம். ஒரேயடியாக இக்கேள்விகள் அனைத்துக்கும் பதிலளித்து உங்களை நான் தண்டிக்க வேண்டியதில்லை. நீங்கள் சென்று, உங்களால் முடியுமானால் நீங்கள் மறுபடியும் மாலையில் வரலாம். உங்களால் வர முடியாமல் போனால், சகோ. ஃபிரட் சாத்மன் இதை ஒலி நாடாவில் பதிவு செய்கிறார் என்று நினைக்கிறேன். இது ஒலிநாடா வில் பதிவு செய்யப்படுகிறதா? சரி, அது மிகவும் நல்லது. ஆம், அவர்கள் அந்த அறையில் ஒலிநாடாவில் பதிவு செய்து கொண்டிருக்கின்றனர். உங்களுக்கு விருப்பமானால், இந்த ஒலிநாடாவை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். அது விற்பனைக்காக வைக்கப்பட்டு, கேள்விகளும் பதில்களும் என்று அழைக்கப்படும். சில கேள்விகள் மிகவும் கடினமானவை. அவைகள் பெரும்பாலும் சபையின் உபதேசங்கள் பேரில் கேட்கப்பட்ட கேள்விகள். 5சில நேரங்களில் இக்கேள்விகளுக்கு பதிலுரைக்கையில், அவை கடினமானவை என்பதை ஜனங்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். இங்கு நிற்பதற்கு அதிகமான கிருபை அவசியமாயுள்ளது. நீங்கள் மட்டும் ஜனங்களாகிய உங்கள் பேரில் நான் கொண்டுள்ள அன்பை அறிந்திருந்தால் என்னால் அதை தெரிவிக்க இயலாது. அதை நான் என் பிள்ளைகளுக்கும் கூட தெரிவிப்பதில்லை. என் மனைவியிடம் நான் கொண்டுள்ள ஆழமான அன்பை நான் தெரிவிக்க வேண்டிய விதத்தில் தெரிவிப்பதில்லை, ஏனெனில் நான் அத்தகைய மனோபாவம் கொண்டவன், ஒரு நேர்க்கோட்டில் நான் தொடர்ந்து சென்று கொண்டேயிருக்கிறேன். என் முழு அன்பையும் நான் ஒருவருக்கு மாத்திரமே தெரிவிப்பேன், அவர் தான் சர்வவல்லமையுள்ள தேவன். எல்லாவற்றிற்கும் மேலாக நான் அவரையே நேசிக்கிறேன். மற்றவர்களையும் நான் நேசிக்கிறேன், ஆனால் நான் அவர் பேரில் கொண்டுள்ள அன்பை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை; அதுவே முதன்மை ஸ்தானம் வகிக்கட்டும். எனவே உங்கள் கேள்விகளுக்கு நான் பதிலளிக்கையில், என் இருயத்தில் உங்கள் பேரில் அன்பைக் கொண்டவனாய் நான் பதிலளிக்கிறேன். ஆனால் எல்லா நேரத்திலும், ஒருவர் மட்டுமே எனக்கு முன்பாக உள்ளார், அவர்தான் இயேசு கிறிஸ்து (பாருங்கள்?), அவர் அதற்கு பதில் கூறும் விதத்தில். 6சில நேரங்களில் நான் பதில் கூறுகையில்.... அது புண்படுத்தக் கூடும், அவ்விதம் செய்ய நினைத்து நான் செய்வதில்லை. நான் கூறினது போன்று, கிறிஸ்துவை எனக்கு முன்பாக வைத்து ஒரு நோக்கத்துடன் நான் பதிலளிக்கிறேன். என் நினைவில் நான் கொள்ள வேண்டியது என்னவெனில், அவரை மாத்திரமே நான் .... அவருக்கு நான் கணக்கொப்புவிக்க வேண்டும். எனவே என் முதல் அன்பு அவருக்கே , என் இரண்டாவது அன்பு ஜனங் களாகிய உங்களுக்கு - தம்முடைய சொந்த இரத்தத்தினால் அவர் கிரயத்துக்கு கொண்ட அவருடைய சபைக்கு. அவர் தம்மில் அன்புகூருகிறதை விட அதிகமாக உங்கள் பேரில் உண்மையில் அன்புகூருகிறார். ஏனெனில் அவர் தம்மையே உங்களுக்காக கொடுத்தார். நீங்கள் அவருடைய இரத்தத்தினால் கிரயத்துக்கு கொள்ளப்பட்டவர்கள். அதை நான் எனக்குத் தெரிந்த வரையில் மிகவும் கவனமாகவும் உத்தமமாகவும் கையாளுகிறேன். அவ்விதம் செய்யும்போது, சில நேரங்களில் நீங்கள், “அது மிகவும் கடூரமான குறிப்பு, அது நேரடியான தாக்குதல்” என்று நினைக்கக் கூடும்.அவரை என் மனதில் கொண்டவனாய் (பாருங்கள்?), அது அவ்விதமாகத்தான் இருக்க வேண்டும் என்று மற்றவர் - எல்லோரும் கண்டு கொள்ள வேண்டும் என்பதற்காகவே அதைச் செய்கிறேன். அது புண்படுத்துவதற்காக அல்ல, ஜனங்கள் அதை புரிந்து கொள்ள வேண்டும் என்னும் உறுதி கொள்வதற்காகவே. ஒவ்வொருவரும் அதை அந்த வகையில் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இப்பொழுது, இங்குள்ள கேள்விகளின் மூலம், நமது மனதில் என்ன உள்ளது என்பதை அறிந்து கொள்கிறோம். இன்று காலையில் நீங்கள் எல்லோரும் கூடி வந் துள்ளதை நான் காண்கிறேன், எல்லாவிடங்களிலும் ஜன நெருக்கம் உள்ளது. மற்றுமொரு சபையில் ஜனங்கள் நிரம்பி வழிகின்றனர் என்று நினைக்கிறேன். நம்முடன் தொடர்பு கொண்டுள்ள அந்த சபை வானொலி அல்லது தொலைபேசி இணைப்பை பெற்றுள்ளனர். அது... அந்த சபை இன்று காலையில் ஜனங்களால் நிரம்பி வழிந்து கொண் டிருக்கிறது. நான் கேள்விப்படுகிறேன் சகோதரன் ... வேறொரு சகோதரனின் சபையில், இங்கிருந்து ஜனங்கள் அங்கு சென்றுள்ளதால் இவ்விதமான நிரம்பி வழிதலை அவர் பெற்றிருக்கிறார். அதன் விளைவாக, இங்குள்ள நீங்கள் சுவற்றின் அருகில் நின்று கொண்டிருக்க வேண்டியதில்லை. 7இன்றிரவு, கர்த்தருக்கு சித்தமானால், நாம் நேரத்தோடே தொடங்குவோம். போதகரையும் நிர்வாகக் குழுவினரையும் நான் அனுமதி கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்... இன்றிரவு சிறிது நேரத்தோடே தொடங்குவோம். ஏனெனில் இங்கு வந்துள்ள சிலர் வீடு திரும்ப நீண்ட தூரம் காரோட்டிச் செல்ல வேண்டும். கூடுமானால் ஒரு மணி நேரம் முன்பு தொடங்கி சீக்கிரம் முடித்து விடலாம். அப்பொழுது நீங்கள்... நீங்கள் உண்டு முடித்த பிறகு, 6 மணிக்குப் பிறகு நாம் தொடங்கி விடலாம். பாருங்கள்? நீங்கள் வழக்கமாக 7.30க்கு தொடங்குகிறீர்கள், இல்லையா? நான் 7.00 மணிக்கெல்லாம் மேடையின் மேல் வந்து விடட்டும். பாருங்கள்? அப்பொழுது 8.00 அல்லது 8.30க்கு முடித்துவிடுவோமானால், நீங்கள் நேரத்தோடே வீடு திரும்பி நாளைய வேலைக்காக ஆயத்தப் படலாம், நாளை என்று ஒன்று இருக்குமானால். இப்பொழுது, கர்த்தர் உங்களோடு இருந்து, உங்களை அபரிமிதமாக ஆசிர்வதிப்பாராக. இந்த ஆராதனை முடிந்தவுடன் நான் உள்ளே சென்று மற்ற கேள்விகளுக்கு விடை கண்டு உங்களுக்கு அறிவிக்க முயல்வேன். நான் சிறு காகிதத் துண்டுகளில் குறிப்பு எழுதிக் கொள்கிறேன்... வேத வசனங்கள் மறந்து விடுகின்றன. நான் அறையில் படித்துக் கொண்டிருக்கும்போது, (அதை எங்காவது குறிப்பிட வேண்டுமென்றால்) அதை ஒரு காகிதத் துண்டில் எழுதி வைத்துக் கொள்கிறேன். அதை நான் கலைக் களஞ்சியத்திலிருந்து (encyclopedia)எடுத்துக் கொண்ட ஒரு பகுதியோ, அல்லது ஏதோ ஒரு சொல் அல்லது பெயராக இருக்குமானால், அது எனக்கு முன்பாக எழுதி வைக்கப்பட்டுள்ளதால், நிறைய புத்தகங்களை நான் கொண்டு வர வேண்டிய அவசியம் இருப்பதில்லை, அவைகளை எழுதி இங்கு வைத்திருக்கிறேன். 8இப்பொழுது, கேள்விக்கான விடை உங்களுக்கு திருப்தி அளிக்காமல் போனால், நல்லது. ஒருக்கால் நான் தவறு செய்திருக்கக் கூடும். பாருங்கள்? ஒருக்கால் நான் தவறு செய்திருக்கக் கூடும், ஏனெனில் என் அறிவுக்கு எட்டின வரைக்கும் இவைகளுக்கு விடையளிக்கப்படுகின்றன. இந்த கேள்விகளுக்கான விடைகளைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதகர்கள், அல்லது குறிப்பிட்ட சபையின் சபையோர் இதை அறிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். இதை நான் விரும்பவில்லை. இது உங்கள் போதகத்துக்கோ அல்லது உங்கள் சபையாருக்கோ பாதகம் விளைவிக்குமானால்; சபையோர் இதை தெளிவாக புரிந்து கொள்ள விரும்புகிறேன். அதாவது இது இந்த கூடாரத்தில் எங்கள் போதகமாயுள்ளது. இதை நான் எந்த குழுவினரின் மேலும் சுமத்த விரும்பவில்லை. என் இருதயத்தில் நான் கிறிஸ்தவனாயிருக்க விரும்புகிறேன், நான் விசுவாசிப்பதைப் போதிக்கிறேன். நான் எதை உறுதியாய் விசுவாசிக்கிறேனோ, அதில் நிற்கிறேன். அதன் பேரில் நான் ஒப்புரவானால், நான் கிறிஸ்துவுக்கு துரோகியாகவும், உங்களுக்கு மாய்மாலக்காரனாகவும் இருப்பேன். சத்தியம் எது என்று நான் விசுவாசிப்பதன் பேரில், நான் விசுவாசமுள்ளவனாய் நின்று கொண்டிருப்பது அவசியம். மற்ற ஒவ்வொருவருக்கும், அவ்விதமே செய்ய உரிமையுண்டு. தேவன் நம்மெல்லாருக்கும் நியாயாதி பதியாயிருக்கிறார். 9இப்பொழுது, நாம் தொடங்குவதற்கு, முன்பு ஒரு அருமையான வரலாற்றாசிரியரைக் குறிப்பிடலாம் என்று எண்ணினேன் - பால் பாய்ட். உங்களில் பலருக்கு அவரைத் தெரியும். அவர் இக்கூடாரத்துக்கு வருபவர். அவர் எருசலேமுக்குச் சென்றுஉலக சந்தையைக் கண்டு விட்டு, இப்பொழுது தான் திரும்பி வந்தார். அவர் தீர்க்கதரிசனப் போதகர், வரலாற்றாசிரியர், மிகச் சிறந்தவர்களில் ஒருவர். அவர் மென்னோனைட் குழுவைச் சேர்ந்த சகோதரன். அவர் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொண்டார். அவர் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பராகி விட்டார். நான் தீர்க்கதரிசனத்தைக் குறித்து கூறுபவைகளை மிகவும் கவனமாக குறிப்பெடுத்துக் கொண்டு, அது நிறைவேறுகிறதா என்று கவனித்து வருகிறார். அவர் எனக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார் (அவர் மறுபடியுமாக இப்பொழுது அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு வந்திருக்கிறார்), அது இன்று காலையில் அறிவிப்பு பலகையில் வைக்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். அவர் தலைசிறந்த தீர்க்கதரிசனங்களைக் குறித்து ஒரு செய்தித்தாளில் வெளியிட்டுள்ளதில், நான் முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கண்ட தரிசனங்களில் ஐந்தாம் தரிசனமாக கண்ட, விஞ்ஞானத்தின் சாதனை அல்லது முன்னேற்றத்தைக் குறித்து அவர் ஒரு குறிப்பு எழுதியிருக்கிறார். நான் கண்ட தரிசனங்கள் உங்களுக்கு நினைவிருக்கும், அவைகளை நீங்கள் எழுதி வைத்திருக்கிறீர்கள். அவைகளை நான் புத்தகங்களில் எழுதி வைத்திருக்கிறேன். கர்த்தர் என்னிடம் உரைக்கும் முக்கியமான, அல்லது ஜனங்களுக்கு கூறத்தக்க ஒவ்வொன்றையும் நான் எழுதி வைத்துக் கொள்வது வழக்கம். 10இன்று காலையில் நான் நினைத்தேன், நாம் தொடங்குவதற்கு முன்பு.... இது பிரசங்கம் அல்ல, நமது இருதயங்களில் என்ன உள்ளதென்று ஒருவரிடமிருந்து மற்றவர் கற்றுக் கொள்ள, இங்கு நாம் கூடி வந்திருக்கிறோம், சபை காலங்களின் வழியாக வந்துள்ள நாம். இவைகளை அலசிப் பார்த்து தெளிவுபடுத்திக் கொள்வோம். இப்படிப்பட்ட ஓரிரண்டு கூட்டங்களுக்காக இங்கு தங்கியிருந்து, ஜனங்களின் இருதயங்களில் என்ன உள்ளது என்பதைக் கண்டுகொள்வது நலமென்று எண்ணுகிறேன். பாருங்கள்? அதன் பிறகு நாம் தொடர்ச்சியான ஆராதனைகளுக்கு திரும்பிச் செல்லலாம். கர்த்தருக்கு சித்தமானால், கூடிய சீக்கிரத்தில், நீண்ட தொடர்ச்சியான ஆராதனைகளை இந்த கூடாரத்தில் வைக்க விரும்புகிறேன். நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்கு விளங்கும் - அதாவது வெவ்வேறு பொருள்களின் பேரில். அவர் எனக்காக வரும் வரைக்கும், அல்லது அவரைச் சந்திக்க நான் செல்லும்வரைக்கும், இவ்விதம் தொடர்ந்து சென்று கொண்டேயிருக்கலாம். பாருங்கள்? நான் 1993ம் ஆண்டில் கண்ட அந்த ஏழு தரிசனங்களைக் குறித்து பால் பாய்ட் இங்கு எழுதியிருக்கிறார். அவர் வரலாற்றாசிரியராதலால், அதை தொழில் நுட்பமாக, உன்னிப்பாக கவனித்து வருகிறார். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் என்பதையும் அவர் கவனிக்கிறார். அநேக ஆண்டுகளுக்கு முன்பாக உரைக்கப்பட்டவை நிறைவேறி வருவதையும் அவர் காண்கிறார். எவ்விதம் முசோலினி... அவனுக்கு என்ன நேரிடுமென்றும், ஹிட்லரைக் குறித்தும், அவனுக்கு என்ன நேரிடுமென்றும்; கம்யூனிஸம் எவ்வாறு பாசீசத்தையும் மற்றவைகளையும் மேற் கொள்ளும் என்றும்; சீக்ஃபிரிட் எல்லை எவ்வாறு கட்டப்பட்டு, அமெரிக்கர்கள் அங்கு படு தோல்வியடைவார்கள் என்றும் (இரண்டு ஆண்டுகள் முன்பு வரைக்கும் அவர்கள் அதை ஒத்துக் கொள்ளவில்லை, அந்த முற்றுகையைக் குறித்து ஜெர்மானிய படங்கள் உள்ளன; அவர்கள் உண்மையில் படுதோல்வி அடைந்தனர். அங்கு முழு சேனையையும் அவர்கள் இழந்தனர்); இன்னும் நடை பெற்ற மற்ற காரியங்களைக் குறித்தும். 11மேலும், “முடிவு காலம் வருவதற்கு முன்பு, மோட்டார் வாகனங்கள் முட்டை வடிவில் காணப்படும், அவை முட்டையைப் போல் அதிகமாகக் காணப்படும்” என்று உரைக்கப்பட்டது. ஒரு அமெரிக்க குடும்பம் நெடுஞ்சாலையின் வழியாக காரில் செல்வதைக் கண்டேன். அவர்கள் ஒருவருக்கொருவர் முகமுகமாய் உட்கார்ந்து கொண்டிருந்தனர். ஒரு மேசை இருந்தது, அவர்கள் 'செக்கர்ஸ்' விளையாட்டு, அல்லது சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த காருக்கு 'ஸ்டியரிங்' சக்கரம் இருக்கவில்லை. அது ஏதோ ஒரு சக்தியினால், 'ஸ்டியரிங்' சக்கரம் இல்லாமலேயே ஓடிக் கொண்டிருந்தது. இங்குள்ள எத்தனை பேர் அதை நான் தீர்க்கதரிசனமாக உரைத்ததை நினைவில் வைத்திருக்கிறீர்கள். இப்பொழுது, அந்த உலக சந்தையில், அவர்கள் அந்த விதமான காரை விற்பனைக்கு வைத்துள்ளனர். அது இப்பொழுது விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பெரிய நிர்வாகம் அப்படிப்பட்ட அநேக கார்களை வாங்கியுள்ளது. அந்த கார், இதோ இங்குள்ளது. பால் பாயிட்டுக்கு அந்த தீர்க்கதரிசனம் ஞாபகத்தக்கு வந்தது. நான் உரைத்ததை அவர் எழுதி வைத்துக் கொண்ட புத்தகத்தில்படித்து பார்த்தார். அவர் அந்த காரை புகைப்படம் எடுத்தார். அது அப்படியே முட்டை வடிவத்தில் உள்ளது. இரண்டு இருக்கைகள் இந்த பக்கமும், இரண்டு இருக்கைகள் அந்த பக்கமும் வைக் கப்பட்டு,. சீட்டு விளையாடுவதற்கு ஒரு மேசை நடுவில் வைக்கப்பட்டுள்ளது. 12கர்த்தருடைய வார்த்தை முற்றிலும் பிழையற்றது. அது 1933ல். அப்படியானால்... பார்ப்போம், கணக்கிட்டால் எத்தனை ஆண்டுகள்? முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இல்லையா? இது 1964ம் ஆண்டு. ஆம், முப்பத்து ... ஆம், முப்பத்தோரு ஆண்டுகளுக்கு முன்பு. முப்பத்தோரு ஆண்டுகளுக்கு முன்பு தேவன் அதை என்னிடம் கூறினார், இதோ அது இங்குள்ளது. இங்குள்ள நிர்வாகம் ஏற்கனவே அவைகளுக்கு 'ஆர்டர்' செய்து விட்டது. லாரி ஓட்டும் நிறுவனங்கள், அவைகளைப் போன்று லாரிகள் செய்து கொடுக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளன. அவர்கள் தங்கள் தலைமை அலுவலகத்தில் இருந்து கொண்டே அவைகளை இயக்கலாம். அவைகளுக்கு ஓட்டுநர் தேவையில்லை. இதோ அத்தகைய கார் ஏற்கனவே தயாராக்கப்பட்டு, மற்ற கார்களுடன் வைக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படம் பின்னால் உள்ள அறிவிப்பு பலகையில் வைக்கப் பட்டுள்ளது. நீங்கள் தரிசனத்தைப் படித்து, நம்முடைய தேவன் எவ்வளவு பிழையற்றவர் என்று காணலாம். எவ்விதம் அவருடைய வார்த்தை ... “வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தை ஒருபோதும் தவறுவதில்லை” என்று அவர் கூறியுள்ளார். பாருங்கள், முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு. உங்களுக்கு 1931 மாடல் கார் காண்பதற்கு எப்படியிருக்குமென்று தெரியும்; அது ஒரு நினைவுச் சின்னம் (relic) போல் காணப்படும். அந்த தரிசனத்தில், “அது முட்டையைப் போல் காணப்படும் முட்டையைப் போல் இருக்கும்” என்று உரைக்கப்பட்டது. நான் அப்பொழுது கூறினதைக் கேட்டவர்களில் எவருமே இங்கில்லை, அவர்கள் உயிரோடிருக்கவில்லை என்று நினைக்கிறேன். அது... காலங்கள் தோறும் நான் இதைக் குறித்து கூறி வந்ததை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். ஆனால்... ஆம், இங்கு ஒரு ஸ்திரீ உட்கார்ந்து கொண்டிருக்கிறாள், திருமதி வில்ஸன், உன்னை அங்கு நான் பார்க்கவில்லை. அது எப்பொழுது நடந்ததென்று ஞாபகமுள்ளதா? அந்த சமயத்தில் தான் அவள் சுகமடைந்தாள், அவள் காச நோயினால் மரித்துக் கொண்டிருந்தாள் (அந்த ஸ்திரீயும், அவள்கணவரும் மகளும் அவளுக்காக ஜெபம் செய்ய என்னிடம் வந்திருந்தனர்). அவள் இரத்தம் கக்கி, மூலையில் இரத்தம் தோய்ந்த தலையணை உறைகளும் மற்றவைகளும் நிறைந்திருந்தன. மருத்துவர் “அவளை பிழைக்க வைக்க ஒரு வழியும் இல்லை” என்று கூறிவிட்டார். அவள் மரிப்பதற்கு முன்பு ஏதோ ஒன்றை என்னிடம் கூற முயன்றாள், அப்பொழுது அவளுக்கு இருமல் உண்டாகி போர்வைகளின் மேலும் படுக்கை விரிப்புகளின் மேலும் இரத்தம் பீச்சிட்டு வெளி வந்தது. அவளை நான் படுக்கையிலிருந்து குளிர்ந்த நதிக்கு கொண்டு சென்று - அங்கு தண்ணீர் மிகவும் 'சில்லென்று இருந்தது - அவளுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுத்தேன். அது முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு. எத்தனையோ திடகாத்திரமான, ஆரோக்கியமுள்ள பிள்ளைகள் இவ்வுலகை விட்டு போய்விட்ட போது. அவள் இன்னும் உயிரோடிருந்து இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். பார்த்தீர்களா? “திகைப்பூட்டும் கிருபை அதன் தொனி எவ்வளவு இனிமையானது. என்னைப் போன்ற ஈனனை அது இரட்சித்தது! அது கர்த்தர் உரைக்கிறதாவது என்று இருக்குமானால், அது எவ்வளவாக பிழையின்றி நிறைவேறுகிறது என்பதைக் காண்பிக்கிறது. 13(சபையிலிருந்து ஒரு ஸ்திரீ சகோ. பிரான்ஹாமிடம் பேசுகிறாள் - ஆசி). ஆம், அது உண்மை , சகோதரியே. ஆம், ஐயா! ஸ்திரீகள்... கடைசி நாட்களில் ஸ்திரீகள் ஒழுக்கங்கெட்டவர்களாகி விடுவார்கள் என்று நான் கூறினேன். முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் எவ்விதம் உடுத்தனர் என்று உங்களுக்குத் தெரியும். அவர்கள் மிகவும் ஒழுக்கங்கெட்டவர்களாகி, முடிவில் அவர்கள் தெருக்களில் உள்ளாடைகள் மட்டும் அணிந்து நடப்பார்கள் என்று கூறினேன். மேலும் நான், “அவர்கள் மிகவும் அவ லட்சணமாகி, அத்தியிலையைப் போல் காணப்படும் ஒன்றை அணிந்து கொள்வார்கள்' என்றேன். அதை நான் கண்டேன், அவர்களுக்கு அது உள்ளது. அவர்கள் அதை அணிகின்றனர். பெண்களின் ஒழுக்கம் மிகவும் தாழ்ந்து, கீழ்த்தரமாகி... இதைக் காட்டிலும் இப்பொழுது நாம் தாழ்வடைய முடியாது; இதைக் காட்டிலும் நீங்கள் மோசமாக ஆக முடியாது. அவள் முடிவுக்கு வந்து விட்டாள். பாருங்கள், அவர்கள் முழுவதும் நிர்வாணிகளாக மாட்டார்கள். இல்லை, அவர்கள்.... ஒரு சிறு துணியும் உடுத்திராத பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கு நான் பிரசங்கித்திருக்கிறேன் - வாலிப ஆண்களுக்கும், வாலிப் பெண்களுக்கும், அவர்கள் எல்லோருக்கும். ஆனால் அவர்கள் நிர்வாணிகளென்று அறிந்திருக்கவில்லை. பாருங்கள்? அவர்களுக்கு அது தெரியவில்லை. இன்று ஸ்திரீ நடந்து கொள்ளும் விதத்தைக் காணும்போது... 14அன்றொரு இரவு நான் என் நண்பர்களில் சிலருடன் பேசிக் கொண்டிருந்தேன். நாங்கள் மலை பிரதேசத்தில் அப்பொது இருந்தோம். அங்கு ஒரு ஸ்திரீ... அவளுடைய குழந்தைக்கு அப்பொழுது தான் நான் ஜெபித்தேன், அதற்கு வலிப்பு இருந்தது. அது சுகமடைந்தது. ஒரு சிறு, ஏழை குடும்பம்; ஒரு பள்ளத்தில், வீட்டைச் சுற்றிலும் புகையிலை பயிரிடப்பட்டிருந்தது. அந்த வீட்டில் இரண்டு அறைகள் - ஏழு எட்டு பிள்ளைகள். அந்த ஸ்திரீ வேலை செய்கிறாள் (ஓ, என்னே!) - ஒரு பரந்த கோடாலியை வைத்துக் கொண்டு மரங்களை வெட்டுவதும், தோட்டங்களைப் பண்படுத்து வதும், பழங்களை டப்பியில் அடைப்பதும். அந்த ஏழை ஸ்திரீயை நான் பார்த்தேன் - ஒரே உடுப்பை அவள் ஓரிரண்டு ஆண்டுகளாக உடுத்தியிருக்கிறாள். அது கிழிந்து போயிருந்தது.... மேடாவின் உடைகள் சிலவற்றை அடுத்த வாரம் அவளுக்கு கொண்டு போகலாம் என்றிருக்கிறேன். ஒரு சில சகோதரர்களும் நானும் அங்கு நின்று கொண்டு, அந்த பெண் குழந்தைக்கு பாலூட்டுவதை கவனித்தோம். அவள் ஆடையிலிருந்து தன் மார்பகத்தை வெளியே எடுத்து, குழந்தைக்குப் பாலூட்டினாள். ஒரு நிமிடத்துக்கு அது எங்களுக்கு ஆச்சரியமாயிருந்தது; அவ்விதம் தான் என் தாய் எனக்குப் பாலூட்டினார்கள்! அது முற்றிலும் உண்மை . 15பட்டை போல் ஒன்றை உடுத்திக் கொண்டு மார்பகங்களை வெளியே தள்ள வைக்கும் ஸ்திரீகளைக் காட்டிலும் அப்படிப்பட்ட ஒரு ஸ்திரீயின் மேல் எனக்கு மதிப்பு அதிகம் உள்ளது. அவ்விதம் அவர்கள் செய்வதனால், மானிடரைப் போலவே காட்சியளிப்பதில்லை; அவ்விதம் செய்ய அவர்களுக்கு ஒரு நோக்கம் உண்டு; அது இன உணர்ச்சியை தூண்டுவதாயும், தேவபக்தியற்ற செயலாகவும் உள்ளது. இப்படிப்பட்டவைகளை ஒரு பெண் உடுத்தி, தனக்கு இல்லாததை இருப்பது போல் காட்சியளிப்பதென்பது... நான்..... உண்மையில் பெண்களுக்கு அவ்விதம் இருப்பதில்லை; அது ஒருவிதமான ஹாலிவுட் செயல். இன உணர்ச்சியின் மூலம் மனிதரைக் கவர செய்வதற்கென பிசாசின் ஆவிஇப்படிப்பட்ட ஸ்திரீகளின் மேல் இறங்குகின்றது. குழந்தைக்கு பாலுட்டவே பெண்களுக்கு மார்பகங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அது முற்றிலும் உண்மை . நாங்கள் கண்ட ஸ்திரீ பழங்குடியினர் வம்சத்தில் வந்தவள், ஆனால் அவள் சரியான முறையைக் கடைபிடிக்கிறாள். அத்தகைய ஒன்றுக்கு எனக்கு அதிக மதிப்புண்டு - அவ்விதம் செய்யும் ஒரு பெண்ணின் மேல். ஏனெனில் அவள் அப்படித் தான் அவள் தாய் அவளை வளர்த்தாள்.... அவர்கள் அதற்கு எவ்வித கவனமும் செலுத்துவதில்லை. நீங்கள் மடோனா படத்தில் காண்பதைப் போல் குழந்தைக்கு அங்கு பாலூட்டப்பட்டது. ஜனங்கள் மாத்திரம் தங்கள் சிந்தையை அவ்விதம் சரியாக்கிக் கொள்வார்களானால், அது வித்தியாசமாயிருக்கும். 16ஆனால் நீங்கள் அவ்வளவு ரவிக்கைகளையும் பட்டைகளையும் உடுத்து, அவைகளின் அளவை மிகைப்படுத்தி வெளியே செல்வீர்களானால், அது தேவபக்தியற்ற செயலாகவும் மனிதரைக் கவர்ச்சிக்கிறதுமாயிருக்கிறது... அது உன் மேல் தங்கியுள்ள பிசாசின் ஆவி என்பதை உணருகிறாயா? ஓ, ஆமாம்! சகோதரியே, அப்படி செய்ய விரும்பாதே. அவ்விதம் செய்யாதே; அது ஹாலிவுட்டின். செயலும் பிசாசின் கண்ணியுமாயுள்ளது. நீங்கள் அவ்விதம் செய்யும் போது, மனிதர் உங்களைக் குறித்து தவறான அபிப்பிராயம் கொள்ளும்படி அது செய்கிறது. நீங்கள் அவ்விதம் செய்யும்போது. அந்த மனிதனுடன் நீங்கள் விபச்சாரம் செய்த குற்றத்துக்கு ஆளாகின்றீர்கள். ஏனெனில் உங்களை நீங்கள் அந்த விதமாக அவனுக்குக் காண்பித்தீர்கள். உங்களுக்கு இயற்கையாகவே அந்த விதமான உருவமைப்பு இருக்குமானால், உங்களால் அதைக் குறித்து ஒன்றும் செய்ய முடியாது. தேவன் உங்களை உண்டாக்கின விதமாகவே இருங்கள். பாருங்கள்? நீங்கள் இல்லாத ஒன்றை இருப்பது போல் காண்பிக்காதீர்கள். மானிடரைப் போல இருங்கள். அது பயங்கரமானது! நல்லது. இது சிலர் கேட்டுள்ள கேள்விகளுக்கு ஒருக்கால் பதிலாக இருக்கக் கூடும். 17எங்கள் பிதாவே, நாங்கள் இயேசு கிறிஸ்துவுக்காகவும், நேராக உள்ள வார்த்தைக்காகவும், இன்று உமக்கு நன்றி செலுத்துகிறோம். அந்த வார்த்தைகளை நீர் பிழையின்றி நிறைவேற்றிக் கொண்டு வருவதை நான் காணும்போது, சத்தியத்திலும் சத்தியத்தின் ஒவ்வொரு வார்ததையிலும் நிலைத்திருக்க நான் அதிகமாக தீர்மானம் செய்யும்படி என்னைத் தூண்டுகிறது. எனவே பிதாவே, இக்காலை வேளையில் எங்களை, இந்த அருமையான ஜனங்களை, ஆசீர்வதிக்குமாறு ஜெபிக்கிறேன். இந்த ஒலிநாடா பலவிடங் களுக்கும் செல்லவிருக்கிறது என்றும், சற்று முன்பு நான் குறிப்பிட்டதை அவர்கள் கேட்பார்கள் என்றும் அறிந்தவனாய் .... அது முன்கூட்டியே தீர்மானம் செய்து குறிப்பிடப்பட்ட ஒன்றல்ல; என் இருதயத்தை நீர் அறிந்திருக்கிறீர்... அது அப்பொழுது தான் என் சிந்தையில் எழுந்தது. அதை நான் கூறவேண்டுமென்று நீர் விரும்பினீர் என்று நான் விசுவாசிக்கிறேன். அதை நான் கூறி விட்டேன், அது இப்பொழுது முடிந்து விட்டது. அது என் உறுதியான கருத்தும், நான் கூற வேண்டுமென்று நீர் விரும்பின் ஒன்றும் என்று முற்றிலும் விசுவாசிக்கிறேன். இதை இந்த தேசத்தின் எல்லாவிடங்களிலும், உலகம் முழுவதிலுமுள்ள தேசங்களிலும் கேட்கும் ஒவ்வொரு ஸ்தீரியும், தன் செயலைக் குறித்து வெட்கப்பட்டு, என்ன நடந்து விடுகிறது என்பதை அறிந்தவளாய், நற்பண்புள்ள பெண்ணைப் போல் உடுத்து, விபச்சாரம் செய்த குற்றத்துக்கு ஆளாகாதிருப்பாளாக! மனிதனைக் கவரும்படியாக அவளை நீர் அழகுள்ளவளாய் சிருஷ்டித்து, இரு வரும் ஒன்றாகும்படி நீர் செய்கிறீர், ஏனெனில் அவள் மனிதனிலிருந்து தோன்றியவள். ஸ்திரீயும் தன் அழகும் அவளுக்குள்ள தெல்லாம் தன் கணவருக்கே சொந்தம் என்பதை உணர வேண்டு மென்று வேண்டிக் கொள்கிறேன். பிதாவே, இதை அருளுவீராக. 18கேள்விகளுக்கு நாங்கள் இப்பொழுது விளக்கம் அளிக்கையில், எங்களுக்கு உதவி செய்யுமாறு கேட்கிறோம். இவைகளைக் குறித்து எங்களுக்கு போதிய அறிவு இல்லை. ஆனால் கர்த்தாவே, எங்களுக்கு போதுமானவராயிருக்கிற அந்த மகத்தான ஆவி வந்து அநேகருடைய இருதயங்களில் உள்ள கேள்விகளுக்கு பதிலளிப்பீராக! நீர் எங்களுக்கு இதுவரை கொடுத்துள்ளவை களுக்காக உமக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம்; சபை காலங்கள், முத்திரைகள் போன்றவைகளுக்காக... ஓ, அந்த மகத்தான காரியங்களில் நீர் எங்களுடன் எவ்வளவாக ஈடுபட்டீர்! கர்த்தாவே, அவை எங்களுக்கு மகத்தானதாய் உள்ளது, ஏனெனில் முடிவு காலம் நெருங்குவதை நாங்கள் காண்கிறோம். ஜனங்களின் இருதயங்களை நான் சோதனையிட்டால், அது உம்முடைய ராஜ்யத்துக்கு செழிப்பான செயலாயிருக்கு மென்று எண்ணினேன், அநேக சமயங்களில், சிந்தனைகளைப் பகுத்தறியும் போது, வெவ்வேறு காரியங்களைக் காண்பதால், அவர்களில் ஒருவர் பேரில் கவனம் செலுத்த முடிவதில்லை. எனவே அவர்கள் தங்கள் இருதயத்தில் உள்ளவைகளை எழுதி, அவர்கள் எழுதி அனுப்பும் காகிதத் துண்டில் உள்ளதை நான் உமக்கு அறிவித்தால், நீர் அவைகளுக்கு சரியான விடையளிப்பீர் என்று எண்ணினேன். கர்த்தாவே, நாங்கள் எல்லோரும் காத்திருக்கிறோம். கர்த்தாவே, எங்கள் சமுகத்தில் நீர் வந்து, உட்பாதையில் மேலும் கீழும் நடந்து, ஒவ்வொரு கேள்வியுடனும் உமது சித்தத்தின்படி ஈடுபடுவீராக. இயேசுவின் நாமத்தில் இதைக் கேட்கிறோம். ஆமென். (ஒலிநாடாவில் பதிவு செய்வதைக் குறித்து சகோ. பிரான்ஹாம் ஒரு சகோதரனுடன் பேசுகிறார் - ஆசி). 19நாம் தொடங்குகையில் மறுபடியுமாக இதைக் கூறுகிறேன், ஊழியக்காரர் அல்லது நாட்டின் பல்வேறு பாகங்களில் உள்ளவர்கள், இந்த ஒலிநாடாவைக் கேட்க நேர்ந்தால் (ஒலிநாடா சரியாயிருக்குமானால்), இவை இந்த கூடாரத்தைச் சேர்ந்த மக்களின் இருதயங்களில் எழுந்த கேள்விகள். இங்கு எங்களுக்கு ஸ்தாபனம் என்பதே கிடையாது, ஒருவரோடொருவர் ஐக்கியம் கொள்ளுதல் மட்டுமே. நம்முடைய கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்ட பிறகு, நாம் என்ன செய்ய வேண்டுமென்றும், நாம் இன்னும் சிறப்பாக எவ்விதம் வாழ வேண்டுமென்றும் அறிந்து கொள்ள இவை நமது சிந்தனைகளைத் தெளிவுபடுத்தும் என்று நம்புகிறேன். இந்த கேள்விகளை நான் படிக்கையில். அவை எனக்கு ஆசீர்வாதமாக இருந்தன என்பதை அறிந்திருக்கிறேன். கேள்விகள் இங்கு குவியலாக வைக்கப்பட்டுள்ளன. நான் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டேயிருந்து, 12.00 மணிக்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பாக முடித்து விடுகிறேன். அதன் பிறகு நாம் இன்று பிற்பகல் 6.30 மணிக்கு திரும்பவும் இங்கு வரலாம். 20என்னிடமுள்ள முதல் கேள்வி, ஐந்து கேள்விகள் வரிசையாக மஞ்சள் காகிதத்தில் தட்டெழுத்தில் எழுதப்பட்டுள்ளன என்று நினைக்கிறேன். மத்தேயு 24:19ல் உரைக்கப்பட்டுள்ள, “அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால் கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ” என்பதன் அர்த்தம் என்ன? வினோதமான காரியம் என்னவெனில், இந்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது என்பதை அறியாதவனாய், ஸ்தீரியைக் குறித்தஇதைப் பற்றி கூற வேண்டுமென்றிருந்தேன். இது இப்பொழுது முதலாம் கேள்வியாக அமைந்து விட்டது. இப்பொழுது மத்தேயு 24:19. இயேசுவிடம் மூன்று கேள்விகள் கேட்கப்பட்டன. இவையே அந்தக் கேள்விகள்: ஒரு கல்லின் மேல் ஒரு கல் இராதபடிக்கு இடிக்கப்படுதல் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும் உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? என்ற மூன்று கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன. அவர் மூன்று வெவ்வேறு விதங்களில் இவைகளுக்கு பதிலளிக்கிறார். ஒரு கல்லின் மேல் ஒரு கல் இராதபடிக்கு எப்பொழுது சம்பவிக்குமென்றும், அவருடைய வருகையின் அடையாளம் என்னவென்றும், உலகத்தின் முடிவைக் குறித்தும் அவர் அவர்களிடம் கூறுகிறார். அவர் எவ்வாறு பதிலளிக்கிறார் என்று நீங்கள் கூர்ந்து கவனிக்காமல் போனால், நீங்கள் குழப்பமடைந்து, இவையனைத்தையும் ஒரே காலத்தில் பொருத்தி விடுவீர்கள். அதன் விளைவாக உங்களுக்கு குழப்பம் உண்டாகும். 21இது எதிர்காலத்தில் நிகழவிருக்கும் ஒரு சம்பவம் என்று கருதும் ஏழாம் நாள் ஆசரிக்கும் நமது சகோதரரை அவமதிக்கும் வண்ணம் இதை நான் கூறவில்லை. ஏழாம் நாள் ஆசரிப்பு என்னும் பொருளுக்கு வருவோமானால்; “நீங்கள் ஓடிப்போவது மாரிக் காலத்திலாவது, ஓய்வு நாளிலாவது சம்பவியாதபடிக்கு வேண்டிக் கொள்ளுங்கள்” (மத். 24:20) என்னும் போது, அவர்கள் ஓய்வு நாளை ஆசரித்துக் கொண்டிருந்தனர் என்பது தெளிவாகிறது. அந்த சகோதரரை குற்றப்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல, அவ்விதம் செய்வது கிறிஸ்தவ பண்பாய் இராது. இதை தெளிவுபடுத்து தற்காகவே. பாருங்கள்? முழு கிறிஸ்தவ உலகமும் ஒரு மதிலுக்குள் எவ்விதம் ஒன்றாக கூடியிருக்க முடியும், அன்று போல் அவை திறக்கப் படாமலும் மூடப்படாமலும் எப்படி இருந்திருக்க முடியும்? பாருங்கள்? வெப்ப மண்டலத்தில் வாழ்பவர்களுக்கு அது கோடைகாலமானாலும் மாரி காலமானாலும், அதனால் என்ன வித்தியாசம்? பாருங்கள், அது இஸ்ரவேலருக்கு மட்டுமே. அந்த காலத்தில் தான் ஒரு கல்லின் மேல் ஒரு கல் இராமல் போகும்.... “அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால் கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ” (மத் 24:19). ஏனெனில் கர்ப்பவதிக்கு (பாருங்கள்?) ஓடிப்போவது கடினமாயிருக்கும், பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு ஓடிப்போவது கடினம். ஏனெனில் அவர்கள் எருசலேம் நகரத்தை விட்டு வெளி வந்து யூதேயாவின் மலைகளுக்கு ஓடிப் போக வேண்டும். 22இப்பொழுது, இதை தெளிவாக்க, இந்த ஒரு பொருளின் பேரில் நான் காலை முழுவதும் நிலைத்திருக்கக் கூடும். ஆனால் ஜனங்கள் புரிந்து கொள்ள முக்கியமான விஷயங்களை மட்டும் சொல்லி விட்டு, அதன் பிறகு அடுத்த கேள்விக்கு சென்றுவிடுகிறேன். இப்பொழுது, இயேசு அவர்களிடம் என்ன கூறினார் என்றால்... “எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரங்களை எடுப்பதற்கு நகரத்துக்கு திரும்பாதிருக்கக் கடவன்; அவனுடைய வீட்டிலிருந்து எதையும் எடுத்துக் கொள்ள நகரத்துக்கு திரும்பாதிருக்கக்கடவன், அவன் யூதேயாவுக்கு ஓடிப் போகக்கடவன்; ஏனெனில் உலகமுண்டானது முதல் இதுவரைக்கும் சம்பவித்திராத மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்” என்றார். அவையனைத்தும் ரோம தளபதியான தீத்து எருசலேமை முற்றுகையிட்டபோது நிறைவேறினது. அவர்கள் நகரத்தை சுட்டெரித்து, ஜனங்களைக் கொன்று போட்டு, இரத்த வெள்ளம் பெருக்கெடுத்து வாசல்களின் வழியாய் ஓடி, தெருக்களை அடைந்தது. அவன் அதை முற்றுகையிட்டான். அவன் எத்தனை ஆண்டுகளாக தன் சேனைகளுடன் நகரத்தைச்சுற்றிலும் பாளையமிறங்கி இருந்தான் என்று எனக்குத் தெரியவில்லை. ஜனங்கள், ஸ்திரீகள், தங்கள் சொந்த குழந்தைகளை சமைத்து தின்றனர். அவர்கள் மரங்களின் பட்டையையும், தரையில் விளைந்த புல்லையும் தின்றனர். அவர்கள் வார்த்தையை புறக்கணித்ததன் நிமித்தம் இது நடந்தது. அதுதான் அதற்கு காரணமாயிருந்தது. அதன் பிறகு... 23ஆனால் வார்த்தையை ஏற்றுக் கொண்டவர்கள் அந்த மகத்தான வரலாற்றாசிரியர் ஜோசியஸ் எழுதியுள்ளது போல... அவன் அவர்களை நரமாம்ச பட்சணிகள் (cannibals)என்றழைத்தான். அவர்கள் பிலாத்து சிலுவையில் அறைந்த நசரேயனாகிய இயேசு என்றழைக்கப்படும் ஒரு மனிதனின் உடலைத் தின்று கொண்டிருந்தனர் என்று கூறியுள்ளான். அவர்கள் இரவில் அவருடைய உடலைத் திருடிக் கொண்டு போய்விட்டார்கள் என்றும், அதைதுண்டுகளாக வெட்டிப் புசித்தனர் என்றும் அவன் கூறுகிறான். (அவர்கள் இராப்போஜனம் ஆசரித்தனர், பாருங்கள். அது அவர்களுக்குத் தெரியவில்லை). இன்று நம்மைக் குறித்தும் மற்ற கிறிஸ்தவர்களைக் குறித்தும் கட்டுக் கதைகள் நிலவி வருவதைப் போல், அக்காலத்தில் இப்படிப்பட்ட ஒரு கட்டுக்கதை பரவியிருந்தது. பாருங்கள்? அவர்கள் இத்தகைய காரியங்களைக் கூறுகின்றனர். ஆனால்.... ஆனால், அந்த ஜனங்கள்... “நீங்கள் ஓடிப்போவது மாரிக்காலத்தில் சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்” என்று கூறப்பட்டதன் காரணம், யூதேயா அப்பொழுது பனியினால் மூடப்பட்டிருக்கும். பாருங்கள். கிறிஸ்துமஸ்? பனி மூடியிருந்த அந்த மலைப் பிரதேசத்தில் இயேசு எவ்விதம் அக்காலத்தில் பிறந்திருக்க முடியும்? “நீங்கள் ஓடிப்போவது மாரிக்காலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, சம்பவியாதபடிக்கு வேண்டிக் கொள்ளுங்கள்”. ஏனெனில் ஓய்வு நாளில் எருசலேமின் வாசல்கள் மூடப்பட்டிருக்கும், அவர்கள் உள்ளே அவர்களுடைய கண்ணியில் அகப்பட்டுக் கொள்வார்கள். தீத்து வெள்ளிக்கிழமை பிற்பகலில் அங்கு அடைந்திருப்பான் என்றால், ஓய்வு நாளன்று அவர்கள் முற்றுகையிடப் பட்டிருப்பார்கள், ஏனெனில் வாசல்கள் மூடப்பட்டிருக்கும். வாசல்கள் ஓய்வு நாளில் மூடப்பட்டு அன்று திறக்கப்படாது. ஓய்வு நாளில் நகரத்துக்கு உள்ளே வருவதும் வெளியே போவதும் முடியாது. 24இப்பொழுது, என்ன நடந்ததென்று பார்த்தீர்களா? அவர், “அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால் கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ” என்று கூறினார் (பாருங்கள்?), ஏனெனில் தப்பித்து ஓடுவதென்பது... வரலாற்றின்படி, இயேசுவையும் வார்த்தையையும் விசுவாசித்த ஒருவராவது. அது எப்பொழுது நடக்கப் போகிறது என்பதை கவனிக்காமல் இருக்கவில்லை. அவர்கள் தப்பித்து, எருசலேமிலிருந்து யூதேயாவுக்குச் சென்றனர். அவர்கள் ஜீவன் தப்ப ஓடினர். அவர்களில் ஒருவராவது. ஏனெனில் அவர் கள் தங்கள் மேய்ப்பரால் எச்சரிக்கப்பட்டு, அந்த நேரம் வருவதற்காக காத்துக் கொண்டிருந்தனர். தீத்து வருகிறான் என்று அவர்கள் கேள்விப்பட்டவுடனே, அவர்கள் ஜீவன் தப்ப ஓடி, நகரத்தை விட்டு வெளியேறினர். 25இப்பொழுது, அடுத்த கேள்வி தொடர்கிறது. மத்தேயு 24:24: “கள்ளக் கிறிஸ்துக்களும் கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி, பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். இவர்களை நாம் எவ்விதம் அடையாளம் கண்டு கொள்ளலாம்? “எழும்புவார்கள்...' அப்பொழுது நீங்கள் வேறொரு காலத்துக்கு வருகிறீர்கள். பாருங்கள்? ”கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி....“ கள்ளக்கிறிஸ்து கள்ள அபிஷேகம் பெற்றவன், ஏனெனில் கிறிஸ்து அபிஷேகம் பண்ணப் பட்டவர். ”கிறிஸ்து என்றால் “அபிஷேகம் பண்ணப்பட்டவர்” என்று பொருள் என்று எத்தனை பேருக்குத் தெரியும்? கள்ள அபிஷேகம் பெற்றவர்கள் இருப்பார்கள், அவர்கள் தங்களை தீர்க்கதரிசிகள் என்று அழைத்துக் கொள்வார்கள். ஆனால் அவர்களை நீங்கள் எவ்விதம் அடையாளம் கண்டு கொள்வீர்கள்? வார்த்தையினாலேயே; அவர்கள் சரியா என்று வார்த்தையினால் நீங்கள் அறிந்து கொள்ள முடியும். அவர்களை நாம் எவ்வாறு அடையாளம் கண்டு கொள்வது? வார்த்தையினால் தான். அவர்கள். அவர்கள் வார்த்தையைக் கொண்டுள்ளதாக கூறிக் கொண்டு வார்த்தையை மறுதலிப்பார்களானால், அவர்கள் பிணியாளிகளை சொஸ்தமாக்கலாம். குருடரின் கண்களைத் திறக்கலாம். ஆனால் அவர்கள் வார்த்தையை மறுதலிப்பார்களானால், அதிலிருந்து விலகியிருங்கள். அது என்னவாயிருந்தாலும் கவலையில்லை, அந்த வார்த்தையில் நிலைத்திருங்கள் (பாருங்கள்?), ஏனெனில் “வூடு”, இன்னும் மற்ற மாந்திரீக சக்தியினால் சுகமாக்கப்படுதல் நடப்பதை நான் அநேக முறை கண்டிருக்கிறன். 26இக்காலை வேளையில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்துள்ள சகோ. சிட்னி ஜாக்சனும், சகோதரி ஜாக்சனும், இங்கு உட்கார்ந்திருக்கின்றனர். அவர் இங்கு நின்று கொண்டு அந்த பொருளை எடுத்துக் கொண்டு. மாந்திரீக சக்தியினால் நடைபெறும் சிலவற்றை உங்களுக்கு எடுத்துக் கூற முடியும். ஏன், நிச்சயமாக, ஜனங்கள் விக்கிரகங்களிடம் வந்து சுகமடைகின்றனர். பாருங்கள், ஏன்? அன்றொரு நாள் நான் பிசாசினால் சுகமளிக்க முடியாது என்று கூறினதைக் கேட்டு டாக்டர் ஹகர் என்பவர் என்னைப் பார்த்து கூச்சலிட்டார். அவர், “எத்தனையோ ஜனங்களுக்கு முன்பாக நிற்கும் நீர் பிசாசு சுகமளிக்க முடியாதென்று கூறுகிறீர். என் வீட்டின்அருகில் ஒரு ஸ்திரீ இருக்கிறாள். அவள் இடுப்பைச் சுற்றி ஒரு துணியைக் கட்டிக் கொண்டு அங்கு செல்கிறாள். அவளிடம் வரும் ஜனங்கள் அந்த துணியில் காசு போட வேண்டும். அவள் அவர்களைக் கையினால் தேய்த்து, அவளுடைய தலையிலிருந்து ஒரு மயிரைப் பிடுங்கி, அவர்களுடைய இரத்தக் குழாய்களிலிருந்து இரத்தத்தை எடுத்து அந்த மயிரில் பூசி, அவளுக்குப் பின்னால் அதை எறிந்து விடுகிறாள். அவள் பின்னால் பார்ப்பதில்லை, ஏனெனில் அவ்விதம் செய்தால் ஜனங்களுக்கு வியாதி திரும்ப வந்து விடுமாம். அவர்களில் முப்பது சதவிகிதம் குணமடைகின்றனர். அப்படியிருக்க பிசாசினால் சுகமளிக்க முடியாது என்று நீர் கூறுகிறீர்” என்றார். 27நான், “ஓ, என்னே!' என்று நினைத்துக் கொண்டேன். அவருக்கு நான் இவ்விதம் கடிதம் எழுதினேன்: ”அன்புள்ள ஐயா, ஒரு லூத்தரன் கல்லூரியின் தலைவர் தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாக ஒரு அனுபவத்தின் பேரில் தனது வேதசாஸ்திரத்தை ஆதாரமிடுவது விசித்திரமாயுள்ளது. பாருங்கள்? “சாத்தான் சாத்தானைத் துரத்துவதில்லை என்று வேதம் கூறுகிறது (மத்.12:26). அத்துடன் அது முடிவு பெறுகிறது. இயேசு அவ்விதம். கூறியுள்ளார். சாத்தான்... அப்படியானால் இந்த ஜனங்கள் அதன் மூலம், அந்த மந்திரவாதியின் மூலம் எவ்விதம் சுகம் பெறுகின்றனர் என்று நீங்கள் வியக்கலாம். ஏனென்றால், ஜனங்கள் அந்த மந்திரவாதியின் மூலம் தேவனை அணுகுவதாக எண்ணுகின்றனர். சுகம் பெறுதல் விசுவாசத்தை ஆதாரமாகக் கொண்ட ஒன்றேயல்லாமல், நீங்கள் எவ்வளவு நீதியுள்ளவர்கள் என்பதையோ, எவ்வளவு நல்லவர்கள் என்பதையோ, நீங்கள் எவ்வளவாக கற்பனைகளைக் கைக் கொள்கிறீர்கள் என்பதையோ ஆதாரமாகக் கொண்டதல்ல, அது விசுவாசத்தையே ஆதாரமாகக் கொண்டது. 'விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்'. பாருங்கள்? நீங்கள் எவ்வளவு நல்லவர்கள் என்பதை அது ஆதாரமாகக் கொண்டதல்ல. வேசிகள் மேடைக்கு வந்து உடனே சுகம் பெறுவதையும், பரிசுத்தவாட்டி ஒருத்தி மேடைக்கு வந்து அதை இழந்து போவதையும் நான் கண்டிருக்கிறேன். நிச்சயம்மாக, அது விசுவாசத்தை ஆதாரமாகக் கொண்டது. நீ விசுவாசித்தால், நீதியின் அடிப்படையில் அல்ல”. பிரான்சு நாட்டில் பாருங்கள், அவர்கள் அந்த ஸ்திரீயின் கோவிலுக்கு சக்கர நாற்காலிகளில் சென்று சுகமடைந்து. நடந்து திரும்பி வருகின்றனர். அது முழுவதும் மூடநம்பிக்கையைஆதாரமாகக் கொண்டது. இறந்து போன ஒருத்தியை தொழுது கொள்ளுதல் என்பது, இறந்தவரின் ஆவியுடன் தொடர்பு கொள்ளும் செயலாகும் (spiritualism).பாருங்கள்? இருப்பினும், அவர்கள் சுகமடைகின்றனர். ஏனெனில் அவர்கள் தேவனை அணுகுவதாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இப்பொழுது, கத்தோலிக்க மக்களை நான் தரம் குறைவாக பேசுவதாக எண்ண வேண்டாம், நான் கத்தோலிக்க முறையையே தரம் குறைவாகப் பேசுகிறேன், நான் பிராடெஸ்டெண்டு முறையையும் (பாருங்கள்?) மற்றவைகளையும், செய்வது போல. 28இப்பொழுது ஊழியக்காரரே, இது புண்படுத்தக் கூடும் என்று அறிகிறேன், ஆனால் நான் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நான் என் இருதயத்திலிருந்து சத்தியத்தை உங்களுக்கு எடுத்துரைக்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன் - கிறிஸ்துவுக்கு முன்பாக என் அறிவுக்கு எட்டின வரை. பாருங்கள்? அவையனைத்தும் மார்க்க முறைகளே. இந்த முறைகள் ஜனங்களை கட்டிப் போட்டுள்ளன. ஜனங்கள் சென்று மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், பெந்தெகொஸ்தே, கத்தோலிக்க ஸ்தாபனங்களை சேர்ந்து கொள்கின்றனர். இவ்விதமான ஒரு முறையின் மூலம் அவர்கள் தேவனை அணுகுவதாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர். தேவன் அதை சில வேளைகளில் மதித்து, அவர்களுடைய விக்கிரகங்களின் மூலமாக அவர்களுடைய வியாதியை அவர்களை விட்டு எடுத்துப் போடுகிறார். நல்லது, ஆப்பிரிக்காவின் பழங்குடி மக்கள் விக்கிரங்களின் மூலம் சுகம் பெறுகின்றனர் (பாருங்கள்?) ஆனால் அவர்கள் தேவனை அணுகுவதாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஒரு கத்தோலிக்க கன்னியாஸ்திரி, ஒரு கெட்ட ஸ்திரீயாயிருக்க விரும்பி, கத்தோலிக்க கன்னிமடத்தை சேருகிறாள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அவள் ஒரு நல்ல ஸ்தீரியாயிருப்பதற்கே அந்த கன்னிமடத்தை சேர்ந்து கொள்கிறாள். ஒரு மனிதன் கெட்ட மனிதனாக இருப்பதற்காக கத்தோலிக்க சபையைச் சேர்ந்து கொள்வதில்லை; ஒரு நல்ல மனிதனாக இருப்பதற்காகவே அங்கு போய் சேர்ந்து கொள்கிறான். நீங்கள் அவ்விதம் செய்வதில்லை. நல்லது. அது என்ன? என்று நீங்கள் கேட்கலாம். இந்தியாவிலுள்ள இந்தியர் கெட்டவர்களாக இருப்பதற்காக இந்து மதத்தைச் சேர்ந்து கொள்வதில்லை. 29நான் ஜைனரின் கோயிலுக்குச் சென்றிருந்த போது, அங்கிருந்த பூசாரி என்னைப் பேட்டி கண்டார். அவர் போப்பைப் போல், ஒரு பெரிய தலையணையின் மேல் உட்கார்ந்து கொண்டு, கால்களை மடக்கிக் கொண்டு, கால்விரல்களை கைகளினால் பிடித்துக் கொண்டிருந்தார். அவருக்கு நல்ல கண்பார்வை இருந்தது. அவர் கண்ணாடி இல்லாமலேயே தன் சொந்த கண்களால் 23ம் சங்கீதத்தை ஒப்பிட்டு, கால் அங்குலம் பரப்புள்ள இரும்புத் துண்டில் எழுதியுள்ளார். அதை எழுதுவதென்பது மனித புத்திக்கு எட்டாத ஒரு செயலாகும். அவர் தமது இயற்கை கண்களை உபயோகித்து அதை செதுக்கியுள்ளார். அவருக்கு நாற்பது வயது அல்லது அதற்கும் சற்று அதிகமாக இருக்கும். பாருங்கள்? ஏன் நிச்சயமாக, நீங்கள்... நீங்கள், இங்கேயே இருந்து கொண்டு, மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன் செய்பவைகளைக் கேள்விப்படுகிறீர்கள். நீங்கள் ஒரு முறை மிஷன் ஊழியக் களங்களுக்கு சென்று காண வேண்டும். உங்கள் கண்கள் திறக்கப்பட நீங்கள் காண வேண்டும். பாருங்கள், 30இப்பொழுது, அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிற ஜைன மத சகோதரிகளை எண்ணிப் பாருங்கள்; அவர்கள் சமைப்பதில்லை; அவர்கள் உண்பதில்லை; அவர்கள் பிச்சையெடுத்து பெற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் கைகளினால் சிறு துடைப்பானை (mop)உண்டாக்கி, தெருக்களிலிருந்து எறும்புகளையும் மற்றவைகளையும் பெருக்கித் தள்ளி விடுகின்றனர். ஏனெனில் அவர்கள் மறுஜென்மத்தில் (reincarnation)நம்பிக்கை கொண்டுள்ளனர்; ஒரு வேளை அவர்கள் தங்கள் பந்துக்களை மிதித்து விடக்கூடும். அவர்கள் எறும்புகளை மிதித்து விட மாட்டார்கள், ஈக்களை கொல்ல மாட்டார்கள், ஒன்றையும் செய்ய மாட்டார்கள். விரலுக்கு அறுவை சிகிச்சை செய்ய அவர்கள் ஒரு கத்தியை கூட தண்ணீரில் கொதிக்க வைக்க (Sterilizc)மாட்டார்கள். ஒரு கிருமியைக் கொல்லாமல், மனிதன் சாகும்படி விட்டு விடுவார்கள். அந்த கிருமி ஒருவேளை வேறு ஜென்மம் எடுத்த அவர்களுடைய உறவினனாய் இருக்கக் கூடும். பாருங்கள்? நீங்கள் மேலான , மேலான, மேலான ஜென்மம் எடுத்து முடிவில் மனிதனாகப் பிறந்து, பிறகு நல்ல மனிதனாக, நல்ல மனிதனாக ஆகி தெய்வமாகி விடுகிறீர்கள். இவ்விதம் மேலும், மேலும், மேலும் ஜென்மம் எடுக்கிறீர்கள். அவர்கள் கெட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக அவ்விதம் செய்வதில்லை. அவர்கள் உத்தமமாக அதைச் செய்கின்றனர்; ஆனால் பாருங்கள், “மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு” (நீதி. 14:12). ஜனங்களே, இன்று காலையில் இந்த கேள்விகளின் பேரில் வகுப்பாக கூடியுள்ள உங்களிடம் எனக்குக் கூறத் தெரிந்த ஒரே ஒரு காரியம் உண்டு, அது வார்த்தை, தேவனுடைய வார்த்தை. அப்பொழுது நீங்கள், இயேசு கிறிஸ்துவே அந்த வார்த்தை என்றும், அந்த வார்த்தை இப்பொழுது நமது மத்தியில் மாம்சமாகி, இந்தக் காலத்தில் அவர் என்ன செய்வாரென்று உரைத்துள்ளாரோ, அதை அப்படியே நிறைவேற்றிக் கொண்டு வருகிறார் என்பதை விசுவாசிப்பீர்கள். சரி, இப்பொழுது, அவ்விதம் தான் அவர்களைக் கண்டு கொள்வீர்கள், அவர்களுடைய சபையினால் அல்ல, அவர்களுடைய கோட்பாடுகளினால் அல்ல, அவர்களுடைய அடையாளங்களினால் அல்ல, அவர்களுடைய ஸ்தாபனங்களினால் அல்ல, எந்த சுகமாக்குதலினாலும் அல்ல, ஆனால் வார்த்தையினால். பாருங்கள்? 31மத்தேயு 24:26 (அடுத்த கேள்வி) “அறைவீட்டையும்” “வனாந்தரத்தையும் குறிப்பிடுகிறதே. அதன் அர்த்தம் என்ன? அதன் அர்த்தம் என்னவென்றால், அந்தக் கிறிஸ்துக்களும், கள்ள அபிஷேகங்களும் இருக்கும். இவர்கள் வார்த்தைக்கு விரோதமாய் இருப்பார்கள். இவர்கள் வனாந்திரத்தில் இருப்பார்கள், அறைவீட்டுக்குள் இருப்பார்கள். “அவர்கள் பின்னே போகாதிருங்கள். அவர்களிடமிருந்து விலகியிருங்கள்” என்று கூறப்பட்டுள்ளது. பாருங்கள்? 32இப்பொழுது நான்காம் கேள்வி: மத்தேயு 24:28 (அந்த நபர் தொடர்ந்து கீழே வந்து கொண்டிருக்கிறார். அவர் கையொப் பமிடவில்லை; ஆம், அவர் கையொப் பமிட்டிருக்கிறார். உங்கள் மன்னிப்பைக் கோருகிறேன். இந்தப் பெயர்களை நான் அறிவிக்கப் போவதில்லை, ஏனெனில் அது அவசியமில்லை. பாருங்கள்?) மத்தேயு 24:28: “பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும். பிணம் யார்? கழுகுகள் யார்? இப்பொழுது, அது ஒரு நல்ல கேள்வி, அதில் ஒன்றும் தவறில்லை. பிணம் என்பது எது? கழுகுகள் தின்பது தான் பிணம்.வேதத்தில் தீர்க்கதரிசி கழுகாகக் கருதப்படுகிறான். தீர்க்கதரிசி தான் கழுகு. தேவன் தம்மை கழுகென்று அழைத்துக் கொள்கிறார். விசுவாசிகளாகிய நாம் கழுகுக் குஞ்சுகள். பாருங்கள்? அவர்கள் தின்னும் பிணம் எது? வார்த்தை. வார்த்தை எங்கெல்லாம் உள்ளதோ, அங்கு பறவையின் இயல்பு வெளியரங்கமாகும். பாருங்கள்? கழுகுக்கு புது மாம்சம் தேவை. அது ஒரு பருந்து அல்ல (பாருங்கள்?), அது ஒரு கழுகு. அதற்கு நீங்கள் ஸ்தாபன பொருளை தின்னக் கொடுக்க முடியாது; அதற்கு கழுகின் ஆகாரம் தேவைப்படுகிறது. அதுதான் மிகவும் புதிய மாம்சம், மோசே செய்தது அல்ல, வேறு யாரோ செய்தது அல்ல, சாங்கி, ஃபின்னி, நாக்ஸ், கால்வின் ஆகியோர் செய்தது அல்ல, ஆனால் இப்பொழுது. இந்த நாளுக்கென கொல்லப்பட்ட மாம்சம். அதுதான் இந்த வார்த்தையை உறுதிப்படுத்துவதற்கென்று மரித்த கிறிஸ்துவின் ஒரு பாகமாயுள்ளது. அதை தான் அவர்கள் புசிக்கின்றனர். புரிகிறதா? பாருங்கள், பாருங்கள்? 33நோவா செய்தது அல்ல, மோசே செய்தது அல்ல, அவை திருஷ்டாந்தங்கள். அவர்கள் என்ன செய்தனர் என்று நாம் படித்துக் கண்டு கொள்கிறோம். ஆனால் அவர் இப்பொழுது என்ன செய்வதாக வாக்களித்துள்ளார் என்பதே காரியம். அவர் முன் காலத்தில் அங்கு வார்த்தையாயிருந்தார்; அது அந்நாளுக்கான பிணம். வெஸ்லியின் காலத்தில் அது அந்நாளுக்கான பிணமாயிருந்தது. லூத்தரின் காலத்தில் அது அந்நாளுக்கான பிணமாயிருந்தது. ஆனால் நாம் அதற்கு செல்வதில்லை. அது ஏற்கனவே கெட்டுப்போய் விட்டது. மீதமுள்ளது சுட்டெரிக்கப்பட வேண்டும், இராப்போஜனப் பொருட்களும் கூட, அதை அடுத்த சந்ததிக்காக விட்டு வைப்பதில்லை. நீங்கள் இராப்போஜனத்தில் பங்கு கொள்ளும் போது, மீதியானதை அடுத்த நாள் காலை வரைக்கும் கூட விட்டு வைக்கக் கூடாது. அதை சுட்டெரிக்க வேண்டும் என்று வேதம் உரைக்கிறது. எனவே முன்பு நடந்ததைக் குறிப்பிடுவதா? இல்லை, ஐயா! நமக்கு இன்று புது ஆகாரம் உள்ளது. அது தான் இந்நேரத்துக்கென வாக்களிக்கப்பட்டு இந்நேரத்தில் வெளிப் பட்டுள்ள வார்த்தை . அங்கு தான் கழுகுகள் கூடுகின்றன, அங்கு தான் பிணம் உள்ளது. அதன் பேரில் நாம் நீண்ட நேரம் நிலைத் திருக்க முடியும், ஆனால் நான் கூறுவதன் அர்த்தத்தை நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என்று நிச்சயமுடையவனாய் இருக்கிறேன். 34சரி, ஐந்தாம் கேள்வி. எடுத்துக் கொள்ளப்படுதலின் போது மணவாட்டி ஓரிடத்தில் ஒன்றாக கூடியிருப்பாளா, அது மேற்கு பாகத்தில் இருக்குமா? 55, இல்லை, அது அங்கு இருக்க வேண்டியதில்லை. ஆம், மணவாட்டி ஓரிடத்தில் ஒன்றாக கூடியிருப்பாள் என்பது உண்மையே, ஆனால் உயிர்த்தெழுதல் வரைக்கும் அது நடக்காது - பாருங்கள் “கர்த்தருடைய வருகை மட்டும் உயிரோடிருக்கும் நாம். எபேசியர் 2 தெசலோனிக்கேயர் 5ம் அதிகாரம் என்று நினைக்கிறேன். ”கர்த்தருடைய வருகை மட்டும் உயிரோடிருக்கும் நாம் (உலகம் பூராவிலும்) நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக் கொள்வதில்லை (அவர்களைத் தடை செய்வதில்லை). தேவ எக்காளம் முழங்கும், அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் அவர்களோடே கூட எடுத்துக் கொள்ளப்பட்டு, கர்த்தரை ஆகாயத்தில் சந்திப்போம்“ (1 தெச. 4:15-17). எனவே, கர்த்தரைச் சந்திக்கச் செல்லும் போது, மணவாட்டி ஒன்று கூடியிருப்பாள். பாருங்கள்? அவள் ஒன்று கூடியிருப்பாள். ஆனால் அவர்கள் எல்லோரும் இது போல் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஏனெனில் மணவாட்டி உலகம் சுற்றிலும் - ஆர்டிக் பிரதேசம் தொடங்கி வெப்பமான தேசம் வரையிலும், கிழக்கிலிருந்து மேற்கு வரையிலும், வடக்கிலிருந்து தெற்கு வரையிலும் - பூமியின் தூளில் நித்திரை செய்து கொண்டிருக்கிறாள் 35“மனுஷகுமாரன் வரும் போது, அது கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிற மின்னல் போல் இருக்கும்” என்று இயேசு கூறியுள்ளார். முழு விஷயமே, உயிர்த்தெழுதல் இருக்கும், எடுத்துக் கொள்ளப்படுதல் இருக்கும். அவள் இங்கிருந்து போய் விடுவாள். அவரைச் சந்திக்க அவள் போவதற்கு முன்பு... கர்த்தருடைய ஞானத்தைக் கவனியுங்கள். இப்பொழுது, உதாரணமாக, இதை கூறும் போது... கிருபையின் நினைவுகள் மூலமாகவும், வார்த்தையில் கொண்டுள்ள விசுவாசத்தின் மூலமாகவும், நான் “நாம்” என்று கூறுகிறேன். நான் உங்களோடு கூட என்னையும் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவின் சரீரத்துடன் இணைத்துக் கொள்கிறேன். அதை நான் விசுவாசிக்கிறேன். நான் “நாம்” என்று கூறும் போது கிருபையினால் அதை விசுவாசிக்கிறேன். அவருடைய கிருபையினால், எடுத்துக்கொள்ளப்படும் அந்த மக்களில் நாமும் இருப்போம் என்று நான் விசுவாசிக்கிறேன். 36நாம் உயிர்த்தெழும் போது, முதலாவது நடப்பது என்னவெனில்.. உயிரோடிருப்பவர்கள் இங்கிருப்பார்கள். முதலாவதாக உயிர்த்தெழுதல் நிகழும், நித்திரையடைந்தவர்களின் உயிர்த்தெழுதல். நித்திரையிலுள்ளவர்களை தட்டி எழுப்பும் நேரம் ஒன்றிருக்கும். இப்பொழுது பூமியின் தூளில் நித்திரை செய்து கொண்டிருப்பவர்கள் - பாவத்தில் நித்திரை செய்து கொண்டிருப்பவர்கள் அல்ல, அவர்கள் தொடர்ந்து நித்திரை செய்து கொண்டிருப்பார்கள். இன்னும் ஆயிரம் ஆண்டு காலம் வரைக்கும் அவர்கள் தொடர்ந்து நித்திரையிலிருந்து எழும்புவதில்லை. ஆனால் கிறிஸ்துவுக்குள் மரித்து பூமியின் தூளில் நித்திரை செய்து கொண்டிருப்பவர்கள் முதலில் நித்திரையிலிருந்து எழுப்பப்படுவார்கள். அவர்கள் - இந்த அழிவுள்ள சரீரங்கள் கர்த்தருடைய எடுத்துக்கொள்ளப்படும் கிருபையினால் அழியாமையைத் தரித்துக் கொள்ளும். அதன் பிறகு நாம் எல்லோரும் ஒன்று கூடுவோம். அவர்கள் ஒன்று கூடத் தொடங்கும் போது, உயிரோடிருக்கிற நாம் மறுரூபப்படுவோம். இந்த அழிவுள்ள சரீரங்கள் மரணத்தைக் காண்பதில்லை. ஆனால் சடுதியாக, நம்மை வேகமாக அடித்துக் கொண்டு செல்வது போன்ற ஒன்று உண்டாகும். அப்பொழுது நீங்கள் மறுரூபமடைவீர்கள். நீங்கள் ஆபிரகாமைப் போல், வயோதிபனிலிருந்து வாலிபனாகவும், வயோதிப ஸ்திரீயிலிருந்து வாலிப ஸ்திரீயாகவும் மாறி விடுவீர்கள். இந்த சடுதியான மாற்றம் என்ன? சற்று கழிந்து நீங்கள் சிந்தனையைப் போல் பிரயாணம் செய்வீர்கள். அப்பொழுது நீங்கள் ஏற்கனவே உயிர்த்தெழுந்தவர்களை காண முடியும். ஓ, என்ன ஒரு நேரம்! அதன் பிறகு நாம் அவர்களுடன் ஒன்று சேர்ந்து, அவர்களோடு கூட எடுத்துக் கொள்ளப்பட்டு, கர்த்தரை ஆகாயத்தில் சந்திப்போம். 37உங்கள் 'அங்கிள்' தென் கென்டக்கியில் அடக்கம் பண்ணப்பட்டிருந்தால், அவர் இந்தியானாவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றோ, அல்லது இந்தியானாவில் அடக்கம் பண்ணப்பட்டிருந்தால், தென் கென்டக்கிக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றோ அவசியமில்லை. அவர் எங்கிருந்தாலும்... கடலில் மரித்தவர் கடலிலிருந்து எழுந்திருப்பார்கள். விளையாட்டு அரங்கத்தில் சிங்கங்களினால் புசிக்கப்பட்டு அழிக்கப்பட்டவர்களும், அக்கினி சூளையில் போடப்பட்டு எலும்புகளும் கூட சாம்பலானவர்களும், உயிரோடெழும்புவார்கள். அவர்கள் ரோமாபுரியில் இருந்திருந்தாலும், ரோமாபுரியிலுள்ள விளையாட்டு அரங்கத்தில் இருந்திருந்தாலும், அல்லது தென் பாகத்திலுள்ள வெப்பமான காடுகளில் இருந்திருந்தாலும், அல்லது பனி உறைந்துள்ள வடக்கு பாகத்தில் இருந்திருந்தாலும், அவர்கள் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து, மருரூபமடைந்து மேலே கொண்டு வரப்படுவார்கள். உயிரோடிருப்பவர்கள் ஒரு நொடிப் பொழுதில், ஒரு கண் இமைப் பொழுதில் மறுரூபமடைந்து, அவர்களோடு கூட எடுத்துக் கொள்ளப்படுவார்கள். 38ஆப்பிரிக்காவின் ஊழியக்களத்தில் மரித்துப்போன மிஷனரிமார்களைப் பாருங்கள். வடக்கிலுள்ள பனி உறைந்த இடங்களில் மரித்துப் போனவர்களைப் பாருங்கள். விளையாட்டு அரங்கங்களிலும், உலகம் முழுவதிலும், காங்கோ பிரதேசத்திலும் மரித்துப் போனவர்களைப் பாருங்கள். அவர்கள் எல்லாவிடங்களிலும் மரித்தனர் - சீனாவில், ஜப்பானில், உலகெங்கிலும், கர்த்தருடைய வருகை உலகம் முழுவதற்கும்; எடுத்துக் கொள்ளப்படுதல் உலகம் முழுவதும் சம்பவிக்கும். நேரம் மாற்றத்தைக் கவனியுங்கள். படுக்கையில் இரண்டு பேர் இருப்பார்கள்; நான் ஒருவனை எடுத்துக் கொண்டு மற்றவனை விட்டு விடுவேன். அதே நேரத்தில், “இரண்டு பேர் வயலில் இருப்பார்கள்: நான் ஒருவனை எடுத்துக் கொண்டு மற்றவனை விட்டு விடுவேன். ஒன்று பூமியின் இருளான பக்கம், மற்றது பூமியின் வெளிச்சமான பக்கம். பாருங்கள்? அது உலகம் முழுவதும் நடக்கப் போகும் எடுத்துக் கொள்ளப்படுதல். ஆம், சபையானது ஒன்று கூடியிருக்கும். ஆனால் அது உயிர்தெழுதலும் எடுத்துக் கொள்ளப்படுதலும் நிகழ்ந்த பிறகு. நீங்கள் அந்த விதமாக அதை காணவில்லை என்றால், அதனால் பரவாயில்லை. அதை நான் சரியாக கூறவில்லை; இதை நாம் ஒலிநாடாவில் பதிவு செய்கிறோம். பாருங்கள்? வேறு ஊழியக்காரர்கள் இதனுடன் ஒருவேளை இணங்காமலிருக்கலாம். அதனால் பரவாயில்லை. 39அன்புள்ள சகோ. பிரான்ஹாமே, என் கேள்வி ஞானஸ்நானத்தின் பேரில் ஒருவன் எப்பொழுது இரட்சிக்கப் படுகிறான்? ஒருவன் விசுவாசிக்கும் போது தான் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நாம் தண்ணீர் ஞானஸ்நானம் பெறாமலிருந்தாலும், அப்.10:47ல் கொர்நேலியுவின் விஷயத்தில் நடந்தது போல, நாம் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வோமானால் இரட்சிக்கப்படுவதாக சிலர் கூறுகின்றனர். தமஸ்குவுக்குப் போகும் வழியில் பவுல் இரட்சிக்கப்பட்டதாக சிலர் கூறுகின்றனர், ஆனால் அதற்கு மூன்று நாட்களுக்குப் பிறகும் அவனுடைய பாவங்கள் அவனில் குடி கொண்டிருந்ததாக அப். 22:16 உரைக்கிறது. கொர்நேலியுவைப் போல ஒருவன் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டு, அவன் தண்ணீர் ஞானஸ்நானம் பெறாததால் அவனுடைய பாவங்கள் அவனில் நிலைத்திருக்க வாய்ப்புண்டா? ஒருவன் பரிசுத்த ஆவியைப் பெற்றும் கூட தண்ணீர் ஞானஸ்நானம் பெறாமல் பரலோகத்துக்குப் போக முடியாதா? இப்பொழுது, என் விலையேறப் பெற்ற நண்பரே... இப்பொழுது இந்த சகோதரன் கையொப்பமிட்டிருக்கிறார். இவரை எனக்குத் தெரியாது, ஆனால் அவர் கையொப்பமிட்டிருக்கிறார். நான் பெயர்களை அறிவிக்கப்போவதில்லை, ஏனெனில் அது அவசியமில்லை; பெயர்களை அறிவித்தால், மற்றவர்கள் அவர்களிடம் சென்று, “நல்லது. நான் இதில் அதில் உங்களுடன் இணங்க முடியாது” என்று கூறுவார்கள். பாருங்கள்? நான் எந்த ஒரு பெயரையும் அறிவிக்கமாட்டேன். பெரும்பாலான கேள்விகளில் கையொப்பமிடப்பட்டுள்ளது, ஆனால் அது நான் யாரென்று அறிந்து கொள்வதற்காக மட்டுமே. பாருங்கள்? இவைகளை நான் வைத்துக் கொள்ள, இங்கு வைத்து விடுகிறேன். சில கேள்விகள் நீல நிறத் தில் எழுதப்பட்டுள்ளன, சில கேள்விகள் தட்டெழுத்தில் உள்ளன, வெவ்வேறு விதங்களில் இங்கு முதலாவது கேள்வி: “நீங்கள் எப்பொழுது இரட்சிக்கப்படுகிறீர்கள்?' அதை தொடர்ந்து, ”தண்ணீர் ஞானஸ் நானம் பெறாமல் பாவங்கள் போக்கப்படக் கூடுமா, ஏனெனில் கொர்நேலியுவும் அவன் வீட்டாரும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்ட போது, அவர்கள் அப்பொழுது ஞானஸ்நானம் பெற்றிருக்கவில்லையே“ பவுல் தமஸ்குவுக்குப் போகும் வழியில் தன் அனுபவத்தைப் பெற்றுக் கொண்ட பிறகும், அவன் தண்ணீர் ஞானஸ்நானம் பெறும் வரைக்கும் அவனுடைய பாவங்கள் அவனில் குடி கொண்டிருந்தது; ஏனெனில் வசனம் என்ன கூறுகிறதென்றால் (நான் உறுதியாக அறிந்து கொள்வதற்காக இந்த வசனங்களையெல்லாம் படித்துப் பார்த்தேன்). அது அப்படித்தான்... அனனியா பவுலிடம் ”நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொண்டு ஞானஸ்நானம் பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படும் என்றான், 40அதன் பிறகு, “பரிசுத்த ஆவியின் அபிஷேகம்... ஒருவன் அதைப் பெற்றுக் கொண்டு, தண்ணீர் ஞானஸ்நானம் பெறாததால் அவனுடைய பாவங்கள் அவனில் நிலைத்திருக்க வாய்ப்புண்டா?” “ஒருவன் பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்த போதிலும் பரலோகத்துக்கு செல்வதை நிச்சயப்படுத்திக் கொள்ள தண்ணீர் ஞானஸ்நானம் பெற வேண்டுமா?” இப்பொழுது, நான் நினைக்கிறேன். ... இப்பொழுது, இந்த சகோதரனை எனக்குத் தெரியாது, இது மிகவும் நல்ல, புத்திசாலித்தனமான கேள்வி. இதை நாம் விரிவாகக் காண வேண்டும், ஏனெனில் இவைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டியது முக்கியமானதாகும். பாருங்கள்? 41இப்பொழுது, நான் நம்புவது என்னவெனில், இந்த சகோதரன் இது தான் உண்மை என்று என்னிடம் கூறுகிறார். அல்லது அது உண்மையென்று என்னைக் கூற வைக்கிறார். (அவர் ஒருக்கால் அவ்விதம் விசுவாசிக்கக் கூடும், எனக்குத் தெரியாது). இது வார்த்தையின் பேரில் உள்ள உண்மையான விசுவாசத்துக்கு சிறிது முரணாக உள்ளதென்று நினைக்கிறேன். நான் ... இந்த சகோதரன் அவ்விதம் கூறுவது போல் தோன்றுகிறது - இப்பொழுது, அதனால் பரவாயில்லை, சதோதரனே; நீங்கள் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கக்கூடும்; அது அருமையானது. இது ஒரு நல்ல கேள்வி என்று எண்ணுகிறேன். இதை நீங்கள் எழுதிக் கேட்டதற்காக எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இப்பொழுது, பாருங்கள்? மறு ஜென்மத்துக்காக (regeneration)தண்ணீர் ஞானஸ்நானம் கொடுப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை (பாருங்கள்?), ஏனெனில் நீங்கள் அவ்விதம் செய்யும் போது, அது இரத்தத்தை அகற்றி விடுகிறது. பாருங்கள்? மறு ஜென்மம் நடந்துள்ளது என்பதைக் காண்பிக்கவே நீங்கள் தண்ணீர் ஞானஸ்நானம் பெறுகிறீர்கள். பாருங்கள்? அது மறுஜென்மம் அடைந்ததற்கு வெளிப்படையான அடையாளம். முழுகாரியமே முன் குறித்தலை ஆதாரமாகக் கொண்டுள்ளது. பாருங்கள்? ஆனால் யார் இரட்சிக்கப்படுவார்கள், யார் இரட்சிக்கப்பட மாட்டார்கள் என்று நமக்குத் தெரியாது; எனவே நாம் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறோம். 42மறு ஜென்மம் அடைதல் என்னும் விஷயத்தில், எனக்கு ஒருத்துவ சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை உண்டு. இந்த கேள்விகளின் ஒலி நாடாவை கேட்கும் ஒருத்துவ சகோதரரே, இது உங்கள் அலுவலகத்திலோ, அல்லது உங்கள் வீட்டிலோ, அல்லது ஒருத்துவ சகோதரரின் மத்தியிலோ கிடைக்க நேரிட்டால், என்னைத் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். ஏனெனில் இவ்விஷயத்தில் நாம் கருத்து வேற்றுமை கொண்டுள்ளோம். 69, எனக்கும் என் மனைவிக்குமிடையே கருத்து வேற்றுமை உண்டு; நிச்சயமாக எங்களுக்கு உண்டு. அவளை நேசிப்பதாக நான் அவளிடம் கூறினால், அவள் அதை நம்ப மாட்டேன் என்கிறாள். எங்களுக்கிடையே நிச்சயம் கருத்து வேற்றுமை காணப்படுகிறது, ஆனால் நாங்கள் நன்றாகத்தான் ஒன்று சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்பொழுது கவனியுங்கள், அவளை நான் நேசிக்கிறேன் என்பதற்கு நான் போதுமான அறிகுறிகளை அவளுக்கு காண்பிக்காமல் இருக்கக் கூடும்... நான் வெளியே சென்று பிரசங்கித்து, பின்பு வீடு திரும்பி, தூண்டிலை எடுத்துக் கொண்டு, மீன் பிடிக்கச் சென்று விடுகிறேன். பாருங்கள்? ஆனால் என் இருதயத்தின் ஆழத்தில் அவளை நான் நேசிக்கிறேன்; அவளை விட்டு பிரிந்திருக்க எனக்கு நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அவ்வளவுதான். இப்பொழுது, இதை கவனிப்பீர்களானால்... நமக்கு கருத்து வேற்றுமை இருக்குமானால், அதனால் பரவாயில்லை. ஆனால் பாருங்கள். தண்ணீர் பாவங்களைப் போக்குவதில்லை; அது நல் மனச்சாட்சியை வெளிப்படுத்தும் ஒன்றாயுள்ளது. 43இப்பொழுது, நான் நினைக்கிறேன், பவுல் அங்கு ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டதன் காரணம் என்னவெனில், வேதத்தின்படி, நாம் அதிகாரப்பூர்வமாக ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் இந்த சம்பவத்துக்கு உங்களைக் கொண்டு செல்ல விரும்புகிறேன்; கள்ளன் சிலுவையில்தொங்கின போது... அவன் ஞானஸ்நானம் பெறாமலேயே மரித்தான், இருப்பினும் இயேசு அவனை அந்த நாளில் பரதீசில் சந்திப்பார் என்னும் வாக்குத்தத்தத்தை அவன் பெற்றுக் கொண்டான் - இழக்கப் பட்டோரின் இடத்தில் அல்ல! ஏனெனில் முதன் முறையாக அவனுக்கு அந்த தருணம் அளிக்கப்பட்டது. கொர்நேலியுவின் வீட்டில் இருந்தவர்கள் வசனத்தை சந்தோஷமாய் ஏற்றுக் கொண்டபோது, அவர்களுடைய இருதயங்கள் அதே நிலையில் இருந்தன என்று நான் நம்புகிறேன். பரிசுத்த ஆவியானவர் அந்த வார்த்தையை உயிர்ப்பித்தார். அது அவர்களுக்கு உயிர்ப்பிக்கப்பட்டது. ஆகையால் தான் பரிசுத்த ஆவியானவர் அந்நிய பாஷையில் பேசவும் தீர்க்கதரிசனம் உரைக்கவும் செய்கிறார். ஏற்றுக் கொள்ள விருப்பமுள்ள ஜனங்களின் இருதயங்களில் வார்த்தை விழுந்தது - அவர்கள் இயற்கைக்கு மேம்பட்டவைகளைக் கண்ட பிறகு. அது தான் இன்றைக்கு நாம் வாழும் இந்த நேரத்தில் எனக்கு புதிராக உள்ளது. அங்கு கூடியிருந்த ரோமர்களும் கிரேக்கர்களும், தரிசனம் நிச்சயமாக நிறைவேறினதை அவர்கள் கண்ட பிறகு, பரிசுத்த ஆவி அவர்களுடைய இருதயங்களில் உணர்ச்சியூட்டி, பேதுரு இந்த வார்த்தைகளைப் பேசிக் கொண் டிருக்கையில், பரிசுத்த ஆவி அவர்கள் மேல் விழுந்தார். பாருங்கள்? 44உதாரணமாக... பாருங்கள், கொர்நேலியுவிடம், “சீமோனை அழைப்பி' என்று கூறப்பட்டது. அவன் நூற்றுக்கு அதிபதி. அவன் நூறு பேர்களுக்கு மேல் அதிகாரம் வகித்தான். அவன் ரோம் நூற்றுக்கதிபதி. அவன் ஜெபித்துக் கொண்டிருந்த போது ஒரு தரிசனத்தைக் கண்டான். ஒரு தேவதூதன் அவனிடத்தில் வந்தான். அவன் ஒரு நல்ல மனிதன். அந்த தூதன் அவனிடம், ”நீ யோப்பா பட்டினத்துக்குப் போ. அங்கே தோல் பதனிடுகிறவனாகிய சீமோன் என்பவனிடத்தில் சீமோன் பேதுரு என்னும் பெயர் கொண்ட ஒருவன் தங்கியிருக்கிறான். அவன் மேல் வீட்டில்... அவனை அங்கு காண்பாய். அவன் வந்து வார்த்தையை உனக்குச் சொல்லுவான்“ என்றான். நல்லது. அந்த தரிசனம் மிகவும் தத்ரூபமாக இருப்பதாக அவன் எண்ணினான். “நான் உறங்கிய நிலையில் இருந்திருக்க முடியாது. நான் அந்த தேவதூதனை நேருக்கு நேராக கண்டேன்” என்று எண்ணினான். எனவே அவன் மிகவும் விசுவாசமுள்ள தனது போர்ச்சேவகரில் சிலரை அங்கு அனுப்பினான். அங்கே தேவன் அந்த அப்போஸ்தலனை வரிசையின் மறுபக்கத்தில் ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார். அவர் “எழுந்திரு” என்றார். அவன் சொன்னான்.... அவன் மேல் வீட்டில், இருந்து கொண்டு திருமதி பேதுரு இரவு உணவு ஆயத்தம் பண்ணுவதற்காக காத்துக் கொண்டிருந்தான். அவன் அங்கு மேல் வீட்டில் இருந்த போது... அவன் வனாந்தர வழியாக ஒருக்கால் நடந்து வந்த காரணத்தால் அந்த அப்போஸ்தலனுக்கு மிகவும் பசித்தது. அவன் இரவு உணவுக்கு சற்று முன்பு மேல் வீட்டில் படுத்திருப்பது வழக்கம். இப்பொழுதும் அவ்விதம் செய்வது வழக்கமாயுள்ளது. அவர்கள் ஏணியின் மேலேறி கூரைக்குச் சென்று குளிர்ச்சியான மாலை வேளையில் அங்கு உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். 45இந்த அப்போஸ்தலன் உறங்கி விட்டான். அவன் உறங்கிக் கொண்டிருந்த போது, உறக்கத்தையும் கடந்து ஞானதிருஷ்டியடைந்தான். அப்பொழுது அசுத்தமான ஜீவன்கள் நிறைந்த ஒரு துப்பட்டி இறங்கி வருகிறதைக் கண்டான். அவன் “எழுந்திரு, அடித்துப் புசி” என்று சொல்லும் ஒரு சத்தத்தைக் கேட்டான். அவன், “அப்படியல்ல, ஆண்டவரே, அசுத்தமாயிருக்கிற யாதொன்றையும் நான் ஒருக்காலும் புசித்ததில்லை” என்றான். இப்பொழுது, பாருங்கள், அங்கு ஒரு தரிசனம் உண்டானது. இப்பொழுது, கவனியுங்கள்! அதற்கு அர்த்தம் உரைத்தாக வேண்டும். பேதுரு வேட்டை பயணம் மேற்கொண்டு, அவன் முன்பு புசித்திராத ஏதோ ஒரு வகை மிருகத்தைக் கண்டு, அவன் அதை புசிக்க முயற்சி செய்வது போல் அது தோன்றினது. அவன், “அப்படியல்ல, ஆண்டவரே, தீட்டும் அசுத்தமாயிருக்கிற யாதொன்றையும் நான் ஒருக்காலும் புசித்ததில்லை” என்றான். அவரோ, “நான் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே” என்றார். அவர், “எழுந்திரு, மூன்று பேர் உனக்காக வாசலில் காத்திருக்கிறார்கள். ஒன்றுக்கும் சந்தேகப்படாமல் போ” என்றார். அதே நேரத்தில் அவர்கள் கதவைத் தட்டிக் கொண்டிருந்தனர் (சகோ. பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை தட்டுகிறார் - ஆசி). 46இப்பொழுது. பார்த்தீர்களா? விசுவாசமுள்ள அந்த போர்ச்சேவகர் இந்த மனிதனை, அந்த தரிசனத்தின்படியேகண்டபோது... அவர்கள் தேவன் தரிசனத்தில் உரைத்த அதே மனிதனுடன் திரும்பி வருகின்றனர், முன் பின் தெரியாதவன், ஒரு சிறு. அதிகம் அறிந்திராத, செம்படவன். ஆனால் அந்த சிறு கூட்டத்திற்கோ, இவனைக் கண்டு பிடித்தது மிகவும் முக்கியமான செயலாக இருந்தது. அவன் தரிசனத்தில் கண்ட அதே வீட்டுக்கு வருகிறான். கொரிநேலியு எல்லா ஜனங்களையும் வரவழைத்து அங்கு கூட்டியிருந்தான். பேதுரு, “நான் கண்ட அதே விதமாக உள்ளதே” என்றான். பின்பு பேதுரு எழுந்து நின்று, அவர்கள் எவ்விதம் பரி சுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டனர் என்பதைக் குறித்து பிரசங்கிக்கத் தொடங்கினான். அவன் பேசிக் கொண்டிருக்கையில்...! அவர்கள் ஒரு தரிசனம் கிரமமாகவும் பரிபூரணமாகவும் நிறை வேறுகிறதைக் கண்டனர். ஒரு கூட்டம் புறஜாதி மக்கள் ஒரு தரி சனம் நிறைவேறுகிதைக் கண்டு, அவர்கள் எவ்விதம் ஜீவனைப் பெற வேண்டும் என்னும் சத்திய வசனத்தைக் கேட்டனர். அப் பொழுது அவர்கள் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்பே பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மேல் இறங்கினார். 47அது இக்கூடாரத்துக்கு இக்காலை வேளையில் என்ன செய்ய வேண்டும்! வியாதியஸ்தர், அவதியுறுவோர், குருடர், செவிடர், ஊமையர் , பாவி எல்லோருமே... பல்லாயிரக் கணக்கான காரியங்களில், ஒரு முறையாவது ஒரு அணு கூட தவறினதில்லை என்பதை சற்று எண்ணிப் பாருங்கள்! அது நமது இருதயங்களை அனல் மூட்ட வேண்டும்! இப்பொழுது. இப்பொழுது, அவன் இந்த வார்த்தைகளைப் பேசிக் கொண்டிருக்கையில், பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். அப்பொழுது பேதுரு, “நம்மைப் போல பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறுதபடிக்கு நாம் தண்ணீரை விலக்கலாமா? அவர்களுடைய பாவங்கள் ஏற்கனவே போய் விட்டன என்று நான் விசுவாசிக்கிறேன், இல்லையெனில், பரிசுத்த ஆவி யானவர் உள்ளே வந்திருக்க மாட்டார்; அது முன்குறிக்கப்பட்ட ஒரு பாண்டமாய் இல்லாமல் போயிருந்தால், அவர் உள்ளே வந்திருக்கவே மாட்டார்' என்றான். அவர்கள் பின்தொடருவார்கள் என்பதை அவன் அறிந்திருந்தான். அவன் அறிந்திருந்தான்.... 48நான் நினைக்கிறேன், பவுல் மறுபடியுமாக ஞானஸ்.நானம் பெற வேண்டிய காரணம் என்னவெனில், அவன் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தினான். அது உண்மை . அவன் - தேவன் அறிந்திருந்தார். ஏனெனில் அவர், “நான் அவனைத் தெரிந்து கொண்டேன்” என்று அனனியாவிடம் கூறினார். சவுல் ஒரு அறையில், கறுப்படைந்த முகத்துடனும், இருளடைந்த கண்களுடனும், அவன் மேல் முழுவதும் தூசி படிந்தவனாய் ஊக்கமாய் ஜெபித்துக் கொண்டிருப்பதை அவர் கண்டபோது; அவன் போகும் வழியில் அவனுக்கு பிரத்தியட்சமான அக்கினி ஸ்தம்பத்தினால் அவன் பார்வையிழந்தான், அவர், “அவன் புறஜாதிகளுக்கென்று நான் தெரிந்து கொண்ட பாத்திரமாயிருக்கிறான்” என்றார். மூன்று நாட்கள் கழித்து தமஸ்கு நதியில் அனனியா அவனுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுப்பான் என்பதை அவர் அறிந்திருந்தார். ஆனால் அவனுடைய பாவங்கள் ஏற்கனவே போக்கப்பட்டன என்று நான் விசுவாசிக்கிறேன். ஆனால் உலகத்துக்கு காண்பிக்க அவன் இதை செய்ய வேண்டியதாயிருந்தது. ஆகையால் தான் நாமும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறவேண்டுமென்று நான் விசுவாசிக்கிறேன், முன் குறிக்கப்பட்ட வித்து இதை கண்டு கொள்ளும், அவர்கள் மாத்திரமே இதை கண்டு கொள்வார்கள். 49இப்பொழுது, திரித்துவ விசுவாசத்தில் உள்ள சகோதரரே, உங்களை நான் குற்றப்படுத்துவதாக எண்ண வேண்டாம், என் அருமை சகோதரனே, நான் கேள்விகளுக்குத் தான் பதில்ரைத்துக் கொண்டிருக்கிறேன். என் உண்மையான அபிப்பிராயத்தை மாத்திரமே அறிவிக்கிறேன். இந்த ஒலிநாடா என்றாவது ஒரு நாளில் ஆப்பிரிக்காவை அடையக் கூடும். அவருடைய வருகையின் நிழல்களில் நாம் இருக்கிறோம் என்று நான் விசுவாசிக்கிறேன். நாம் எல்லோருமே அதை விசுவாசிக்கிறோம். எனக்கு தென் ஆப்பிரிக்காவில் பல விலையுயர்ந்த நண்பர்கள் உள்ளனர் - டூப்ளெஸில், ஷோமான்ஸ், ஏகர் போன்றவர். அருமையான சகோதரர்கள். ஆனால் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் மற்றெல்லாரை விட சிறப்பு ஸ்தானம் வகிப்பவர் ஒருவர் எப்பொழுதும் உண்டு. அவர்கள் எல்லோரையும் நான் இந்த சகோதரனைப் போலவே அருமையாய் நேசிக்கிறேன். ஆனால் சகோ. ஜாக்சனும் அவருடைய மனைவியும் என் வாழ்க்கையில் எப்பொழுதுமே சிறப்பான ஒரு ஸ்தானம் வகித்து வருகின்றனர். ஏனென்று என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. அங்கு என் நெருங்கிய நண்பர். ஜஸ்டிஸ் டூப்ளெஸிஸ், இன்னும் பல அருமையான ஆப்ரிக்கான்ஸ் சகோதரரும் சகோதரிகளும் உள்ளனர். நல்லது. சகோ. ஜாக்சனும் அவருடைய மனைவியும் எனக்கு ஏன் சிறப்பாக உள்ளனர்? அவர் வேட்டையாடுபவர் என்னும் காரணத்தினாலா? இல்லை! ஏனெனில் எனக்கு அங்கே பல அருமை. யான வேட்டைக்கார நண்பர் உள்ளனர். அவர் ஏன் சிறப்பாக இருக்கிறார்? ஏன்? இவையனைத்துக்கும் பின்னால் உள்ள இரகசியம் மட்டும் உங்களுக்கு தெரிந்திருக்குமானால்! எனக்குத் தெரிந்த எல்லா இரகசியங்களையும் நான் ஜனங்களிடம் கூறுவதில்லை. கர்த்தர் சிட்னி ஜாக்சனிடம் இங்கு வரும்படியாக கூறின அதே நேரத்தில் “தென் ஆப்பிரிக்காவில் சிட்னி ஜாக்சனிடம் தொடர்பு கொள்” என்று என்னிடம் ஏன் கூற வேண்டும்? சென்ற ஞாயிறன்று அவரும் அவருடைய மனைவியும், நிழலின் நேரத்தில், இங்கே இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டனர். பாருங்கள், அந்த நோக்கத்துக்கென்று முன் குறிக்கப்படுதல். பாருங்கள்? 50நீங்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வதனால் இரட்சிக்கப்படுகிறீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். உள்ளில் ஏதோ ஒன்று நடந்துள்ளது என்பதை வெளிப்படையாக அறிவிப்பதே தண்ணீர் ஞானஸ்நானம். தண்ணீருக்கு எந்த குணமும் இல்லை; அது ஒரு அடையாளம் மட்டுமே. நீங்கள் எப்பொழுது இரட்சிக்கப்படுவதாக நான் விசுவாசிக்கிறேன் என்றால்... இப்பொழுது, அநேகர் உள்ளனர் (இதை அந்த சகோதரனுக்கு தெளிவாக்க விரும்புகிறேன்)... இரட்சிக்கப்பட்டதாக கூறிக் கொள்ளும் அநேகர் உள்ளனர்; அநேகர் இயேசுவின் நாமத் தினால் ஞானஸ்நானம் பெற்றுள்ளனர்; அநேகர் அந்நிய பாஷையில் பேசி, பரிசுத்த ஆவியின் எல்லாவிதமான அடையாளங்களும் பெற்று. அதே சமயத்தில் இரட்சிக்கப்படாமல் உள்ளனர். அது உண்மை . “அந்நாளில் அநேகர் என்னிடம் வந்து, 'கர்த்தாவே, உமது நாமத்தினாலே நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன் அல்லவா?' - பிரசங்கி - 'உமது நாமத்தினாலே நான் பிசாசுகளைத் துரத்தி, அநேக அற்புதங்களைச் செய்தேன் அல்லவா?' என்பார்கள். அவர், நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே. என்னை விட்டு அகன்று போங்கள்' என்பேன்” (மத். 7:22-23). பாருங்கள்? எனவே இக்காரியங்கள் அனைத்தும், இருப்பினும் அது - அது - அது தேவன்; அது அவருடைய கரங்களில் உள்ளது. ஆனால் அதை நான் காணும் போது... நீங்கள், “நல்லது. அப்படியானால் மறுபடியும் ஞானஸ் நானம் பெற்றுக் கொள்ளும்படி நீங்கள் ஏன் ஜனங்களை அழைக்கிறீர்கள்?” எனலாம். ஏனெனில் நான் தொடக்கத்தில் இருந்த மாதிரியைப் பின்பற்றுகிறேன். நாம் அந்த கட்டிடத்தின் வரை படத்தை இழந்து போகக் கூடாது. 51இப்பொழுது நாம் அப்போஸ்தலனாகிய பவுலை எடுத்துக் கொள்வோம். அவன் சில சீஷர்களை, அற்புதமான ஜனங்களைக் கண்டான். அவர்கள் இரட்சிக்கப்பட்டிருந்தனர் என்று நான் நம்புகிறேன், இருப்பினும் அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றிருக்கவில்லை, அவர்கள் வேறு ஞானஸ்நானம் பெற்றிருந்தனர் (அப். 19)பவுல் எபேசுவின் மேல் கரை வழியாக சென்றபோது, சில சீஷர்களைக் கண்டான். அவன் அவர்களிடம், “நீங்கள் விசுவாசிகளான பிறகு பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?” என்று கேட்டான். அவர்கள், “எங்களுக்கு பரிசுத்த ஆவியைக் குறித்து தெரியாது, பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை” என்றார்கள். அவன், “அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்?” என்று கேட்டான். அவர்கள், “நாங்கள் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறோம். இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்த யோவான் தான் எங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான்” என்றார்கள். அது மிகவும் நல்ல ஒரு ஞானஸ்நானமே. இந்த கண்டிப்பான அப்போஸ்தலனைக் கவனியுங்கள். அவன், “யோவான் உங்களுக்கு மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தை தான் கொடுத்தான்” என்றான். பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் அல்ல, ஏனெனில் பலியானது அப்பொழுது கொல்லப்படவில்லை, அதற்கு ஏற்ற ஞானஸ்நானம். அதைக் கேட்ட போது அவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் மறுபடியும் ஞானஸ்நானம் பெற்றார்கள். பரிசுத்த ஆவி அவர்கள் மேல் வந்தார். 52இப்பொழுது, இது என்ன செய்தது? ஜீவனுக்கென்று முன் குறிக்கப்பட்டவர்கள் வேதவாக்கிய சத்தியத்தைக் கண்டவுடனே, அவர்கள் சத்தியத்துக்குள் நடந்து விசுவாசிக்கேற்ற பலனைப்பெற்றுக் கொண்டனர் என்பதை இது காண்பிக்கிறது. பரிசுத்த ஆவி அவர்கள் மேல் வந்தார். அவர்கள் அந்நிய பாஷையில் பேசி, தீர்க்கதரிசனம் உரைத்து, தேவனை மகிமைப்படுத்தினார்கள். இப்பொழுது உங்களுக்குப் புரிகிறதா? பாருங்கள்? அவர்களுக்கு ஏற்கனவே மிகுந்த களிப்பும், சத்தமிடுதலும், தேவனைத் துதித்தலும் இருந்த பிறகு இதைச் செய்தனர். வேதத்திலே, அவர்களுக்கு அங்கே ஒரு பாப்டிஸ்டு பிரசங்கி இருந்தான், அவனும் ஞானஸ்நானம் பெற்றிருந்தான். அவன் வேதவாக்கியங்களைக் கொண்டு இயேசுவே கிறிஸ்து என்று நிரூபித்துக் கொண்டு வந்தான். ஜனங்களுக்கு மிகுந்த களிப்புஉண்டாயிருந்தது. அவர்கள் அதைக் குறித்து மிகவும் களிப்புறறிருந்தனர். இருப்பினும் அவர்களுக்கு பரிசுத்த ஆவி இல்லை. அவர்கள் மறுபடியும் ஞானஸ்நானம் பெற வேண்டியதாயிற்று. பவுல் கலா. 1:8ல் “நான் உங்களுக்குப் பிரசங்கித்த இந்த சுவிசேஷத்தை யல்லாமல், வானத்திலிருந்து வருகிற தூதன் வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்ட வனாயிருக்கக் கடவன்” என்கிறான். அது என்னவாயிருந்தாலும் கவலையில்லை. 53எனவே, இக்காரியங்களை அறிந்தவர்களாய்.... இதை நீங்கள் ஒருக்கால் அறியாமலிருக்கலாம், என் சகோதரரே. ஆனால் இவைகளை அறிந்திருக்கும்போது. முதலாம் அஸ்திபாரத்தின் திட்டத்தை நிறைவேற்ற நான் தேவனுக்கு கடமைப்பட்டவனாயிருக்ககிறேன். ஏனெனில் போடப்பட்ட அஸ்திபாரமேயல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது. அது தான் அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகளின் அஸ்திபாரம். தீர்க்கதரிசிகள் அதை முன்னுரைத்தனர். அப்போஸ்தலர் அதை நிறைவேற்றினர். கட்டிடம் முடிவு பெறும் வரைக்கும் அதை நாம் தொடர்ந்து செய்ய வேண்டியவர்களாயிருக்கிறோம். இப்பொழுது, நான் நம்புவது என்னவெனில், ஒரு மனிதன் தன் முழு இருதயத்தோடும் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தால், அவன் இரட்சிக்கப்படுகிறான் - அவனுடைய இரு தயத்திலிருந்து, வெளிப்புறமான மனச்சாட்சியிலிருந்து அல்ல. 54பாருங்கள், நீங்கள் இரட்டை தன்மையுள்ளோர் - மூன்றை ஒன்றில் அடக்கியிருக்கிறீர்கள் - ஆத்துமா, ஆவி, சரீரம். நான் நம்புவது என்னவெனில் உங்கள் வெளிப்புறமான புலன்கள் -உங்கள் ஆத்துமா - உங்கள் ஆத்துமா அல்ல, உங்கள் வெளிப்புற மனச்சாட்சி, உங்கள் புலன்கள் ... வேறு விதமாகக் கூறினால், நீங்கள் விழித்துக் கொண்டிருக்கும் போது, நீங்கள் ஐம்புலன்களினால் இயக்கப்படுகிறீர்கள்: பார்த்தல், ருசித்தல், உணருதல், முகர்தல், கேட்டல். உங்கள் பூமிக்குரிய வீட்டுடன் தொடர்பு கொள்வதற்கு அவை உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன, பரலோக வீட்டுடன் தொடர்பு கொள்ள அவை உங்களுக்கு அளிக்கப்படவில்லை. மானிட சரீரத்தில் உண்மையில் ஆறு புலன்கள் உள்ளன, ஏனெனில் அவன் வேதத்தில் ஆறு என்னும் எண்ணாக இருக்கிறான். அவன் ஆறாம் நாளில் சிருஷ்டிக்கப்பட்டான், அவன் ஆறு என்னும் எண்ணாக இருக்கிறான் - ஒரு மனிதன் அவ்வாறு இருக்கிறான். அவனுக்கு பார்த்தல், ருசித்தல், உணருதல், முகர்தல், கேட்டல், விசுவாசம் என்பவை உள்ளன. அவனுடைய விசுவாசமே அவன் போய் சேர வேண்டிய இடத்தை நிர்ணயிக்கிறது, அவன் எதை நோக்கிச் செல்கிறான் என்பதை. விசுவாசம் என்பது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் ருசிக்கப்படாதவைகளின், உணரப்படாதவைகளின், முகரப்படாதவைகளின், கேட்கப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. விசுவாசத்தினால், அவன் வார்த்தையை. கிரகித்துக் கொள்ளும் போது, அது அவனை ஒரு பரிமாணத்துக்கு கொண்டு சென்று (பாருங்கள்?) அதை மிகவும் உண்மையுள்ள ஒன்றாக அவனுக்குச் செய்து, அது அவன் கையில் இருக்கும் ஒன்றைப் போல் செய்து விடுகிறது. அது நிறைவேறும் என்று அவன் அறிந்து கொள்கிறான். 55இப்பொழுது. - தண்ணீர் ஞானஸ்நானத்தைக் குறித்த இந்த கேள்விக்கும் அதே காரியம் தான். பாருங்கள்? இந்த ஜனங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறுவார்கள் என்பதை தேவன் அறிந்திருந்தார். பவுல் இந்த அறிக்கையை விடுத்தான், அதாவது, அவனுக்குப் போதிக்கப்பட்ட உபதேசமேயல்லாமல், வேறெந்த உபதேசத்தையும், எந்த மனிதனும், வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனும் கூட போதிக்கக் கூடாது என்று. எனவே நான் பிரசங்கியாக, ஒரு ஊழியக்காரனாக, ஒரு தீர்க்கதரிசியாக, அல்லது வானத்திலிருந்து வந்த ஒரு தூதனாக இந்த அப்போஸ்தலன் செய்த ஒன்றுக்கு முரணான ஒன்றை போதிப் பேனானால், ஜனங்கள் மறுபடியும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால்ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று நான் கட்டளையிடாமல் போனால், நான் விசுவாசிப்பதாக உரிமை கோருபவைகளுக்கு வேதத்தின்படி ஒரு கள்ளச் சாட்சியாயிருப்பேன். 56எனவே மாதிரியானது கொடுக்கப்பட்டு விட்டதென்று நான் நம்புகிறேன். வேதத்தில் ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டனர். ஒரு முறையாவது யாருமே பிதா, குமாரன் , பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் பண்ணப்படவில்லை. பாருங்கள்? யாருமே ஒருக்காலும் தெளிக்கப்படவில்லை; அவர்கள் அனைவரும் தண்ணீரில் முழுக்கப்பட்டனர். எனவே நான் நம்புவது என்னவெனில், நீங்கள் உண்மையில்...... உங்கள் கேள்விக்கு, விலையேறப் பெற்ற சகோதரனே, தேவன் உங்கள் இருதயத்தை அறியும் போது... ஆயிரக்கணக்கானோர் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றிருப்பார்கள். நீங்கள் உலர்ந்த பாவியாய் தண்ணீருக்குள் சென்று, ஈரமுள்ள பாவியாய் வெளியே வரக்கூடும். பாருங்கள், பாருங்கள்? ஆனால் உத்தமமான, உண்மையுள்ள விசுவாசியாய், நீங்கள் எல்லா விசுவாசத்திலும், தேவனுக்கு முன்பாக நல்மனச் சாட்சியிலும் நடந்து, அதைக் காணும்போது, நீங்கள் ஞானஸ்நானம் பெறுகின்றீர்கள்! உள்ளில் கிருபையின் கிரியை நடந்து விட்டது என்பதை வெளிப்படையாக தெரியப்படுத்துவதே ஞானஸ்நானம் என்று நான் விசுவாசிக்கிறேன். 57தேவன் பேழையைக் கட்டினது போன்று. அவர், “நோவா. அதற்குள் நீயும் உன் வீட்டாரும் உன் குடும்பத்தினரும் போங்கள்” என்று சொன்னார். அவர்கள் அதற்குள்ளே பிரவேசித்தனர். ஒரு பேழை இல்லாமல் போயிருந்தால், தேவன் நோவாவை ஒரு மரக்கட்டையின் மேல் உட்காரச் செய்திருப்பார். அல்லது தண்ணீரின் மேல் நடக்கச் செய்திருப்பார் என்று நான் விசுவாசிக்கிறேன். பாருங்கள்? ஆனால் அவன் உள்ளே பிரவேசிப்பதற்காக அவன் ஒரு பேழையை உண்டாக்கச் செய்தார். அதை செய்வதற்கு அது ஒன்றே வழி. அது தேவனால் அருளப்பட்ட வழி. தேவன் ஒரு மனிதனை கிருபையினால் இரட்சிக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அதை வெளிப்படையாக தெரிவிப்பதின் மூலம் அதற்குள் பிரவேசிப்பதே தேவனால் அருளப்பட்ட வழியாயுள்ளது. ஏனெனில் அவர்கள் அனைவரும் அந்த விதமாகத்தான் ஞானஸ்நானம் பெற்றார்கள். நான் மற்றவரை குற்றப்படுத்தவில்லை, ஆனால் அது வெறும்.... அதுதான் அது என்று நான் நினைக்கிறேன். தண்ணீர் ஒரு மனிதனை இரட்சிப்பதில்லை, அவன் இரட்சிக்கப்பட்டிருக்கிறான் என்பதை அது காண்பிக்கிறது; அது வெளிப்படையாக தெரியப் படுத்துதல். இப்பொழுது, அது ஒரு வேளை சரியில்லாமல் இருக்கலாம், சகோதரனே. அப்படி இருக்குமானால், நல்லது, அதை வேறொரு சமயம் பார்க்கலாம், அல்லது... சரி. 58ஆதியாகமம் 6:4ல், 'ஜலப்பிரளயத்துக்குப் பிறகு இராட்சதர் எங்கிருந்து வந்தனர்? அது ஒரு நல்ல கேள்வி, மிகவும் நல்ல கேள்வி. அது ஒரு புத்திசாலித்தனமான கேள்வி. இந்த இராட்சதர் எங்கிருந்து வந்தனர்? நமக்குத் தெரிந்த வரையில், ஆதாம் ஒரு இராட்சதன் அல்ல. அவன் இராட்சதனாயிருந்தால், வேதம் கூறியிருக்கும். அவன் ஒரு சாதாரண மனிதன். இராட்சதர் எங்கிருந்து வந்தனர்? இது ஒரு பெரிய சர்ச்சைக்குரிய விஷயம். இப்பொழுது தான் இது என் கையில் கொடுக்கப்பட்டது. அது ஒரு பெரிய கறுப்பு தாளில் உள்ளது, இல்லை, வெள்ளைத் தாளில் பெரிய கறுப்பு எழுத்துக்களில். 59இப்பொழுது, இந்த இராட்சதர்... நான் நினைக்கிறேன் அண்மையில் யாரோ ஒருவர் இங்கு .... அது ஜோசியஸாக இருக்கக்கூடும். என் ஊழியக்கார சகோதரர்களே, அது ஜோசியஸ் என்று நான் நிச்சயமாக கூறவில்லை. அது அவராக இருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது, அல்லது டாக்டர் ஸ்கோஃபீல்ட், அல்லது வேறு யாரோ, தேசத்திலிருந்த இந்த இராட்சதர் பரலோகத்தில் சாத்தான் சொன்ன கதையைக் கேட்டு விழுந்து போன தேவனுடைய ஆவிகள் என்று கூறியுள்ளார். அது மிகாவேல்... பரலோகத்தில் மிகாவேலுக்கு எதிராக யுத்தம் செய்து... கீழே தள்ளப்பட்டனர். இந்த தேவபுத்திரர் மனுஷகுமாரத்திகளைக் கண்டனர். அவர்கள் அந்த சமயத்தில் இராட்சதர்களாக மாம்ச உருவெடுத்து வந்தனர் என்கின்றனர். அவ்விதம் நீங்கள் செய்தால், நீங்கள் சாத்தானை சிருஷ்டிகராக ஆக்கிவிடுவீர்கள். நீங்கள் அவ் விதம் செய்ய முடியாது. 60ஏழாம் நாள் ஆசரிப்பு கூட்டத்தாரைச் சேர்ந்த டாக்டர் ஸ்மித் பலி ஆட்டைக் குறித்துக் கூறினது போல. அவர் சொன்னார் ஒரு ஆடு... அவர்கள் பலியிடும் நாளில் - அதாவது பாவநிவிர்த்தி நாளின்போது - ஒரு ஆடு கொல்லப்பட்டது. மற்ற ஆடு அவிழ்த்துவிடப்பட்டது. கொல்லப்பட்ட ஆடு நமது பாவங்களைச் சுமந்து மரித்த இயேசுவுக்கு அடையாளமாயுள்ளது என்றும், அவிழ்த்து விடப்பட்ட ஆடு பிசாசைக் குறிக்கிறதென்றும், அது நமது பாவங்களை சுமந்து கொண்டு அதனுடன் நித்தியத்துக்கு செல்கிறதென்றும் அவர் கூறினார். இப்பொழுது, பாருங்கள், எந்த ... என் கருத்தின்படி ... இது ஏழாம் நாள் ஆசரிப்பு சகோதரனுக்கு கிடைக்க நேர்ந்தால், நான் அந்த மேதை டாக்டர் ஸ்மித்தைக் குறித்து ஒன்றும் சொல்லவில்லை. ஓ, அவர் சாமர்த்தியமுள்ள, புத்திசாலியான, அருமையான, பண்புள்ள கிறிஸ்தவர், ஒரு விசுவாசி; ஆனால் என்னைப் பொறுத்த வரையில், பாருங்கள், அது அர்த்தமற்றது. அவ்விதம் நீங்கள் செய்வீர்களானால், நீங்கள் பிசர்சுக்கு பலி யிடுகின்றீர்கள். அந்த இரண்டு ஆடுகளுமே கிறிஸ்துவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதலுக்கு எடுத்துக்காட்டாய் உள்ளன. அவர் நமது பாவங்களுக்காக மரித்து, நமது பாவங்களை வெகு தூரம் சுமந்து சென்று விட்டார்; இரண்டுமே கிறிஸ்துதான். 61எனவே இந்த இராட்சதர் மாம்ச உருவெடுத்து இங்கு தோன்றினவர்கள் அல்ல. அவர்கள் காயீனின் புத்திரர், காயீனின் தகப்பன் சர்ப்பம். அவன் எல்லா வகையிலும் மனிதனைப் போலவே காணப்பட்டான். ஆனால் அவன் மிகப் பெரிய உருவம் கொண்டவன், மனிதனைக் காட்டிலும் பெரிய உருவம் படைத்தவன். அங்கிருந்து தான் அந்த குமாரர் தோன்றினர், அவர்கள் காயீனின் புத்திரர். அவர்கள் கானான் தேசத்திலிருந்த கானானியர். அங்கிருந்து தான் அவர்கள் தோன்றினர். அங்குதான் காயீன் சென்றான். அது பாருங்கள், அது சர்ப்பத்தின் வித்தையும் நிரூபிக்கிறது. அவர்கள் முற்றிலும் வித்தியாசமான ஜாதியார். அவர்கள் சர்ப்பத்தின் வித்துக்கள். பாருங்கள்? சர்ப்பத்தின் வித்தைப் பற்றிய ஒரு கேள்வி இங்குள்ளது. எனவே அதற்கு நாம் வரப்போகிறோம். இதை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். பாருங்கள்? இது உங்களுக்கு ஒரு பின்னணியை அளிக்கும். 62பாருங்கள், அவர்கள் கானானியர், இந்த இராட்சதர்; அவர்கள் காயீனின் புத்திரர், காயீன் சர்ப்பத்தின் குமாரன். சர்ப்பம் ஒரு இராட்சத மனிதன், பெரிய பயங்கரமான உருவம் படைத்தவன், அவன் ஊரும் பிராணி, அல்ல, அழகுள்ளவன். அவன் எல்லா மிருகங்களைப் பார்க்கிலும் மிகவும் தந்திரமுள்ளவனாயிருந்தான். அவன் ஒருவன் மாத்திரமே.... பாருங்கள், ஒரு மிருகத்தின் மரபு அணுக்கள் (genes)ஒரு ஸ்திரீயில் செலுத்தப்பட்டால், அது கருத்தரிக்காது. அவர்கள் மீண்டும் மீண்டும் முயன்று பார்த்து விட்டனர்; அது ஸ்திரீயின் முட்டையுடன் சேர முடியாது. இப்பொழுது, அவர்களால் அதை கண்டு பிடிக்க முடியவில்லை. ஒரு வாலில்லாக் குரங்கை (chimpanZcc)எடுத்துக் கொள்ளுங்கள், அல்லது ஒரு மனிதக் குரங்கை (go) - Tilla):அவை மனித உருவுக்கு மிகவும் நெருங்கினவைகளாக உள்ளன். தேவன் தமது மகத்தான படிப்படியான சிருஷ்டிப்பில், 'முதலில் மீனை உண்டாக்கினார்; அதன் பிறகு பறவைகளை உண்டாக்கினார்; அதன் பிறகு மிருகங்களை உண்டாக்கினார். அவை படிப் படியாக உயர்ந்து கொண்டே வந்து, வாலில்லாக் குரங்கு, பிறகு மனிதக் குரங்கு, அதன் பிறகு சர்ப்பத்தின் உருவம், பிறகு சர்ப்பத்திலிருந்து மனிதன். 63மனிதனுக்கு அடுத்தபடியாக இருந்த இந்த மிருகம் எது என்று கண்டறிய மனிதகுலம் - விஞ்ஞானம் - எலும்புகளை தேடிப் பார்க்க முயன்றது. மனிதனும் ஒரு மிருகமே. மனிதனின் மாம்ச பாகம் மிருகத்தின் மாம்சமே. அது நமக்குத் தெரியும். நாம் குட்டிப் போட்டு பாலூட்டும் மிருக இனத்தை (marmmal)சேர்ந்தவர்கள். அது சூடான இரத்தம் கொண்ட மிருகம். அது நமக்குத் தெரியும். ஆனால் வித்தியாசத்தை உண்டு பண்ணுவது எது? மிருகத்துக்கு உள்ளில் ஆத்துமா கிடையாது, ஆனால் மனிதனுக்கோ உண்டு. மிருகத்துக்கு நன்மைக்கும் தீமைக்கும் வித்தியாசம் தெரியாது. ' ஒரு பெண் நாய்க்கு அது உடை உடுக்க வேண்டுமென்று தெரியாது. அப்படி தெரிந்திருந்தாலும் அது குட்டை கால் சட்டையை உடுக்காது. அப்படியே ஒரு பெண் பன்றியும். நாமோ விழுந்து போன மானிட வர்க்கம். பாருங்கள்? 64இப்பொழுது, அங்கிருந்து தான் அது வருகிறது. அங்கிருந்து தான் இந்த இராட்சதர் தோன்றினர். அவர்கள் சர்ப்பத்தின் புத்திரர். பாருங்கள், அவன் ஏவாளை அந்த நிலையில் கண்டபோது, சாத்தான் சர்ப்பத்துக்குள் புகுந்து அதை செய்யத் தூண்டினான். பாருங்கள், ஆதாம் அதை அதுவரைக்கும் கண்டுபிடிக்கவில்லை. இந்த சொற்களை எவ்விதம் உபயோகிப்பதென்று எனக்குத் - தெரியவில்லை. இங்குள்ள உங்கள் மத்தியில் அதை கூறினால்பாதகமில்லை, ஆனால் யாராகிலும். ஒருவர் அதை குறை கூற வாய்ப்புண்டு. பாருங்கள், குறை கூற அவர்கள் ஏதாகிலும் ஒன்றைக் கண்டுபிடிக்க எப்பொழுதும் முயன்று கொண்டிருக்கின்றனர். ஆனால் பாருங்கள், ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறியவில்லை. அவன் அந்த இடத்துக்கு வரவில்லை. சாத்தான் அங்கே அவனை மடங்கடித்தான். பாருங்கள்? அவள் கர்ப்பம் தரித்த பிறகு, ஆதாம் அவளை அறிந்தான். அடுத்த கேள்வியில், அல்லது இக்கேள்விகளில் ஒன்றில், அதற்கு நாம் வருவோம். அந்த கேள்வி எங்குள்ளதென்று எனக்குத் தெரியவில்லை; அதை இப்பொழுது இங்கு சற்று முன்பு கண்டேன். ஆனால் அதிலிருந்து தான் இராட்சதர் தோன்றினர். 65அன்புள்ள சகோ. பிரான்ஹாமே, உண்மையான, மறுபடியும் பிறந்த விசுவாசிகளின் குமாரர் குமாரத்திகள் அனைவரும் இரட்சிக்கப்படுவார்களா? இல்லை, சகோதரனே; இல்லை, நிச்சயமாக இல்லை. பாருங்கள், “தேவனுக்கு பேரப்பிள்ளைகள் கிடையாது (பாருங்கள்?), குமாரரும் குமாரத்திகளும் மாத்திரமே” என்று டேவிட் டூப்ளெஸிஸ் குறிப்பிட்டதை நான் அடிக்கடி எடுத்துக் கூறுவது வழக்கம். பாருங்கள், அவர்களும் தங்கள் தாய் தந்தையர் ஆவியில் பிறந்தது போலவே பிறக்க வேண்டும். பாருங்கள்? அதுதான் ஒருவனை புது மனிதனாக்குகிறது - அவன் மறுபடியும் பிறப்பதனால். அவனுடைய முதல் பிறப்பு மாம்ச மனிதனை பூமிக்கு கொண்டு வருகிறது; அவனுடைய இரண்டாம் பிறப்பு பரலோகத்தின் ஆவிக்குரிய மனி “தனை அவனுக்கு கொண்டு வருகிறது. பாருங்கள்? அது அவனை மாற்றுகிறது, அவனுடைய ஆத்துமாவை, அவனுடைய வெளிப்புற மனச்சாட்சியையோ, வெளிப்புறத் தோற்றத்தையோ, அவனுடைய புலன்களையோ அல்ல. அவன் இன்னும் உணருகிறான், முகர்கிறான், ருசிக்கிறான், கேட்கிறான். ஆனால் அவனுடைய உள்ளான பாகங்கள், அவனுடைய விருப்பங்கள், அவனை இயக்குபவை, தேவனுக்காக மாறி விடுகிறது. பாருங்கள்? 66இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், இது நடக்கக் கூடிய ஒரே வழி இதுதான்; ரோம் நூற்றுக்கதிபதியின் காலத்தில்; தேவன் சிறைச் சாலையை பூமியதிர்ச்சியினால் அசைத்த காரணத்தால், அந்த ரோமப் போர்ச்சேவகன் கத்தியை உருவி தன்னைக் கொலை செய்து கொள்ள முயன்ற போது, பவுல் - பவுலும் சீலாவும் - அவனிடம், “உனக்கு கெடுதி ஒன்றும் செய்து கொள்ளாதே, நாங்கள் இங்கே தான் இருக்கிறோம், எழுந்திரு” என்று சொன்னது போல. அவன் என்ன செய்ய வேண்டுமென்று அறிய விரும்பினான். அப்பொழுது பவுல், “நீ எழுந்து ஞானஸ்நானம் பெற்று, கர்த்தருடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடு. அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” என்றான். பாருங்கள்? வேறு விதமாகக் கூறினால், “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” (அப். 16:31). இப்பொழுது, எப்படி? உன் வீட்டார் நீ விசுவாசிக்கும் விதமாகவே விசுவாசிப்பார்களானால். பாருங்கள்? நீங்கள் ஜெபித்து உங்கள் பிள்ளைகளை தேவனிடத்தில் ஒப்புவித்து, அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் என்று விசுவாசித்து தேவனைப் பற்றிக் கொண்டிருங்கள். 67என் மகள் ரெபேக்காள் விஷயத்தில் சற்று முன்பு தான் அந்த அனுபவத்தைக் கடந்து வந்தேன். பாருங்கள்? தேவனிடத்தில் ஒப்புவியுங்கள். அவளுக்கு பதினேழு வயதான போது, அவள் வேறொரு பெண்ணுடன் மற்றொரு பெண்ணின் வீட்டுக்குச் சென்று இசை பயின்று வந்தாள். இந்த பெண்... ஒரு நாள் வீட்டுக்கு வந்த போது, இந்த பெண் பியானோவில் 'ராக் அண்டு ரோல்' இசை வாசித்துக்கொண்டிருந்தாள். அது ஒன்று எனக்கு போதுமானதாயிருந்தது. எனவே நான் ரெபேக்காளிடம் இனிமேல் அங்கு போகக் கூடாது என்று சொல்லிவிட்டேன். பாருங்கள்? அப்பொழுது அவள், “இசை பயில அது ஒரு இடம் தான் உள்ளது” என்றாள் (இளம் பருவத்தினர் எப்படி உணர்ச்சிவசப்படுவார்கள் என்று உங்களுக்குத் தெரியும்). நான் சொன்னேன்... ஒவ்வொரு வாலிபப் பிள்ளையும் அதை கடக்க வேண்டியவர்களாயுள்ளனர். ஏறக்குறைய நாம் எல்லோருமே அந்த வயதை கடந்து வந்திருக்கிறோம். நீங்கள் கடந்து வந்திருக்கிறீர்கள், நானும் கடந்து வந்திருக்கிறேன். அந்த வயதில் அவர்களுக்குள்ள சிந்தனைகள் என்னவென்று நாம் சிந்திக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். 68எனவே, இது நடந்து சில நாட்கள் கழித்து அவள் தாய் அவளை ஏதோ ஒன்றுக்காக அதட்டினாள். அது ரெபேக்காளின் குணமே அல்ல. அவள் கதவை படாரென்று மூடி, பொருட்களை சுவற்றிலிருந்து கீழே தள்ளி பள்ளிக்கூடத்துக்கு புறப்பட்டாள். நான் என் பெல்ட்டைக் கழற்றி அவளுக்குப் பின்னால் முற்றத்துக்கு சென்று, அவளை இழுத்துக் கொண்டு வந்திருக்க வேண்டும். பாருங்கள்? ஆனால் நான் நினைத்தேன், “ஒரு நிமிடம். பொறு, பதினெட்டு வயது பெண்ணின் சிந்தனைகளை நான் எண்ணிப் பார்க்க வேண்டும்” என்று பாருங்கள்? மேடா அழத் தொடங்கினாள். நான் அவளிடம், “உன்னால் முடிந்த எல்லாவற்றையும் நீ செய்து விட்டாய். நானும் என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்து விட்டேன். அது நம்முடைய கைகளை மீறிப் போய்விட்டால், நாம் அடுத்த நடவடிக்கை தான் எடுக்க வேண்டும்” என்றேன். அன்றொரு நாள் ஒரு அம்மணி மிகவும் இனிமையாக எழுதியிருந்தார்கள் (அது இங்குள்ள கேள்விகளில் ஒன்று. அவர்கள், “சகோ. பிரான்ஹாமே, நீர் மேசியா அல்லது அல்லவா?” என்றார்கள். நான், “இல்லை, அம்மணி” என்றேன். - அவர்கள், “நீர் எங்கள் மேய்ப்பன் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். ஆனால் நீர் எப்பொழுதுமே அந்த மகத்தான மேய்ப்பரை சுட்டிக் காட்டுகிறீர்” என்றார்கள். நான், “அது உண்மை , அது உண்மை ” என்றேன். நான் மேடாவிடம், “நல்லது, தேனே, பார், நான் சொல்வதை நீ கேட்க வேண்டும். அவ்விதம் செய்வது உனக்குக் கடினம்; நான் உன் கணவன். ஆனால் சில ஆலோசனையான வார்த்தைகளுக்காக ஜனங்கள் தேசம் எங்கிலுமிருந்து காரோட்டி வருகின்றனர். இப்பொழுது, நீ... அன்றொரு நாள் நான் அவளிடம் பேசினேன், அவளோ என்னிடமிருந்து நடந்து சென்று விட்டாள்” என்றேன். 69இப்பொழுது, பெக்கி அவ்விதம் என்னிடம் நடந்து கொண்டதேயில்லை. பாருங்கள்? அவளுடைய தாய் அதைக் குறித்து ஏதோ ஒன்றை சொன்னபோது, அவள், “என் வாழ்நாள் முழுவதும் நான் சுவற்றில் வைக்கப்பட்டுள்ள மலரைப் போல் இங்கேயே உட்கார்ந்திருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களா?” என்று சொல்லிவிட்டு கதவை படாரென்று மூடினாள். அவள் படாரென்று கதவை மூடிவிட்டு வெளி நடந்தாள். அது பிசாசு. அவள் இரண்டு வயது வரைக்கும் அழுது கொண்டேயிருப்பது எனக்கு ஞாபகம் வருகிறது. நாங்கள் உண்பதற்கு உணவு விடுதிக்குப் போனால், மேடா உண்ணும்போது, நான் அவளைதெருவில் நடக்க வைத்துக் கொண்டிருப்பேன். நான் உண்ணும் போது, மேடா அவளைத் தெருவில் நடக்க வைத்துக் கொண்டிருப்பாள். அவள் எப்பொழுதும் அழுது கொண்டேயிருப்பாள். ஒரு நாள் கனடாவில் அவள் இரவு முழுவதும் அழுது கொண்டிருந்தாள், எனக்கு ஓய்வெடுக்க முடியவேயில்லை; நான் அங்கு நின்று கொண்டு .... ஏதோ ஒன்று என்னிடம், “அது உன் ஊழியத்தை கெடுக்க வந்த பிசாசு” என்றது, நான், “அந்த குழந்தையை என் கையில் கொடு” என்று சொல்லி அவளைக் கையில் வாங்கிக் கொண்டு, “சாத்தானே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உன் கரங்களை அவளை விட்டு நீக்கிப் போடு” என்றேன். அவள் உடனே அழுகையை நிறுத்தினாள், அதன் பிறகு அவள் அழுவதேயில்லை. எனக்கிருக்கும் மிகவும் அமைதியான பிள்ளை அவளே. அந்த நேரம் முதற்கொண்டு அது போய் விட்டது. நீங்கள் அதை செய்ய வேண்டும். நீங்கள் அதை செய்வதற்கு முன்பு அதை உங்களுக்குள் பெற்றிருக்க வேண்டும். அதன் பிறகு அவள் - அவள் அதை தொடங்கினாள். நான் மேடாவை ஒரு மணிநேரம் தனியே அழைத்துச் சென்றேன். நான், “மேடா, அதை நிறுத்து” என்றேன். “நானா? அவள் என் மகள்” என்றாள். நான், “அவள் என் மகளும் கூட அல்லவா? சரி, அவள் இக்காலை வேளையில் மரணத்தருவாயில் இருந்தால் அவள் போய் சேர வேண்டிய நித்திய ஸ்தலத்துக்காக அவளை நீ தேவனிடத்தில் ஒப்புக் கொடுத்திருப்பாய் அல்லவா? அவள் உலகத்தில் செய்ய வேண்டிய பயணத்துக்காக தாம் ஏன் அவளை தேவனிடம் இப்பொழுது ஒப்புவிக்கக் கூடாது?” என்றேன். அவள், “நல்லது. அவள் என் மகள்” என்றாள். நான், “அவள் என் மகளும் கூட” என்றேன். நான், “இப்பொழுது நீ உன்னுடைய...”என்றேன். அவள், “நான் அவளிடம் ஒன்றும் சொல்லக் கூடாதா என்ன? என்றாள். நான், “நான் அப்படிச் சொல்லவில்லை. அவளைத் திட்டுவதை நாம் நிறுத்தி விடுவோம். அவளுக்கு புத்திமதி மட்டும் கூறுவோம். அவளுக்கு ஒரு நண்பர் தேவை. நீயும் நானும் தான் அவளுக்கு நண்பர்கள். நாம் அவளுடைய பெற்றோர்” என்றேன். 70இந்த பிள்ளைகளுக்கு இன்று தேவை நண்பர்கள். அவர்களுக்கு ஒரு தாயாரும், இரவு முழுவதும் மதுக்கடைகளுக்கு ஓடுவதற்கு பதிலாக வீட்டில் தங்கி அவர்களைப் பேணிக் காக்கும் தந்தையும் இருப்பார்களானால், இளைஞர்களின் குற்றம் (juvenile delinquency)என்று ஒன்று இருக்கவே இருக்காது. பாருங்கள்? அவர்கள் வேதத்தை விட்டு விலகி விட்டனர்; அவர்கள் எல்லோரும் ஆலயத்துக்குச் சென்று 'பங்கோ' விளையாட்டுகள் போன்றவைகளை விளையாடுகின்றனர்... பாருங்கள்? நீங்கள் சாத்தானின் இருப்பிடமாகிய ஹாலிவுட்டைப் போல் உங்களை மெரு கேற்றிக் கொள்ள விரும்புகிறீர்கள். நீங்கள் ஹாலிவுட்டை சபைக்குள் கொண்டு வரக் கூடாது. அதாவது நீங்கள் சபையை ஹாலிவுட் உள்ள நிலைக்குக் கொண்டு வரக்கூடாது, ஹாலிவுட்டை உங்கள் நிலைக்குக் கொண்டு வரவேண்டும். பாருங்கள்? அவர்களுடைய நிலைக்கு நீங்கள் செல்லக் கூடாது, அவர்கள் உங்கள் நிலைக்கு வரட்டும். அவர்களுக்கு ஒன்றுமே தெரியாத ஒன்று நம்மிடம் உள்ளது. - 71எனவே நாங்கள் அங்கேயே முழங்கால்படியிட்டு, அவளை தேவனிடத்தில் ஒப்புக் கொடுத்தோம், நான், “அவளுக்கு இன்னும் சில நாட்களில் பதினெட்டு வயதாகிறது, அந்த வயதுள்ள ஒரு பெண் ஆண் நண்பர்களை (boy friends)குறித்து சிந்திக்கத் தலைபடுவாள். நாமோ அவளை வீட்டில் அடைத்து வைத்திருக்கிறோம். அவள் இப்பொழுது மணம் புரிந்து கொள்ள நான் விரும்பவில்லை. அவளை இங்குள்ள அலுவலகத்தில் சேர்த்து, அவள் வேலை செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன். அவள் ஆவியில் நிறைந்திருப்பதைக் காண விரும்புகிறேன் - அவ்விதமாக வாழ” என்றேன். - அவள்... நல்லது, நாங்கள் எல்லோரும் அதையே விரும்பினோம். மேடா, “அவள் அதைச் செய்ய மாட்டாள். அவள் கேட்க மாட்டாள்” என்றாள். நான், “ஒரு நிமிடம் பொறு! நம்மால் முடிந்த வரை அவளை நாம் வளர்த்து வந்தோம். இப்பொழுது அவளைத் தேவனுடைய கரங்களில் வைப்போம் - அவளை அவரிடம் ஒப்புக் கொடுப்போம். அவள் ஏதாவதொன்றைச் செய்தால் நீ அவளிடம், 'பெக்கி, அன்பே, நீ அதைச் செய்வதை உன் அம்மா விரும்பவில்லை, இருந்தாலும் நான் உனக்கு சிநேகிதி; நான் உன் கூடவே இருப்பேன்' என்று சொல். பார்? நீ அவளை நேசிக்கிறாய் என்பதை அவள்அறியட்டும். அவள் வேறு யாரையாகிலும் நேசிக்கத் தலைப்பட்டால், அது ஒருவேளை தவறான ஸ்திரீயாக இருக்கக் கூடும். பார்? அவளை சிநேகிக்கும் ஸ்திரீ நீயாக இருக்கட்டும். தேனே, இது கொடூரமாக, தொனிக்கலாம், ஆனால் ஜனங்கள் எல்லாவிடங்களிலுமிருந்து வந்து தனிப்பட்ட விதத்தில் பேட்டி காண்கின்றனர். நான் உனக்கு மிகவும் பழகினவனாகி விட்டேன். நாம் கணவனும் மனைவியுமாயிருப்பதால், நாம் ஒருவருக்கொருவர் மிகவும் பழகினவர்களாகி விட்டோம். ஆகவே நாம் ஆலோசனை கேட்பதில்லை. இது கர்த்தருடைய நாமத்தில் என்பதை நீ நினைவில் கொள்ள வேண்டும்” என்றேன். அவள், “சரி” என்றாள். நாங்கள் முழங்கால்படியிட்டு அவளைத் தேவனிடம் ஒப்புக் கொடுத்தோம். அவளை நாங்கள் இனிமேல் ஒன்றும் செய்யப் போவதில்லை என்று கூறினோம். அன்று பிற்பகல் அவள் உள்ளே வந்தாள். அவள், “நல்லது, அங்கே நான் போகக் கூடாது என்று நீங்கள் இப்பொழுதும் சொல்லுகிறீர்களா?” என்று கேட்டாள். அதற்கு மேடா, “இல்லை, நான் அதைக் குறித்து ஒன்றும் சொல்லவில்லை. நீ அதை செய்வது உன் அம்மாவுக்குப் பிடிக்கவில்லை. அந்த பெண்ணுடன் நீ ”பூகி ஓகி“ இசை வாசித்துக் கொண்டிருந்ததை உன் அப்பா கேட்ட போது, அது அவரை கொன்று விட்டது என்று உனக்குத் தெரியும். அதை நீ செய்வது அவருக்குப் பிடிக்கவில்லை, எங்கள் இருவருக்குமே பிடிக்கவில்லை. ஆனால், பெக்கி, அதை நாங்கள் கர்த்தரிடம் சமர்ப்பித்து விட்டோம். நாங்கள் உன்னை நேசிக்கிறோம் என்பதை நீ அறிய வேண்டும். நீ என்ன செய்த போதிலும், நாங்கள் உன்னை அப்பொழுதும் நேசிப்போம்” என்றாள். பொக்கி, “நான் எப்படியும் போகத்தான் போகிறேன்” என்றாள். மேடா, “சரி, அன்பே” என்றாள். பெக்கி போகப் புறப்பட்டாள். மேடா, “சரி, நீ திரும்பி வரும்போது, இரவு உணவை ஆயத்தமாக வைத்திருக்கிறேன்” என்றாள். அவள் போகவேயில்லை. இல்லை, அன்று முதல் அவள் போகவேயில்லை. பாருங்கள்? அதற்கு பிறகு சற்று கழிந்து அவள் ஜார்ஜை சந்தித்தாள்; ஜார்ஜ் ஒரு கிறிஸ்தவன். அத்துடன் அது முடிவு பெற்றது. அன்றொரு நாள் பெக்கி அதைக் குறித்து திருமதி உட்டிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். அவள், “ஓ, எனக்கு மிகுந்த கோபம் வந்துவிட்டது. அப்பாவும் அம்மாவும் என்னைக் கர்த்தரிடத்தில் ஒப்புக் கொடுத்தார்கள். மிகுந்த கோபம் வந்து விட்டது” என்றாள். அது எங்களுக்கு மிகுந்த கோபமாக காணப்பட்டது. அதைக் காட்டிலும் நாங்கள் அதிக கோபமடைய விரும்பவில்லை. பாருங்கள்? அதை அப்படியே விட்டு விட்டோம். சரி. 72சகோ. பிரான்ஹாமே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்... (ஓ, ஓ! இந்த கேள்வியை நான் படித்த ஞாபகம் உள்ளது. நான்... அதற்கு பிறகு பதிலளிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன், ஆனால் அதை இப்பொழுதே படித்து விடுவது நல்லது. அது ஏதோ ஒரு ஸ்திரீயின் கையெழுத்து. அவள் கென்டக்கியிலிருந்து வந்தவளாக இருக்க வேண்டும். ஏனெனில் அவளிடம் இங்கு காஸ்மாஸ் போர்ட்லாண்டு சிமெண்டு டிக்கெட் உள்ளது). சகோ. பிரான்ஹாமே, சபையிலுள்ள நமது சகோதரிகள் இப்படிப்பட்ட குட்டை உடைகளை உடுத்துவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அது நமது சாட்சியைக் குலைப்பதுடன் நமது சபையிலுள்ள இளைஞர்களுக்கு ஒரு தவறான உதாரணமாயிருக்குமல்லவா? வளர்ந்த ஒரு ஸ்திரீ அவ்வளவு குட்டை உடை உடுத்தினால், அவள் நடக்கும்போது அவளுடைய முழங்கால் காணப்படுகிறது. நீங்கள் யாராயிருந்தாலும், சகோதரியானாலும், சகோதரனானாலும், நீங்கள் யாராயிருந்தாலும், நீங்கள் கூறுவதை நான் நூறு சதவிகிதம் ஆமோதிக்கிறேன். அது அவமானம்! அதைக் குறித்து நான் என்ன செய்ய முடியுமென்று சொல்லுங்கள்! எனக்குத் தெரிந்தவரையில் அதைக் குறித்து நான் மிகவும் கடினமாக போதிக்கிறேன். எனவே அது அவர்களுக்கு நியாயத்தீர்ப்பா யிருக்கும், ஏனெனில் வார்த்தை புறப்பட்டு சென்றுவிட்டது. ஆம், நான் நிச்சயமாக சருமத்தோடு ஒட்டிக் கொண்டிருக்கும் அந்த உடைகளுக்கு எதிராயிருக்கிறேன்... நான் என் மகள்கள் பெக்கி, சாராளிடம் கூட கூச்சலிடுவதுண்டு. அவர்கள் எவ்வளவு சிறியவர்களாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. அவர்களும் கூட அவர்களுடைய உடைகளை ... மேடா ஒவ்வொரு நாளும் அதைக் குறித்து பொக்கியை தனியாக அழைத்துச் செல்கிறாள். பாருங்கள்? மேலே ஏறியிருக்கும் உடுப்புகள்... சிறு பிள்ளைகளிடம் அதை நீங்கள்எதிர்பார்க்க முடியாது, அவர்களை நீங்கள் திருத்த வேண்டும்; ஆனால் ஒரு ஸ்திரீ அவ்விதம் செய்யும்போது, அங்கு ஏதோ தவறுள்ளது. பாருங்கள்? 73உங்கள் மனது இப்பொழுது நோக்க வேண்டாம். நான் கேள்விகளுக்குத் தான் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். உங்கள் இருதயத்திலிருந்து என்னைக் கேட்கிறீர்கள்; நான் என் இருதயத்திலிருந்து உங்களுக்குச் சொல்லுகிறேன். உங்களுக்கு இதற்கு ஒரு தீர்வுகாண முடியுமென்றால், தயவு கூர்ந்து என்னிடம் சொல்லுங்கள், நான் நிச்சயம் செய்வேன், அதைக் குறித்து ஏதாகிலும் என்னால் செய்ய முடியுமானால். அன்றொரு நாள் ஒருவர் என்னிடம், “நல்லது, சகோ. பிரான்ஹாமே, ஆதாமும் ஏவாளும் என்ன புசித்தார்கள் என்று உங்களுக்குச் சொலலுகிறேன். அவர்கள் ஆப்பிள் பழத்தைத்தான் புசித்தார்கள்” என்றார். அவர்கள் இப்பொழுது அதை மாற்றி விட்டதாகக்காண்கிறேன். அவர்கள் என்ன புசித்தார்கள் என்று சொல்லுகிறார்கள்? அதற்கு ஏதோ ஒரு பெயருண்டு (சபையோரில் ஒருவர் 'ஏப்ரிகாட் என்கிறார் - ஆசி). ஏப்ரிகாட், ஆம். அவர்கள் ஏப்ரிகாட் பழத்தைப் புசித்ததாக கூறுகின்றனர். ஏப்ரிகாட் பழம் அவர்கள் நிர்வாணமாயிருப்பதை உணர வைக்குமானால், அவர்களுக்கு ஏப்ரிகாட் பழத்தைக் கொடுக்க நேரம் வந்து விட்டது. பாருங்கள்? 74சகோ. பிரான்ஹாமே, இந்நாளுக்கான தேவனுடைய செய்தியை நான் ஏற்றுக் கொண்டு விட்டேன், எங்கள் மகனும் கூட. நாங்கள் இருவரும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறோம். என் கணவர் செய்தியை ஏற்றுக் கொள்ளவில்லை, அவர் இந்த செய்தியை எதிர்த்துப் போராடுகிறார். எங்கள் மகனை அவர் வசீகரித்து அவனை மெதோடிஸ்டு சபைக்குக் கொண்டு செல்கிறார். நமது கூடாரத்தில் ஆராதனை இல்லாத போது அவருடன் நான் அந்த சபைக்குச் செல்ல வேண்டும் என்கிறார். அவருடன் நான் செல்வது சரியா, அல்லது அந்த ஸ்தாபனத் திலிருந்து விலகியிருத்தல் நலமாயிருக்குமா? நல்லது. இப்பொழுது, அருமை சகோதரியே... அவள் கையொப்பமிடவில்லை, ஒருக்கால் உன் கேள்விக்கான பதிலை நீகேட்டுக் கொண்டிருக்கலாம்; இல்லையென்றால் நீ அதை ஒலி நாடாவில் கேட்பாய். உன் கணவருடன் போ, ஆனால் அவர்கள் செய்வதில் நீ பங்கு கொள்ளாதே. பார், உன் கணவரை நீ நேசிக்க வேண்டியவளாயிருக்கிறாய், அன்பு தான் அதைச் செய்கிறது. நீ உண்மையில் உப்புத்தன்மை கொண்டவளாயிரு; அவருக்குள் ஏதாகிலும் இருக்குமானால், அவர் தாகமடைவார். அவர்களுடைய ஸ்தாபனத்தைச் சேராதே. “அந்த ஸ்தாபனத்திலிருந்து விலகியிருக்கலாமா” என்று நீ கேட்டிருக்கிறாய், அதை சேராதே; அங்கு போ. உனக்கு முழு ரொட்டி கிடைக்க வில்லையென்றால், பாதி ரொட்டியைப் பெற்றுக் கொள்; பாதி ரொட்டி கிடைக்கவில்லையென்றால், ஒரு 'ஸ்லைஸ்' ரொட்டி பெற்றுக் கொள். பார், பார்? அவ்விதம் செய்வதன் மூலமாகவே உன் கணவரை நீ வெல்ல முடியும். கர்வமாக இராதே. அப்பொழுது உன்னைப் போலவே அவருக்கும் கர்வம் உள்ளதென்று அவர் காண்பிப்பார். பார்? ஆனால் அவருக்கு இல்லாதது ஒன்று உனக்கு உள்ளதாக! நீ காண்பிக்க முடியுமானால், உன்னைப் போல் இருப்பதற்காக அது அவரைத் தாகமடையச் செய்யும். புருஷன் பரிசுத்தமாக்கப்பட்ட தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான் (1 கொரி. 7:14). இது ஒரு புத்திமதி மட்டுமே. இதன் பேரில் என்னால் நீண்ட நேரம் பேச முடியும், ஆனால் எத்தனை கேள்விகளுக்கு நம்மால் பதிலளிக்க முடியுமோ, அத்தனைக்கும் பதிலளிக்க விரும்புகிறோம். எனக்கு இன்னும் இருபத்திரண்டு நிமிடங்கள் மட்டுமே உள்ளதாகக் காண்கிறேன். சரி. 75சகோ. பிரான்ஹாமே, நீர் போதிக்கும் செய்தியை என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். அது என் ஆத்துமாவை சிலிர்க்க வைக்கிறது; எனினும், என் மனைவியும் மகனும் வார்த்தையில் களிகூருவதில்லை. அவர்களுடைய உலகப்பிரகாரமான பழக்கங்களிலிருந்து தங்களைப் பிரித்துக் கொள்ள அவர்களுக்கு மனமில்லை. நமது குடும்பங்களை நாம் உரிமை கோரி தேவனிடம் கேட்க வேண்டுமென்று நீர் கூறினீர். அவர்கள் வார்த்தைக்காக அல்லது வார்த்தையில் வாழாமலிருப்பதைக் காணும்போது, அதை செய்வது எனக்கு கடினமாயுள்ளது. நான் கடைபிடிக்க வேண்டிய வழி எது, ஐயா? அவர்களை நான் உரிமை கோரி விசுவாசிப்பதா, கேள்விகளும் பதில்களும் அல்லது“பிதாவே, உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக” என்று ஜெபித்து, இப்பொழுது நான் இருக்கும் இந்த நிலையில் திருப்தியடைவதா? உம்முடைய புத்திமதியை நான் பாராட்டுவேன், சகோ. பிரான்ஹாமே. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, என் சகோதரனே அல்லது சகோதரியே, நீங்கள் யாராயிருந்தாலும். அவர்களை நான் கர்த்தரிடத்தில் ஒப்புவித்து விடுவேன். நான்..... பாருங்கள், ஏனெனில் “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்” பாருங்கள்? ஜனங்களாகிய நீங்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம் 76அந்த தங்கும் விடுதி (motel) ஆட்களை நான் சென்று சந்தித்த போது, அது என் இருதயம் மகிழ்ச்சியினால் பொங்கும் படி செய்தது. நான் திரு. பெக்கரிடம் சென்றிருந்தேன். அவர், “பில்லி, உங்களுக்குத் தெரியுமா? ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் உங்கள் சபையோர் அனைவருக்கும் நான் உணவளிக்கிறேன்” என்றார் - 'ப்ளூ போர்' (Blue Boar)என்னும் அந்த உணவு விடுதி ஒவ்வொரு ஞாயிறன்றும் ஏறக்குறைய முன்னூறு பேர்களுக்கு உணவு அளிக்கிறது. பாருங்கள்? நான் இங்கு சென்றிருந்தேன், இங்குள்ள அந்த ஆள், 'ரான்ச் ஹவுஸ்ஸில் உள்ள நற்பண்பு கொண்ட அவர், மிகவும் அருமையானவர். நான் அவரைச் சந்தித்தேன்; நான், “நல்லது. அது உண்மையில் மிகவும் நல்லது. நீங்கள் அந்த ஆபாசமான காரியங்களையும், மற்ற காரியங்களையும் விலக்கியிருப்பதைக் குறித்து உங்களைப் பாராட்டுகிறேன்” என்றேன். அவர், “ஆம், ஐயா, சகோ. பிரான்ஹாமே” என்றார். நான், “அவருக்கு என்னை எப்படித் தெரியும்?” என்று நினைத்தேன். பாருங்கள்? நான் அவரிடம், “என்னை உங்களுக்கு எப்படித் தெரியும்? என்று கேட்டேன். அவர், “உங்களை எனக்குத் தெரியும். உங்கள் சபையோர் அனைவருக்கும் நான் ஒவ்வொரு ஞாயிறன்றும் உணவு தருகிறேன். உங்களிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன்: அவர்கள் மிகவும் நல்லவர்கள். அவர்கள் அருமையானவர்கள்” என்றார். பாருங்கள், அது எனக்கு நல்லுணர்வை அளித்தது. நீங்கள் என் பிள்ளைகள். பாருங்கள்? என் பிள்ளைகள் மிகவும்நல்லவர்களாக உள்ளனர் என்றும், அவர்கள் மிகவும் நல்ல விதமாக நடந்து கொள்கின்றனர் என்றும் நான் கேட்கும் போது, அது அப்பாவுக்கு மிகுந்த நல்லுணர்வைத் தருகிறது. பாருங்கள்? எனவே நீங்கள் புரிந்து கொள்வீர்கள். 77இப்பொழுது, இப்பொழுது, அம்மா... என் சகோதரியே, உன் கணவர் உன்னை மெதோடிஸ்டு சபைக்கு அவருடன் கூட செல்ல அழைப்பாரானால், நீ போ. உனக்கு ஒருக்கால் முழு ரொட்டியும் கிடைக்காது, ஆனால் அவர்கள் இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று விசுவாசிப்பதாக கூறினால், அதை விசுவாசி, ஏனெனில் நாமும் கூட அதை விசுவாசிக்கிறோம். அவர் கள் வழி விலகி வேறு காரியங்களுக்குச் செல்வார்களானால், அவர்கள் போகட்டும். ஆனால் நீ அவ்வளவு ரொட்டியை மாத்திரம் சாப்பிடு. பார்? அதன் மூலம் உன் வாழ்வின் இனிமையையும் மற்றவர்கள் பேரில் நீ கொண்டுள்ள அக்கறையையும் காண்பிக்கிறாய். இந்த நற்பண்புகள் உனக்கு இல்லாமல் போனால், அருமை சகோதரியே, அது உனக்குக் கிடைக்கும் வரைக்கும் ஜெபித்துக் கொண்டிரு. நீ ஒன்றையும் செயற்கையாக பாவனை செய்து கொள்ள வேண்டாம். ஏனெனில் நீ அவ்விதம் செய்யும் போது, அது உண்மையான ஒன்றாக இருக்காது. உன் கணவரால் அதை கண்டு பிடித்து விட முடியும். நீ உண்மையில் ஜெபித்து உன் வாழ்க்கை இரட்சகரின் உப்பினால் நிறைந்திருக்கும் நிலையை அடையும் போது, அது தொடர்பை உண்டாக்கும். “நான் உயர்த்தப்பட்டிருக்கும் போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக் கொள்வேன்” (யோவான் 12:32), நான் போவேன்; ஆனால் மிகவும் ஜாக்கிரதையாயிரு. அவர்களுடைய சபையை சேர்ந்து விடாதே! தயவு செய்து அதை மட்டும் செய்து விடாதே; அவர்களுடைய சபையை சேர்ந்து விடாதே, ஆனால் அங்கு போ! 78சகோ. பிரான்ஹாமே, இந்த கேள்வி இங்குள்ள எங்கள் பலருக்கு ஒருவிதம் குழப்பமாயுள்ளது. சில ஒலி நாடாக்களில், மணவாட்டி எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு யூதர்கள் மட்டும் இரட்சிக்கப்படுவதாக நீர் கூறியிருக்கிறீர் (அது கோடிடப்பட்டிருக்கிறது). எடுத்துக் கொள்ளப்படுதலில் போகாதிருக்கிற புறஜாதிகளைக் குறித்து தயவுகூர்ந்து முழுவதுமாக விளக்கவும். எடுத்துக் கொள்ளப்படுதலில் விடப்பட்ட புறஜாதிகள் உபத்திரவ காலத்தின் வழியாக கடந்து சென்றுதங்கள் ஜீவனை இயேசுவின் காட்சியினிமித்தம் கொடுத்தார்கள் என்று நீர் கூறினீர் என்று எண்ணினேன். அவர் புறஜாதிகளிலிருந்து யூதரிடம் திரும்பும்போது புறஜாதிகள் இரட்சிக்கப்பட இனி வேறு தருணமே இராதா, இரட்சிக்கப்பட்டு ஆனால் கடைசி கால சத்தியத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் உபத்திரவ காலத்தின் வழியாக கடந்து சென்று முடிவில் இரட்சிக்கப்படுவார்கள். இது சரியா? தயவு செய்து விளக்குங்கள். ஏனெனில் மிகவும் சிறிய எண்ணிக்கையே எடுத்துக்கொள்ளப் படுதலில் செல்வார்கள். என்று கூறியிருக்கிறீர். கர்த்தரை விசுவாசித்து, ஆனால் நீர் பிரசங்கிக்கும் விதமாக இந்த கடைசி காலச் செய்தியை விசுவாசிக்காத ஜனங்களைக் குறித்தென்ன? அவர்கள் இரட்சிக்கப்படுவார்களா? அந்த சகோதரி தன் பெயரைக் கையொப்பமிட்டிருக்கிறாள். இப்பொழுது. இது மிகவும் நல்ல கேள்வி. இப்பொழுது முதலாவதாக, உபத்திரவ காலத்தின் போது புறஜாதியாரின் நாட்கள் முடிவடைந்திருக்கும் என்று நான் கூறியதன் பேரில் தான் குழப்பம் நேர்ந்துள்ளது. இப்பொழுது, நான் காணமுடியாதது என்னவெனில், வேதத்திலுள்ள புறஜாதியினர்... புறஜாதி மணவாட்டி , மணவாட்டி, புறஜாதி சபை அல்ல, புறஜாதி சபை உபத்திரவ காலத்தின் வழியாக செல்லும் (பாருங்கள்?), ஆனால் அவர்களுடைய ... பாருங்கள், மணவாட்டி தெரிந்து கொள்ளப்பட்ட கூட்டம்; அவர்கள் எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்வதைத் தவிர, வேறு எதன் வழியாகவும் செல்வதில்லை. அவர்கள் மறுரூபமடைந்து, இவ்வுலகத்திலிருந்து எடுத்துக் கொள்ளப்படுகின்றனர். பாருங்கள்? இப்பொழுது. இதை நான் இங்குள்ள மற்றொரு கேள்வியில் விளக்கி, லூத்தரிலிருந்து படிப்படியாகக் கொண்டு வருகிறேன், அப்பொழுது அதன் அர்த்தம் என்னவென்று நீங்கள் புரிந்து கொள்வீர்கள். அது சரீரம் முதிர்வடைவது. பாருங்கள்? இப்பொழுது கவனியுங்கள். இப்பொழுது, விடப்பட்ட யூதர்களுக்கு தான், எலியா, மோசே ஆகிய இரண்டு தீர்க்கதரிசிகளும் பிரசங்கிக்கின்றனர். 79இப்பொழுது, ஊழியக்கார சகோதரரே, இது என் சொந்த கருத்து, பரிசுத்த ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்தினதாக நான் உணருகின்ற என் சொந்த முறை. இப்பொழுது, அடுத்தபடியாக நடக்கவிருப்பது. தெரிந்து கொள்ளப்பட்ட புறஜாதி மணவாட்டி, காலங்கள் தோறும் தெரிந்து கொள்ளப்பட்ட புறஜாதி மணவாட்டியுடன் கூட ஒன்றாக எடுத்துக்கொள்ளப்படுதலே - ஆகாயத்தில் கிறிஸ்துவின் சமுகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுதல். மரித்தோர் உயிர்த்தெழுகின்றனர்; உயிரோடிருப்பவர் மறுரூபமடைகின்றனர்; அவர்கள் ஒன்று சேர்ந்து எடுத்துக்கொள்ளப்பட்டு கர்த்தரை ஆகாயத்தில் சந்திக்கின்றனர். பிறகு, ஏனெனில்... மகிமையில் கலியாண விருந்துக்குப் பிறகு, இயேசு - அவர்கள் ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு, இயேசு பூமிக்குத் திரும்பி வந்து தமது ஜனங்களுக்கு தம்மை வெளிப்படுத்துகிறார், யோசேப்பு தன் சகோதரருக்கு தன்னை வெளிப்படுத்தினது இதற்கு முன்னடையாளமாயுள்ளது. அவனுடைய மனைவி - யோசேப்பைத் தவிர வேறு எந்த புறஜாதியும் அங்கிருக்கவில்லை, யோசேப்பு தன்னை தன் சகோதரருக்கு வெளிப்படுத்தின போது. இதை எல்லோரும் புரிந்து கொண்டீர்களா? 80அவன் அனுப்பி விட்டான். அவனுடைய மனைவியும் கூட அப்பொழுது அரண்மனையில் இருந்தாள், அந்த நேரத்தில் மணவாட்டி மகிமையில் அரண்மனையில் இருப்பாள் என்பதற்கு இது எடுத்துக்காட்டாய் உள்ளது. கலியாண வைபவமாகிய 31/, ஆண்டுகளுக்குப் பிறகு இயேசு தம்மை யூதர்களுக்குத் தெரியப்படுத்துகிறார் - யாக்கோபின் இக்கட்டுக்காலம், அந்த 3', ஆண்டுகள், தானியேலின் எழுபதாம் வாரத்தின் முடிவு. மேசியா அந்த வாரத்தின் நடுவில் சங்கரிக்கப்பட வேண்டும்... அவர் 3'/, ஆண்டுகள் தீர்க்கதரிசனம் உரைத்து அதன் பிறகு சங்கரிக்கப்பட்டார். பிறகு மோசேக்கும் எலியாவுக்கும் 3'/, ஆண்டுகள் விடப்பட்டுள்ளன. தானியேல் கூறின வண்ணமாக, ஜனங்களின் மேல் குறிக்கப்பட்ட அந்த எழுபது நாட்கள் முடிவடைந்த பிறகு, இயேசு அவர்களுக்கு தம்மை வெளிப்படுத்த வேண்டும். அவர் யூதர்களுக்கு வரவேண்டிய அதிபதி. பாருங்கள்? 81பிறகு, அந்த நேரத்தில்... பாருங்கள், புறஜாதி மணவாட்டி பரலோகத்தில் இருக்கிறாள், நித்திரையடைந்துள்ள கன்னிகை, புறஜாதி கன்னிகை: அந்த நேரத்தில் இரட்சிக்கப் படுவதில்லை; அவள் ஏற்கனவே இரட்சிக்கப்பட்டு விட்டாள், ஆனால் மணவாட்டியில் இராதபடிக்கு அவள் புறக்கணிக்கப்பட்டாள்.அவள் சுத்திகரிப்புக்காக உபத்திரவ காலத்தின் வழியாக கடந்து செல்கிறாள், ஏனெனில் அவள் தனக்கு சுத்திகரிப்பு அளிக்கும் வார்த்தையாகிய கிறிஸ்துவை புறக்கணித்து விட்டாள். அவளுடைய செய்கைகளுக்காக அவள் பாடுபட வேண்டும், ஆனால் வார்த்தையாகி விட்ட மணவாட்டியோ; கிறிஸ்து முழுவதுமாக அவளுக்காக பாவநிவிர்த்தி செய்து விட்டார், ஏனெனில் அவரே வார்த்தையாயிருக்கிறார். சரீரம் கிழிக்கப்பட்டது; அந்த சரீரம் கிழிக்கப்பட்ட போது, மணவாட்டி அந்த சரீரத்தில் இருந்தாள், ஏனெனில் அது எல்லாமே வார்த்தையாயுள்ளது! ஆமென்! உங்களுக்கு விளங்குகிறதா? 82152: இயேசு அந்த சரீரத்தில் பாடுபட்டபோது, அவர் பாடு பட்டார். ஏனெனில் மனுஷனும் மனுஷியும் ஒரே நபர். ஏவாள் ஆதாமிலிருந்து வெளியே எடுக்கப்பட்டாள், சபையும்.... என்ன நடந்தது? தேவன் ஆதாமின் விலாவைத் திறந்து, அவனுக்கு உதவியாயிருக்க மணவாட்டியை வெளியே எடுத்தார். அவ்வாறே தேவன் கல்வாரியில் இயேசுவின் விலாவைத் திறந்து மணவாட்டியை வெளியே எடுத்தார். பாருங்கள்? இயேசு கல்வாரியில் மரித்த போது. . சரீரம் மரிக்கும் வரைக்கும், மணவாட்டி அந்த சரீரத்திலிருந்து வெளியே எடுக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள், அவர் ஏற்கனவே மரித்து விட்டார், அவருடைய கால்களை அவர்கள் முறிக்கவிருந்தனர். தீர்க்கதரிசி “அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை” என்று சொன்னான் (சங். 34:20). எனவே அவருடைய கால்களை முறிக்க அவர்கள் ஒரு சுத்தியலைக் கையில் லெடுத்தனர். அப்பொழுது ஒரு மனிதன் ஒரு ஈட்டியுடன் சென்று அவருடைய இருதயத்தில் குத்தினான்; அப்பொழுது தண்ணீரும் இரத்தமும் வெளி வந்தது. அவர் ஏற்கனவே மரித்திருந்தார். அவருடைய சரீர மரணத்தின் மூலமாய் அவள் ஏற்கனவே மீட்கப் பட்டு விட்டாள், எனவே மணவாட்டிக்கு பாடனுபவிக்கும் உபத்திரவ காலம் ஒருக்காலும் இருப்பதில்லை. பாருங்கள்? அவள் உள்ளே சென்று விடுகிறாள். ஆனால் அவர் பேரில் விசுவாசம் கொண்டு ஸ்தாபன கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டுள்ள புறஜாதி சபை ... 83இந்த ஏழை நபர், “என் கணவனும் மகனும் இன்னும் உலகத்தின் காரியங்களில் அன்பு கொண்டுள்ளனர்” என்று கூறினது போல... பாருங்கள், அவர்கள் அந்த மீட்பை ஏற்றுக் கொள்ளவில்லை.நீங்கள் அதை ஏற்றுக் கொள்ளும் போது, அது உங்களைத் தானாகவே சுத்திகரித்து விடுகிறது. “தேவனால் பிறந்த எவனும் பாவஞ் செய்யான்” (1 யோவான் 3:9). அவனுக்கு உலகத்தின் காரியங்களின் பேரில் வாஞ்சையே இல்லை. “ஒருவன் உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூர்ந்தால், அவனிடத்தில் தேவனின் அன்பு இல்லை” என்று இயேசு கூறியுள்ளார் (1 யோவான் 2:15). அப்படிப்பட்டவனுக்கு மணவாளனின் மேல் அன்பில்லை. பாருங்கள்? எனவே அவள் தண்டனையை அனுபவிக்க வேண்டியதாயுள்ளது.... அவள் அந்த நேரத்தில் இரட்சிக்கப்படுவதில்லை; அவள் நித்திய மரணத்திலிருந்து இரட்சிக்கப்படுகிறாள்; ஆனால் சுத்திகரிப்புக்கென்று அவள் உபத்திரவ காலத்தின் வழியாக கடந்து செல்ல வேண்டும். நான் கூறுவது விளங்குகிறதா? இப்பொழுது. இப்பொழுது, அந்த கேள்விக்கு பதிலளிக்கப்பட்டு விட்டதென்று எண்ணுகிறேன். வேறெதாவது இங்குள்ளதா என்று பார்ப்போம். 84“தயவுகூர்ந்து விளக்குங்கள், ஏனெனில் ஒரு சிறு எண்ணிக்கையே எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்லும் என்று நீர் கூறியிருக்கிறீர்”. அதாவது இவர்கள் பூமியில் உயிரோடிருந்து மறுரூபமடையப் போகின்றவர்கள். “ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டு பிடிக்கிறவர்கள் சிலர்” என்று இயேசு கூறியுள்ளார் (மத். 7:14). “இப்பொழுது கர்த்தரை விசுவாசித்து, நீர் பிரசங்கிக்கும் விதமாக விசுவாசியாதவர்களைக் குறித்தென்ன?” அவர்கள் இதை விசுவாசிக்க வேண்டியதில்லை. நான் பிரசங்கிக்கும் விதமாக அவர்கள் விசுவாசிக்க வேண்டியதில்லை. பாருங்கள்? அவர்கள் அதை விசுவாசிக்க வேண்டியதில்லை... கடைசிக் காலச் செய்தியை விசுவாசியாதவர்கள். அவர்கள் இரட்சிக்கப்படுவார்களா?“ ஆம், அவர்கள் கர்த்தரை விசுவாசிப்பார்களானால். பாருங்கள்? அவர்கள் இணங்காமல், ”அவர் வார்த்தை என்று நான் விசுவாசிக்க மாட்டேன். இது சரியென்று நான் விசுவாசிக்க மாட்டேன். பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் பேரில் எனக்கு நம்பிக்கை இல்லை“ என்பார்களானால், அவர்கள் எதை நோக்கிச்செல்கின்றனர் என்பதை அது காண்பிக்கிறது - உபத்திரவ காலத்தை நோக்கி. ஆனால் வார்த்தையை அதன் முழுமையில் ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள், அதை நான் பிரசங்கிப்பதனால் அல்ல, வேதம் அவ்விதம் உரைக்கிறது. அதை ஏற்றுக் கொள்கிறவர்கள் விடுதலையடைகின்றனர், ஏனெனில் வார்த்தை ஏற்கனவே நியாயந் தீர்க்கப்பட்டு விட்டது. 85ஏற்கனவே ஒன்றுக்கு தண்டனைக்கான கிரயம் செலுத்தப்பட்டிருந்தால், நீதியுள்ள நியாயாதிபதி அதற்காக ஒரு மனிதனை இரு முறை நியாயந்தீர்க்க முடியுமா? நான் அடகு கடையில் இருந்து, நீ அங்கு வந்து, “இவனை நான் மீட்கப் போகிறேன்” என்று சொல்லிவிட்டு, என் மீட்புக்கான கிரயத்தை நீ செலுத்தி விடுவாயானால் (அதுவே நான் அடகு கடையிலிருந்ததனால் உண்டான தண்டனை), அடகு கடையின் சொந்தக்காரன் அதை எப்படி மறுபடியும் கேட்க முடியும்? நான் மறுபடியும் என்னை விற்றுப் போட்டாலொழிய. பார்த்தீர்களா? வார்த்தையின் பரிபூரணத்தை நான் புறக்கணிக்கும் போது, நான் மீண்டும் அடகு கடைக்குச் சென்று விடுகிறேன். பாருங்கள், பாருங்கள். அதன் பிறகு, என்னால் கூடுமானால், போராடிக் கொண்டு வெளியே வருவேன். ஆனால் அவர் என்னை மீட்டுக் கொண்டார். சரி, நான் நம்புகிறேன், அது... இன்னும் எத்தனையோ கேள்விகள் இங்குள்ளன, அவைகளைப் பார்க்க விரும்புகிறேன் (ஒலிநாடாவின் முதல் பக்கம் முடிகிறது. இரண்டாம் பக்கத்தில் கேள்வியின் ஒரு பாகம் இல்லை - ஆசி). 86... இந்த மூன்றாம் இழுப்பு வார்த்தையை உரைத்தல். நீர் வார்த்தையை உரைப்பீரென்றால், ஒருவன் முழுவதுமாக சரீர மீட்படைந்து, உயிர்த்தெழுதலில் எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்வதற்கு முற்றிலும் ஆயத்தமாயிருக்க சாத்தியம் உண்டு என்பது போல் தோன்றுகிறது, மனுஷ குமாரன். இது அப்படித்தானா, இல்லையா? நீங்கள் சரியான விதத்தில் நெருக்கப்பட்டால் இதை செய்வீர்கள். “இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்பீர்கள் அல்லவா? (லூக். 21:36). இப்பொழுது, என் - என் அருமை நண்பனே. பாருங்கள்? இப்பொழுது, நீங்கள் - நீங்கள் - நீங்கள் ஒரு நல்ல வாக்கியத்தை சொல்லியிருக்கிறீர்கள். ஆம், ஐயா! ஆம், ஐயா! இப்பொழுது, அது அப்படி இருக்கும். நீங்கள் “சகோ. பிரான் ஹாம்...' என்று கூறியிருக்கிறீர்கள். வேறு விதமாகக் கூறினால், இது தான் நான்... நான் நினைக்கவில்லை அது... என்னால் கூடுமென்று... நான் நம்புவது, நான் . ... நீர் கூறினதை மெருகேற்றவில்லை, ஆனால் இதை ஜனங்களுக்கு சிறிது அதிகமாக தெளிவுபடுத்த முடியுமென்று நம்புகிறேன். பாருங்கள்? நீங்கள் இவ்வாறு விசுவாசிக்கும் காரணம், அவர் என்னிடம் கூறி உரைக்கப்பட்ட வார்த்தைகளினால் நிகழ்ந்தவை களைக் கண்டதனாலே. நீங்கள் எல்லாரும், அணில்கள் சிருஷ்டிக்கப்பட்டதையும், மற்ற காரியங்கள் செய்யப்பட்டதையும் அறிந்திருக்கிறீர்கள். ஆனால் அது தேவன் தமது இராஜ்யாதிபத்தியத்தினால் அளித்த ஒன்று என்பதை கவனித்தீர்களா? நான் அவரிடம், “கர்த்தாவே, இதை நான் செய்யட்டும், வார்த்தையை இவ்விதம் உரைத்து இவைகளைச் செய்யட்டும்” என்று ஒருபோதும் கேட்கவில்லை. அவரை நான் கேட்கவேயில்லை. அவர் தமது தெய்வீக சித்தத்தின்படி என்னிடம் வந்து, “நீ போய் இதை செய்” என்றார். பாருங்கள்? நான் அதைக் குறித்து ஒன்றுமே கேட்கவில்லை. மோசே எகிப்துக்கு போக வேண்டுமென்று கேட்கவில்லை, தேவன் தான் அவனை எகிப்துக்கு அனுப்பினார். பாருங்கள்? 87பரிசுத்த ஆவியானவர் என்னிடம் ஒரு தரிசனத்தில் வந்து, “இந்த குறிப்பிட்ட நபரிடம் சென்று, அவர்கள் குறிப்பிட்ட ஒன்றை மேற்கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர், அவர்களால் முடியாது (அவர்கள் புகைபிடிக்கின்றனர், குடிக்கின்றனர், பொய் சொல்கின்றனர், திருடுகின்றனர், அல்லது விபச்சாரம் செய்கின்றனர், அது எதுவாயிருந்தாலும்; அல்லது அவர்களுக்கு இச்சையின் ஆவி உள்ளதென்று வைத்துக் கொள்வோம்). நீ அவர்கள் இருக்கும் இடத்துக்கு சென்று, 'ஆவியே, அங்கிருந்து வெளியே வா. சிறைப்பட்ட இவரை விடுதலையாக்குகிறேன் என்று சொல்” என்று சொல்வாரானால்! அது நடக்குமா? நிச்சயமாக. ஆம், அது நிச்சயமாக நடக்கும். ஆனால், நானே என் சொந்த ஊகத்தினால். ... 'ஊகித்தல்' (presuming)என்பது “அதிகாரம் பெறாமல் செய்யத் தைரியப்படுவது என்று பொருள்படும். பாருங்கள்? இந்த நபருக்கு உதவி செய்ய நான் அங்கு செல்கிறேன்; அது சரியாயிருக்கும் என்று நான் ஊகிக்கிறேன். பாருங்கள்? ஆனால் எனக்குத் தெரியாது, அவர்கள் மேல் நான் கர்த்தருடைய நாமத்தை சொல்லி அழைக்க முடியாது; அவர்களுக்காக நான் ஜெபிக்கலாம், எனக்கு விருப்பமான எதையும் செய்யலாம். 88இன்று காலையில் விருப்பமானதைச் செய்ய எனக்கு அனுமதி இருக்குமானால்... சக்கர நாற்காலியில் உட்கார்ந்துகொண்டிருக்கிற இந்த ஸ்திரீயுடன் சற்று முன்பு தான் எனக்கு பேட்டி ஒன்று இருந்தது. இந்த கூட்டத்துக்கு இன்று வருவதற்காக, அவளை சிக்காகோவிலுள்ள அவளுடைய வீட்டிலிருந்து கொண்டு வருவதற்காக, தீயணைக்கும் பிரிவினரின் உதவியை அவர்கள் நாட வேண்டியதாயிருந்தது; அப்படியிருக்க தெருவின் மறுபக்கத்திலுள்ளவர்கள் கூட்டங்களுக்கு வருவதில்லை. பாருங்கள்? நான் என்ன செய்வேன்? எனக்கு அதிகாரமிருக்குமானால்... அது... அதைச் செய்ய எனக்கு அதிகாரம் உண்டு. ஆனால் அதைச் செய்வதற்கான கட்டளைக்காக நான் காத்திருக்க வேண்டும், பாருங்கள்? அதைச் செய்ய நான் தேவனிடத்திலிருந்து அதிகாரம் பெற்றிருக்கிறேன்; ஆனால் இப்பொழுது, அவர் கட்டளை கொடுக்கும் போது, அவள் குணமடைந்து வீடு செல்வாள். பாருங்கள்? அது உண்மையென்று எனக்குத் தெரியும். அதன் பேரில் இன்று காலை நான் மரிக்கவும் சித்தமுள்ளவனாயிருக்கிறேன். பாருங்கள்? அது உண்மை . ஆனால் முதலாவதாக, பாருங்கள், அது எல்லாமே... இருவருமே செய்ய முடியாது, இயேசுவும் கூட, “குமாரன் தாமாய் எதையும் செய்ய முடியாது. பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்” என்று கூறியுள்ளார். அது நமக்குத் தெரியும், பரி. யோவான் 5:19, சரி, “பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அவையேயன்றி வேறென்றையும் தாமாய்ச் செய்ய மாட்டார். அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்”. சரி. 89பல ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் தரிசனத்தில் இந்தியானாவரிலுள்ள காரிடன் அருகில் பெரிய அற்புதம் நடக்கும் என்று கண்டீர்களே, அது நிறைவேறி விட்டதா? இந்த கேள்வி எனக்குக் கிடைத்த போது என் புத்தகத்தில் நான் தேடிப் பார்த்து ஒரு கேள்விக்குறியை இட்டேன், இந்த கேதுரு மரங்கள் எங்கிருக்கும் என்று நான் கவனிக்க வேண்டிய நேரம் ஓன்றிருந்தது... நீங்கள் அங்குள்ள மலையிலிருந்து தொடங்கி, மறுபக்கத்தில், காரிடனுக்குப் போகும் வழியில், நீங்கள் நியூ ஆல்பனியிலுள்ள மலையின் உச்சியை விட்டு வந்த பிறகு. எனக்கு நேரிட வேண்டிய ஒரு பயங்கர விபத்துக்காக நான் அந்த கேதுரு மரங்களை கவனிக்க வேண்டும் என்பதாய் இருந்தது. ஆனால்தேவனுடைய கிருபையினால் நான் அதிலிருந்து தப்பித்துக் கொண்டேன். அப்பொழுது விஸ்கியை ஒரு குப்பியிலிருந்து குடித்துக் கொண்டிருந்த ஒரு இளம் பெண் கொல்லப்பட்டாள். அந்த குப்பி அவள் வாயிலிருந்தவாறே அவளுடைய தொண்டை அங்கேயே அறுபட்டது - பதினாறு வயது பெண். அந்த நேரத்தில் நான் அங்கிருந்தேன். பாருங்கள்? நீங்கள் குறிப்பிட்டது ஒருக்கால் அதுவாக இருக்கக் கூடும். அதை நான் படித்தேன். 90மேலும், சகோ. பீன்ப்ளாஸ்ஸம் என்பவரின் இடத்தில் எனக்கு அந்த கூட்டம் இருந்தபோது... அது ஒருக்கால் அதுவாக இருக்கலாம், அல்லது ஜார்ஜி கார்டர் என்பவரின் இடத்தில் நடந்த கூட்டமாயிருக்கலாம். பாருங்கள்? அங்கு வேறொன்று நடந்தது. அங்கு நான்கைந்து பேர் இருந்தனர். நிறைவேறாத ஒன்றையும் நான் கண்டதில்லை. இதை எழுதின நபர் எனக்கு மறுபடியும் எழுதி, அந்த நேரத்தில் நான் என்ன கூறினேன் என்று தெரிவிப்பாரானால், அதை நான் படித்து அறிந்து கொள்வேன். பாருங்கள்? அந்த தரிசனத்தைக் குறித்து நான் என்ன சொன்னேன் என்று எனக்குத் தெரிவிப்பீர்களானால்... ஏனெனில் நான் புத்தகத்தில் எழுதி வைத் திருப்பவைகள் நான் தரிசனத்தில் கண்டவைகளையே. இங்கே அது இவ்விதம் நடந்தது. அதைத் தவிர எனக்குத் தெரியாத வேறொன்றையும் நான் எழுதி வைக்கவில்லை 91பிறகு வேறொன்றும் நடந்தது; அது அந்த நேரத்தில் எனக்கு விரோதமாக மிகவும் குற்றம் கண்டுபிடித்த ஓமர் ப்ரைஸ் என்பவரின் மனமாற்றமாகும். உங்களுக்குத் தெரியும், அவர் இந்த கூடாரத்துக்கு வந்து கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஞானஸ் நானம் பெற்றுக் கொண்டார். ஓ, அதன் பேரில் அவர் என்னை கடுமையாக எதிர்த்தார்; இரவு நேரத்தில் அவருடன் நான் தங்கினேன். அவருடன் தங்கியிருந்து அவரை நேசித்துக் கொண்டேயிருந்தேன். முடிவில் அவர் வந்தார், ஏனெனில் அவர் வருவாரென்று கர்த்தர் என்னிடம் உரைத்திருந்தார். எனவே நான் அதிலே நிலை கொண்டிருந்தேன். பாருங்கள்? எனக்குப் பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கிற இந்த பிரசங்கியாரின் விஷயத்திலும் அதே தான். ஒரு முறை நான் க்ளார்க்வில்லில் அவர் போதகராயிருந்த அந்த மெதோடிஸ்டு சபையில் பேசுவதற்காக சென்றிருந்தேன். அவர் முழுக்க முழுக்க மெதோடிஸ்டாக இருந்தார் - நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்குப் புரியும். நான் இங்கு திரும்பி வந்தேன். “என்றாகிலும் ஒரு நாள் அவருக்கு நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுப்பேன்” என்றேன். நான் அவ்வாறே ஞானஸ்நானம் கொடுத்தேன்; அது சகோ. நெவில். 92அழகுபடுத்தும் கடை ஒன்றை நான் வைத்து நடத்துவது தவறா? நான் அழகுபடுத்தும் தொழிலை செய்பவள், கிறிஸ்தவ பெண்கள் தங்கள் தலைமயிரைக் கத்தரித்துக் கொள்வதை நான் ஆதரிப்பதில்லை; நான் மற்றவர்களின் தலை மயிரைக் கத்தரித்து அதற்கு சாயமும் போடுகிறேன். அருமை சகோதரியே, உனக்கு என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. கவனி, ஸ்திரீகள் தங்கள் தலைமயிருக்கு சாயம் போடுவதைக் குறித்து என்னால் ஒன்றும் சொல்ல முடியாது. அதற்கு விரோதமான வேதவசனம் எதுவும் எனக்கில்லை. நான் வேதவசனத்தில் மட்டுமே நிலைகொண்டிருக்க வேண்டும். பார்? அவ்விதம் அவர்கள் செய்யக் கூடாது என்று வேதம் உரைக்கவில்லை. அவள் நீண்ட தலைமயிரை உடையவளாயிருக்க வேண்டும் என்று தான் வேதம் போதிக்கிறது. அதற்கு பிறகு, எங்கே போவதென்று எனக்குத் தெரியவில்லை. பார்? அதைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. 93எனக்கு நெருங்கிய நண்பரான ஒரு போதகர் இங்கு எங்கோ இருக்கிறார். அன்றொரு நாள் நாங்கள் ப்ளூ போர் என்னும் விடுதிக்கு நடந்து சென்று உணவு அருந்தினோம். அவர் என்னிடம், “என் மனைவி உமக்கு முன்னால் வர வெட்கப்படுகிறாள்' என்றார். அவள் பரிசுத்தமுள்ள, தேவபக்தியுள்ள ஸ்திரீ, நற்பண்பு கொண்டவள், பாட்டியாகி விட்டவள். அவள் நல்லவள், சுத்தமுள்ளவள், உண்மையிலேயே... என் மனைவிக்கு இவள் மேல் அலாதி பிரியம். அவள்... அவள் இங்கு உட்கார்ந்திருக்கிறாளோ என்று எனக்குத் தெரியாது; அவள் இங்கிருக்கிறாள் என்று நினைக்கிறேன். அவளுடைய கணவர் இங்கிருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் என்னிடம், ”உங்கள் பிரசங்கத்தைக் கேட்ட பிறகு அவள் தலைமயிரை நீளமாக வளர்க்கத் தொடங்கி விட்டாள். அது சரியென்று அவள் அறிந்து கொண்டாள். ஆனால் அவள் தலைமயிருக்கு சில சாயங்களை உபயோகித்து வந்தாள். அவள் உமக்கு முன்பாக வருவதற்கு முன்பு அதையெல்லாம் போக்கிவிட்டு வரவேண்டுமென்று மிகவும் பிரயாசப்படுகிறாள்' என்றார். 94இப்பொழுது பார், அருமை சகோதரியே, அதை நான் மிகவும் மதிக்கிறேன். அவ்விதம் செய்யும் ஸ்திரீயின் மேல் எனக்கு மிகுந்த மதிப்புண்டு. சில ஸ்திரீகள் தங்கள் தலைமயிரை எல்லா விதங்களிலும் அலங்கரித்துக் கொண்டு, உங்கள் கால்களில் துப்பி கர்வம் கொண்டவர்களாய், எந்த மரியாதையும் கொடுக்காமல் நடக்கின்றனர். இயேசு, “அவர்களுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்' என்றார். பாருங்கள்? உன் மனப் பான்மையை நான் மதிக்கிறேன், அதற்காக தேவன் உன்னை ஆசீர்வதிப்பார். ஆனால், சகோதரியே, தலைமயிருக்கு சாயம் போடும் விஷயத்தில் எனக்கு ஒன்றும் தெரியவில்லை. அதை வேத வசனத்தைக் கொண்டு என்னால் ஆதாரப்படுத்த முடியாது. எனவே அது உன்னை பொறுத்தது. பார்? அதை நீ செய்ய விரும்பினால், அதனால் எனக்கு ஆட்சேபனை ஒன்றுமில்லை. எனக்குத் தெரிந்த வரையில், என் சபையில் அந்த வழக்கம் கிடையாது. நீ செய்ய விரும்பினால்.... வேதத்தில் இல்லாத எந்த ஒன்றும், நல்லது, நீ... அது உன்னைப் பொறுத்த விஷயம். பார்? ஆனால் என் ஆலோசனையை உனக்குத் தருவேன், பார் , எனக்குத் தெரிந்த வரையில் ... அழகாகக் காணப்பட வேண்டு மென்பது ஸ்திரீயின் இயல்பு என்று உனக்குத் தெரியும்; அவள் அந்த விதமாக இருப்பதாக கருதப்படுகிறாள். 95மானிட வர்க்கத்தைத் தவிர மற்றெல்லா வர்க்கத்திலுமே, ஆண் தான் மிகவும் அழகுள்ளது என்று உனக்குத் தெரியும். பறவை, பசு, எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள். மாடு இனத்தை எடுத்துக் கொள்வோம். எது மிகவும் அழகுள்ளது? சுருங்கிப் போன கொம்பையுடைய பசுவா அல்லது பெரிய காளையா? மானை எடுத்துக் கொள், எது மிகவும் அழகுள்ளது, பெண் மானா? ஆண் மானா? கலைமானை எடுத்துக் கொள்வோம், எது மிகவும் அழகுள்ளது? ஆணா? பெண்ணா? நீர் எருமை, எதை வேண்டு மானாலும் எடுத்துக் கொள். பறவை இனத்தை எடுத்துக் கொள். சேவலா, கோழியா, எது மிகவும் அழகுள்ளது? பார்? வர்க்கங்கள் அனைத்திலும் எப்பொழுதும் ஆண்தான் மிகவும் அழகுள்ளது. ஆனால் மானிட வர்க்கத்தில் மாத்திரம் பெண் தான் மிகவும் அழகுள்ளவள். ஏன்? அவள் தான் வீழ்ச்சி உண்டாக காரணமாயிருந்தாள். சாத்தான் அவளை அங்கேயே தெரிந்து கொண்டான், அழகு பிசாசினால் உண்டானது. பார்? 96சாத்தான் தான் தேவதூதர்களிலேயே மிகவும் அழகுள்ளவன். அவன் சிங்காசனத்தை மூடிக் கொண்டிருந்த கேரூபின், ஸ்திரீ முன்னைக்காட்டிலும் இப்பொழுது எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறாள் என்று பார். எத்தனை பேர் பெர்ல் ஓப்ரயனைக் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்கள்? மக்கள் கரங்களைப் பார்ப்போம், முதியோரில் சிலர். நிச்சயமாக. பாருங்கள்? அவள் அமெரிக்காவிலேயே மிகவும் அழகுள்ள பெண் என்று கருதப்பட்டவள். ஆனால் இன்று தெருவில் காணும் எந்த ஒரு இளம் பெண்ணும் அவளைக் காட்டிலும் இரட்டிப்பாக அழகுள்ளவளாயிருக்கிறாள். என்? அதை தான் வேதம் உரைத்துள்ளது. “தேவ குமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு... அந்த துரோகிகளின் கூட்டம் தான் பூமிக்கு ஜலப்பிரளயம் அனுப்பப்பட காரணமாயிருந்தனர், தேவன் மானிட வர்க்கம் முழுவதையும் அழித்து போட்டார். பாருங்கள்? இன்றைக்கு எல்லாமே ஹாலிவுட்டையும், அழகையும், அது போன்றவைகளையும் ஆதாரமாகக் கொண்டுள்ளது. ஆனால் அழகு என்பது இருதயத்தில் மறைந்திருக்கிற ஒன்றேயன்றி (பாருங்கள்?) அது வெளிப்புற தோற்றம் அல்ல. ”அவர்கள் தங்களை அலங்கரித்துக் கொள்ளட்டும், ஆனால் புறம்பான அலங்கரிப்பினால் அல்ல, உள்ளான அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக் கடவது' (1 பேதுரு 3:3-4), அதுதான் கிறிஸ்தவன். எனவே இப்பொழுது, உன் கேள்விக்கு, சகோதரியே, உனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இந்த கேள்வியுடன் நான் நிறுத்திக் கொள்ளலாம், அல்லது இன்னும் முப்பது நிமிடங்கள் எடுத்துக் கொள்ளலாம். முப்பது நிமிடங்கள்... எத்தனை பேருக்கு இன்னும் முப்பது நிமிடங்கள் தங்கியிருக்க முடியும், அப்படியானால் அது இன்றிரவு நமக்கு இன்னும் சிறிது நேரம் தரும். நல்லது. நான் விரைவாக முடிக்கிறேன். 97சகோ. பிரான்ஹாமே. 1 தீமோத்தேயு 2:9ன்படி, ஒரு ஸ்திரீ மயிரைப் பின்னக்கூடாதா? 'பிராய்ட்' என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு மயிரைப் பின்னுதல் (braid) என்று அர்த்தமா? இப்பொழுது பார், சகோதரியே, இப்பொழுது இது... போன கேள்வியைத் தொடர்ந்து இது வந்ததைக் குறித்து மகிழ்ச்சியடைகிறேன். அதை நான் அந்த இடத்தில் பொருத்தவில்லை. அது தானாகவே தொடர்ந்தது நல்லது. கவனியுங்கள், அந்நாளில், பின்னப்பட்ட தலைமயிர் ஒரு தெருப் பெண்ணுக்கு (வேசிக்கும் அடையாளமாயிருந்தது. அவள் அதை தான் செய்தாள். தன் தலைமயிரைப் பின்னினாள். பவுல் கிறிஸ்தவர்களுக்கு “மயிரைப் பின்னுதலினால் உங்களை அலங்கரித்துக் கொள்ள வேண்டாம்...' என்றான். ஏனெனில் அது உலகில் உள்ள மற்றவர்களைப் போல் காட்சியளித்தது. இப்பொழுது, நீங்கள் உலகத்தாரைப் போல் காணப் படவோ அல்லது நடந்து கொள்ளவோ கூடாது. பாருங்கள்? ஸ்திரீகள் அவர்களை விட வித்தியாசமுள்ளவர்களாய் இருக்க வேண்டும். பாருங்கள்? இல்லை, இப்பொழுது, பின்னிய தலைமயிர்... இப்பொழுது, இன்றைக்கு பின்னிய தலைமயிர் அழகாயும், உலகத்தின் நாகரீகத்துக்கு மிகவும் அப்பாற்பட்டதாயும் உள்ளது. ஸ்திரீகள் இன்று தங்கள் தலைமயிரை அலங்கரித்துக் கொள்ளும் விதத்தை நீங்கள் கண்டிருக்கிறீர்கள். உங்கள் தலைமயிரை நீங்கள் எந்த விதத்திலும் வைத்துக் கொள்ளுங்கள்; ஆனால் உலகத்தாரைப் போல் மட்டும் காணப்படாதீர்கள்! உலகத்தாரைப் போல் காணப்படாதீர்கள், அவர்களைப் போல் உடுத்திக் கொள்ளாதீர்கள்! அவர்கள் குட்டை கால் சட்டைகளை அணிந்து கொண்டால், நீங்கள் உடைகளை அணிந்து கொள்ளுங்கள். அவர்கள் தங்கள் தலைமயிரை கத்தரித்துக் கொண்டால், அல்லது வேறெதாகிலும் செய்து கொண்டால்... நீங்கள் உங்கள் தலைமயிரை வளரும்படி விட்டு விடுங்கள். பாருங்கள்? 98மயிரைப் பின்னுதல்.... கேள்வி என்னவென்றால், 'ப்ராய்ட்டும் (broid), 'ப்ரேய்ட்டும் (braid)ஒரே அர்த்தமுடையதா? ஆம், அது சரி. இப்பொழுது, தெருவில் ..... 'ப்ரேய்ட்' செய்யப்பட்ட தலைமயிர் என்றால் என்ன அர்த்தம் என்பதை கண்டுபிடிக்க நான் பல ஆண்டுகளுக்கு முன்பே அகராதியைத் தேடினேன். பாருங்கள்? ஸ்திரீ, உண்மையில், முன் காலத்து ஸ்திரீகள் தங்கள் தலைமயிரை பின்னால் இழுத்து அதைக் கட்டினார்கள், ஏறக்குறைய இன்று அவர்கள் 'போனி டேய்ல் (pony tail)கட்டுவதைப் போல. அவர்கள் எல்லாவிடங்களுக்கும் அவ்விதமே சென்றனர். அவர்கள் அங்கிகளை உடுத்திக்கொண்டனர், ஆனால் ஒரு தெரு வேசியோ தன் தலைமயிரை தலையிலிருந்து பின்னி, அதை இப்படி சுற்றி விட்டு, தலையில் பூ வைத்துக் கொள்வது வழக்கம் - ஒரு விதமான வேசி. இன்றைக்கு நாம் ஒரு வேசியை காண்பது போல, அவள் உடுத்தும் விதம். நான் வேசியை ஃப்ளாப்பர் (flapper)என்று அழைக்கிறேன், ஏனெனில் நான் வயதானவன். என் காலத்தில் அவர்கள் அவ்விதம் தான் அழைப்பார்கள். இன்றைக்கு அவர்கள் என்னவென்று அழைக்கின்றனர்? நான்... எனக்குத் தெரியாது. 'சிக்ஸ்' (chicks),அப்படி ஏதோ ஒரு பெயரால். எனவே... அது என்னவானாலும். அவர்களுக்கு நீங்கள் என்ன பெயர் கொடுத்தாலும், அவர்கள் அதை விரும்புவார்கள் 99சகோ. பிரான்ஹாமே, உங்கள் ஒலிநாடாக்களில் ஒன்றில் நோவா தன் குடும்பத்தாரை இரட்சித்தான் என்று கூறியிருக்கிறீர்கள். ஒரு தாய் தன் குடும்பத்தினருக்காக அதே விசுவாசம் கொள்ளலாம் என்பது அதன் அர்த்தமா? நான் விசுவாசித்தால் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் இரட்சிக்கப் படுவார்கள் என்று அர்த்தமா? இப்பொழுது அது - ஆம், அது ஒருவிதத்தில்... இதற்கு நான் இப்பொழுது எவ்விதம் பதில் கூறுகிறேன் என்பதை நீ கவனமாய் கேட்க வேண்டும். பார்? முதலாவதாக, “நீங்கள் கூறியிருக்கிறீர்கள்...' (நான் சரியாகக் கூறுகிறேனா என்று பார்ப்போம்.....) ”உங்கள் ஒலிநாடாக்களில் ஒன்றில், நோவா தன் குடும் பத்தாரை இரட்சித்தான் என்று கூறியிருக்கறீர்கள். ஏன்? ஏனெனில் அவர்கள் விசுவாசித்தனர். அதுதான். ஏனெனில் அவர்கள் அவனுடைய செய்தியை விசுவாசித்தனர். “ஒரு தாய் தன் குடும்பத்தினருக்காக அதே விசுவாசம் கொள்ளலாம் என்பது அதன் அர்த்தமா? ஆம், சகோதரியே! ஒரு தாயின் இருதயம் தன் மக்களுக்காக கூக்குரலிடுவதை என்னால் காண முடிகிறது. ”நாம் விசுவாசித்தால் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் இரட்சிக்கப்படுவார்கள் என்று அர்த்தமா? ஆம், அவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்களானால், அது உண்மை. 100அந்த பிலிப்பு பட்டினத்து சிறைச்சாலைக்காரனை ஞாபகம் கொள். உங்கள் இருவருக்குமாக விசுவாசி.... உன் சொந்த இரட்சிப்புக்காக உனக்கு போதிய விசுவாசம் இருக்குமானால், உன்ஜனங்களின் மேல் கிரியை செய்வதற்கென அதே விசுவாசம் உனக்கு ஏன் இருக்கக் கூடாது? விசுவாசம் என்பது என்ன? அது காணக் கூடாத ஒரு சக்தி. பார்? அது என்ன - அது ஆவி. பரிசுத்த ஆவி விசுவாசத்தைக் கொண்டு வருகிறது. பார்? அது காணக்கூடாத ஒரு சக்தி. நான் ஏன் வியாதியஸ்தரின் மேல் கைகளை வைக்கிறேன்? பார்? அந்த நபருக்குள் இருக்கும் அந்த ஆவியுடன் என்னால் தனிப் பட்ட விதத்தில் தொடர்பு கொள்ள முடியுமானால், ஏதாவதொன்று நிகழும். பார்? இங்கு பரிசுத்த ஆவியானவர் நின்று கொண்டிருக் கிறார்; அவர் இருதயத்தின் இரகசியங்களை வெளிப்படுத்துவார். கடைசி காலத்தில் அவர் என்ன செய்வதாக வாக்களித்துள்ளாரோ, அவர் அதை அப்படியே செய்வார். ஜனங்கள் அதை விசுவாசிக்கின்றனர்; அவர்கள் அதைக் கண்டு, “ஆம், ஐயா, அதை நான் விசுவாசிக்கிறேன்” என்கின்றனர். இப்பொழுது, உனக்கு நான் மிகவும் சாதாரணமாக ஆகி விடாமல் போனால் (பார்?) - இது சாதாரண ஒன்றாக ஆகிவிடுகிறது. நீங்கள் ஒரு நாள் ஜெபவரிசையில் கடந்து வருகிறீர்கள், அடுத்த நாளும் கடந்து வருகிறீர்கள். பாருங்கள்? அது தற்செயலாய் நடந்தால் நல்லது என்பதைப் போல. பாருங்கள்? நீங்கள் முதலாவதாக அதையே விசுவாசிப்பது கிடையாது (பாருங்கள்?) ஏனெனில் நீங்கள் உண்மையாக விசுவாசித்த உடனே... அந்த ஸ்திரீ “ நான் அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டால் முழுவதும் சொஸ்தமாவேன்” என்றாள். அவள் அதைச் செய்தாள். பாருங்கள்? “நான் மறுபடியும் முயற்சி செய்யட்டும்” என்று அவள் சொல்லவில்லை. பாருங்கள்? அவள் அதை விசுவாசித்தாள். பாருங்கள்? அது-அது.... 101இப்பொழுது, உன்னிலுள்ள எல்லாவற்றோடும் நீ மட்டும் உன் குடும்பத்துக்காக விசுவாசிப்பாயானால்.... இப்பொழுது, இங்குள்ளது போல, என்னை உந்துவது எது? என் கையிலுள்ள பலம் எது? அது நிச்சயமாக என் தசைகள் அல்ல, அது என் ஆவி. நிச்சயமாக, அந்த ஆவியை எடுத்துப் போடுங்கள், அப்பொழுது தசை என்ன செய்ய முடியும்? அது செத்ததாய் இருக்கும். பார்? அது அழுகிப்போகும், ஆனால் அது .... பார் , ஆவிதான் பலத்தை அளிக்கிறது. சிம்சோனைப் பாருங்கள். இந்த இரண்டு கம்பங்களுக்கும் இடையே இருக்கக் கூடிய அவ்வளவு பெரிய கதவுகளை உங்களில் அநேகர் கண்டிருப்பீர்கள். சகோ. ஜாக்சன், அவ்வளவு திடகாத்திரமுள்ள மனிதன், ஒரு சிங்கத்தை சுக்குநூறாகக் கிழிக்கக் கூடிய பலமுடையவன். தானியக் களஞ்சியத்தின் கதவைப் போல் அவ்வளவு அகலமுள்ள தோள்களைக் கொண்டிருந்த ஒரு மனிதனின் மேல் சிங்கம் குதித்தது. அவன் அதை பீறிப் போட்டான். அது ஒன்றும் அதிசயமல்ல. ஆனால் அதிசயம் என்னவென்றால் அவன் சுருண்ட தலைமயிர் கொண்ட, பெண்மைத்தனம் கொண்ட அம்மாவின் மகனாயிருந்தான். பெண்ணின் மயிர் சுருள்கள் போல் ஏழு சுருள்கள் அவனுக்குப் பின்னால் தொங்கிக் கொண்டிருந்தன. ஆனால் கவனித்தீர்களா, கர்த்தருடைய ஆவியானவர் அவன் மேல் இறங்கும் வரைக்கும், அவனால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. ஆனால் கர்த்தருடைய ஆவியானவர் அவன் மேல் இறங்கினபோது, அந்த சிங்கம் அவனை நோக்கி ஓடி கெர்ச்சித்த போது, அதை துண்டு துண்டாக கிழித்துப் போட்டான். அது சிம்சோன் அல்ல. அது கர்த்தருடைய ஆவி. 102அவன் எவ்விதம் அந்த வனாந்தரத்தில் உலர்ந்து வெளுத்துக் கிடந்த கழுதையின் தாடையெலும்பை எடுத்து... அந்த பெலிஸ்தியரின் தலைச்சீராக்கள் ஒரு அங்குலம் கனம் பித்தளையினால் செய்யப்பட்டிருந்தன. அந்த தாடையெலும்பை நீங்கள் எடுத்து அந்த தலைச்சீராக்களின் ஒன்றின் மேல் அடித்தால், அது ஆயிரம் துண்டுகளாக நொறுங்கி விடும். அது உங்களுக்கு தெரியும். அவர்கள் அந்த தாடையெலும்பைக் கொண்டு அடிப்பார்களானால்... ஆனால் அங்கே பாருங்கள், அவன் அந்த தாடையெலும்பைத் தன் கையில் பிடித்து அங்கு நின்று கொண்டு ஆயிரம் பெலிஸ்தியரை மடங்கடித்தான்; மற்றவர்கள் மலைக்கு ஓடிப் போய் விட்டனர். அவன், “வாருங்கள், உங்களுக்கும் இந்த கதி வேண்டுமா?” என்று கேட்டான். அப்பொழுதும் அவன் அந்த தாடையெலும்பை கையில் பிடித்துக் கொண்டிருந்தான். அது என்ன? கர்த்தருடைய ஆவி அவன் மேல் இறங்கினது. பாருங்கள்? எனவே அது கர்த்தருடைய ஆவியே. உன் சொந்த இரட்சிப்புக்காக விசுவாசிக்க உனக்குள் கர்த்தருடைய ஆவி இருக்கும் போது, அதை உன் குடும்பத்தின் மேல் வைத்து, “இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே அவர்களை உரிமை கோருகிறேன்; அதைநான் உரிமை கோருகிறேன்! தேவனே, அவளை நீர் எவ்விதம் அதை செய்ய வைக்கப் போகிறீர் என்று எனக்குத் தெரியாது, அவனை நீர் எவ்விதம் அதை செய்ய வைக்கப் போகிறீர் என்று எனக்குத் தெரியாது, ஆனால் அதை நான் விசுவாசிக்கிறேன்; அதை விசுவாசிக்கிறேன், கர்த்தாவே! என் அவிசுவாசம் நீங்க உதவிச் செய்யும்” என்று சொல். அதை உரிமை கோரி என்ன நடக்கிறதென்று கவனி. அது அதை செய்யும். 103மணவாட்டிக்கு - இயேசு வருவதற்கு முன்பு மணவாட்டி, பின் மாரி காலத்திலிருந்தது போல, அற்புதங்களைச் செய்வதற்கும், மரித்தோரை உயிரோடெழுப்புவதற்கும் மற்றவைகளைச் செய்வதற்கும் பரிசுத்த ஆவியின் அனைத்து வல்லமையையும் பெற்றிருப்பாளா? அல்லது இந்த பின்மாரி 144,000 யூதர்களுக்கு மாத்திரமா? எல்லா ஊழியக்காரர்களும் இதைப் பெற்றிருப்பார்களா, அல்லது அவருடைய வருகைக்காக மட்டும் நாம் காத்திருக்கிறோமா? ஆம். பாருங்கள், நண்பனே. நான் ஒரு வேதசாஸ்திர பண்டிதன் அல்ல. எனவே வேதத்தைக் குறித்து எனக்குத் தெரிந்த அனைத்தையும் நான் நிழல்களையும் முன்னடையாளங்களையும் கொண்டு போதிக்க வேண்டியவனாயிருக்கிறேன். நீங்கள் என்னை. “முன்னடையாளக்காரன்' (typologist)என்று அழைக்கலாம். நான் சுவற்றை நோக்கிக் கொண்டிருக்கிறேன், என்னை நான் கண்டதேயில்லை என்று வைத்துக் கொள்வோம். நான் சுவற்றில் என் நிழலைக் காணும்போது, எனக்குத் தலை, காதுகள், கைகள் உள்ளதாக அறிந்து, என்னை நான் கண்டால், நான் எப்படியிருப்பேன் என்பதை அறிந்து கொள்கிறேன். பாருங்கள்? ஒரு கண்ணாடியில் என் உருவம் பிரதிபலிப்பதை நான் காணும்போது, நான் நின்று கொண்டு என்னையே நான் காணமுடிந்தால் எப்படியிருப்பேன் என்பதை அறிந்து கொள்கிறேன். வேதத்தையும் நான் அவ்விதமாகவே கருதுகிறேன். “இவையனைத்தும் நமக்கு திருஷ்டாந்தங்களாக வைக்கப்பட்டுள்ளன” என்று வேதம் உரைக்கிறது (1 கொரி. 10:11). நாம் பின்னோக்கிப் பார்த்து, சந்திரன் சூரியனைப் பிரதிபலிப்பது போல, அது என்ன - வென்று நாம் அறிந்து கொள்ளலாம். நான் சூரியனைக் கண்ட தேயில்லை என்றால், அது எப்படியிருக்கும் என்று நாம் அறிந்துகொள்கிறோம். நாம் சந்திரனை நோக்கி, சூரியன் அதைக் காட்டிலும் பெரிதாயிருக்கும் என்று அறிகிறோம். நல்லது, அது போன்று பழைய ஏற்பாட்டின் சம்பவங்களை நீங்கள் காணும்போது, அவை புதிய ஏற்பாட்டின் சம்பவங்களைப் பிரதிபலிப்பதாயுள்ளன. 104இப்பொழுது, இங்கே, என் முழு இருதயத்தோடும் நான் விசுவாசிப்பது என்னவெனில், நான் - நாம், அல்லது இந்த நாட்கள்... நாம் இல்லையென்றால், வேறு யாரோ இருக்கிறார்; அப்படித்தான் இருக்க வேண்டும். காலம் முடிவடைந்து விட்டது; நாம் முடிவில் இருக்கிறோம். ஒவ்வொன்றும். உலகமானது... தேவன் உலகத்தை ஆறாயிரம் ஆண்டுகளில் சிருஷ்டித்து, ஏழாயிரம் ஆண்டில் ஓய்ந்திருந்தார். ஒரு மனிதன் அத்தனை ஆண்டுகளாக உயிர் வாழ மாட்டான் என்று அவர் கூறினார். “நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்'. வேதத்தின்படி மெத்தூசலா தான் மிகவும் நீண்ட காலம் வாழ்ந்தவன். அவன் 969 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தான். அவன் அந்த ஆயிரம் ஆண்டுகள் உயிர் வாழவில்லை. ஆனால் மனிதன் தண்டனைக்கான கிரயம் செலுத்தப்பட்டாகி விட்டது என்பதைக் காண்பிக்க, ஆயிரம் வருட அரசாட்சியின் போது, ஆயிரம் ஆண்டு காலம் உயிர் வாழ்வான். மனிதன் அப்பொழுது என்றென்றைக்கும் உயிர் வாழ்வான்; நாள் என்பது முடிவடைந்திருக்கும்; காலம் என்பது முடிவடைந்திருக்கும்; அவர்கள் நித்தியத்தில் இருப்பார்கள். 105இரண்டு மூன்று ஞாயிற்றுக்கிழமைகளுக்கு முன்பு நான் அளித்த “பரலோக மணவாளன் மற்றும் பூலோக மணவாட்டியின் வருங்கால இருப்பிடம்' என்னும் செய்தியின் பேரில் எனக்கு பல கடிதங்கள் வந்துள்ளன. அது நிச்சயம் அநேகருக்கு பாதிப்பை உண்டு பண்ணியுள்ளது.... எனக்கும் கூட. அதிலிருந்து நான் மீளவில்லை . 106இப்பொழுது கவனியுங்கள். இதன் பேரில் (பாருங்கள்?) ஆபிரகாம் கண்டான். இப்பொழுது, அவர் ஆபிரகாமுடன் ஈடுபட்ட விதமாக, அவனுடைய சந்ததியுடனும் ஈடுபட வேண்டும். இப்பொழுது, இந்நாட்களில் ஒன்றில், நான் எப்பொழுதாகிலும் திரும்பி வரும்போது, அதை இன்னும் விரிவாக எடுத்து, ஆபிரகாமின் வாழ்க்கையில் இருந்த வெவ்வேறு கட்டங்களை உங்களுக்குக் காண்பிக்க விரும்புகிறேன். அவர் ஆபிரகாமுடன் ஈடுபட்ட விதமாகவே, லூத்தருடனும், வெஸ்லியுடனும், வழிவழியாக இக்காலம்வரையிலும் உண்டாயிருந்த சபைகளுடன் ஈடுபட்டிருக்கிறார். அவர் எவ்வாறு ஆபிரகாமுக்குப் பிரத்தியட்சமானார்; எவ்வாறு சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழ் அவர் அவனுடன் உடன்படிக்கையை உறுதிப்படுத்திக் கொண்டார் - அது பிலதெல்பியா சபையின் காலம். ஆம், ஐயா, அது இரத்தத்தின் காலம் - வெஸ்லியன் காலம். அதன் பிறகு பெந்தெகொஸ்தே காலத்தை கவனியுங்கள். அவர் அங்கு வந்த பிறகு, அவர் எல்ஷடாய்' அதாவது “என் மார்பகத்தின் பாலைக் குடி” என்னும் வாக்குத்தத்தத்தை அருளினார். கேள்வி என்னவெனில்: உன்னால் பாலைக் குடிக்க முடியுமா? அது பெந்தெகொஸ்தேயினருக்கு முன்பாக வைக்கப் பட்டது. பாருங்கள்? உன்னால் பாலைக் குடிக்க முடியுமா? அவர்கள் அதைச் செய்யவில்லை; அவர்கள் வெளி வந்த ஸ்தாபனத்தின் மார்பகத்தைப் பிடித்து அதன் பாலைக் குடித்தனர். ஆனால் வித்தோ, உண்மையான வித்தோ, தேவனுடைய மார்பகத்தின் பாலைக் குடிக்கும். 107அத்தனை ஆண்டுகளாக அவர்கள் காத்திருந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரன் வருவதற்கு முன்பு அவர்கள் பெற்றுக் கொண்ட கடைசி அடையாளம் என்ன? தேவன் ஒரு மனித உருவில் அங்கு நின்று கொண்டு சாராளின் இருதயத்திலுள்ள சிந்தனைகளைப் பகுத்தறிந்தாரா? (சாராள் சபையாக, சபைக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறாள்) அவருக்குப் பின்னால் இருந்த சபையின் சிந்தனைகளை அவர் பகுத்தறிந்தார். அது சரியா? அதற்கு பின்பு உடனே, சாராள் ஒரு வாலிப ஸ்திரீயாகவும், ஆபிரகாம் ஒரு வாலிபனாகவும் மாறினான்; வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனாகிய ஈசாக்கு காட்சியில் கொண்டு வரப்பட்டான். எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு முன்பு சபைக்கு நிகழ வேண்டிய கடைசி காரியத்தை நீங்கள் கண்டு கொண்டிருக்கிறீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். அது முற்றிலும் உண்மை. அதை நான் விசுவாசிக்கிறேன். மாரி முடிந்து விட்டது. வெளிப்படுத்தின விசேஷம் முதல் மூன்று அதிகாரங்களைப் படியுங்கள், சபைக்கு என்ன வாக்களிக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் காண்பீர்கள். அதுதான் சபைக்கு அங்கே வாக்களிக்கப்பட்டுள்ளது - சபை காலங்களுக்கு. அன்றொரு நாள் நாம் எக்காளங்களைப் பிரசங்கிக்கத் தொடங்கின போது, பரிசுத்த ஆவியானவர், “அது இதைச்சேர்ந்ததல்ல என்று உரைத்ததை நீங்கள் கவனித்தீர்கள். பாருங்கள், பாருங்கள்? 108இப்பொழுது, பின் மாரி, 144,000 யூதர்கள், இல்லை, அதுவல்ல, அவர்கள் மாட்டார்கள். அது எலியாவும் மோசேயும் வரும் போது... அப்பொழுதுதான் அற்புதங்கள் நடக்கும். ஜனங்கள் - பெந்தெகொஸ்தேயினர் - எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அற்புதங்கள், அவர்கள் கீழ் தான் நடக்கும். பாருங்கள், அது எலியாவினுடையதும், மோசேயினுடையதும். அவர்கள் தங்களுக்கு வேண்டும் போதெல்லாம் பூமியைச் சகலவித வாதைகளால் வாதிப்பார்கள்; அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லி வருகிற நாளிலே மழை பெய்யாதபடிக்கு வானத்தை அடைப்பார்கள். தேவன் முன்பு செய்தது போல, நின்று கொண்டு அவர்களுக்காக யுத்தம் பண்ணுவார். அவர் எகிப்தில் செய்த விதமாகவே, அவர்களை பலத்த கரத்தினால் உலகத்தின் “தத்துவங்களிலிருந்து” (isms)வெளியே கொண்டு வருவார். அவர் அதைச் செய்வார், ஆனால் அதுவல்ல.... 109நாம் கர்த்தருடைய வருகைக்கு காத்திருக்க மட்டும் செய்ய வேண்டும். காத்திருக்க மட்டும் செய்யுங்கள்; உங்கள் தீவட்டிகளை சுத்தம் பண்ணி வைத்திருங்கள், அதை எண்ணெயினால் முழுவதும் நிரப்புங்கள். ஒவ்வொரு மணி நேரமும் ஜெபித்துக் கொண்டிருங்கள், ஒவ்வொரு நாளும் அல்ல, ஒவ்வொரு மணி நேரமும். உங்களை ஆயத்தமாக வைத்திருங்கள்; ஆயத்தமாயிருங்கள்: இனிமையாயிருங்கள், விழித்துக் காத்திருங்கள்....ஓ, அந்த மகிழ்ச்சியான ஆயிரம் வருடஅரசாட்சியின் நாள் வரக் காத்திருக்கிறோம் அப்பொழுது, நமது ஆசீர்வதிக்கப்பட்ட கர்த்தர் வந்துகாத்திருக்கும் தம் மணவாட்டியை எடுத்துக்கொள்வார் ஓ, என்னே - ஓ , நான் உழைத்து, விழித்து, ஜெபித்துக் கொண்டிருக்கையில் என் இருதயம்மகிழ்ச்சியினால் பொங்குகிறது, ஏனெனில் நமதாண்டவர் மறுபடியும் பூமிக்கு வருகிறார். அதுதான்; அதுதான் இந்நேரத்தில் சபையின் நம்பிக்கை. 110ஞானஸ்நானத்துக்கு “இயேசு கிறிஸ்துவின் நாமம் சரியா, அல்லது அது ”கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம். என்றிருக்க வேண்டுமா? இரண்டில் ஏதாவதொன்றை உபயோகிக்கலாம். நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னும் நாமத்தை உபயோகிக்கிறேன் (பாருங்கள்?) ஏனெனில் அவர் நம்முடைய கர்த்தர் என்பது என் கருத்து. இப்பொழுது, சில சகோதரர்கள் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுப்பதைக் குறித்து எனக்கு கருத்து வேறுபாடு உண்டு (பாருங்கள்?), ஏனெனில் இயேசு என்னும் பெயர் கொண்ட பல நண்பர்கள் எனக்குள்ளனர் - மெக்ஸிகோவிலும், இத்தாலியிலும் இன்னும் மற்றவிடங்களிலும் பல போதகர் நண்பர்கள். அவர்கள் அவர்களை இயேசு என்ற பெயரால் அழைக்கின்றனர். எனவே ஞானஸ்நானத்தில் இயேசு என்னும் நாமம் போதாது. அவர் கிறிஸ்துவாகிய இராட்சகராகப் பிறந்தார். அவர் இரட்சகராகப் பிறந்தார், கிறிஸ்துவாக அபிஷேகம் பண்ணப்பட்டார். அவர் பிறந்து எட்டு நாட்களுக்குப் பிறகு அவருக்கு இயேசு என்னும் நாமம் பெயரிடப்பட்டது. பாருங்கள்? அப்படியானால் அவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. அப்படித்தான் அவர் இருந்தார். சரி. 111சகோ. பிரான்ஹாமே, விவாகமும் விவாகரத்தும் என்னும் பிரச்சினையின் பேரில் இந்த நேரத்தில் எங்களுக்கு அறிவுறுத்த கர்த்தர் உமக்கு அனுமதி அளிப்பாரா? கேள்வி: ஒரு மனிதன் ஒரு ஸ்திரீயை விவாகம் செய்து கொண்ட பிறகு, அவள் அவனை விவாகரத்து செய்து விட்டு வேறொருவரை மணந்து கொள்ளலாமா? இருவருமே வேறொருவரை விவாகம் செய்து கொண்டால், அவர்கள் இருவருமே விபச்சாரம் செய்கிறவர்களாகி விடுவார்களா? இது சர்ப்பத்தின் வித்துடன் இணையும் என்று நீர் கூறினீர். அது எப்படி? நமக்குள்ள இந்தக் கேள்வித் தொகுப்பிலேயே இது மிகவும் வஞ்சகமான கேள்விகளில் ஒன்றாகும். இது இன்றைக்கு உலகில் அதிகமாக பிரச்சினைக்குரிய கேள்வியாகும். இப்பொழுது. நான் சொல்வதைக் கேளுங்கள். இதற்கு எனக்கு ஒரு காரணம் உண்டு. இன்று காலையில் விவாகமும் விவாகரத்தும் என்பதை குறித்து சரியான காரியத்தை இந்த சபைக்குக் கொண்டு வந்து அது ஒலிநாடாவில் பதிவாகி மற்றவர்கள் கேட்பார்களானால், அது தேசத்திலுள்ள ஒவ்வொரு சபையையும் உடைத்துப் போடும். பாருங்கள்? அது உண்மை. 112இப்பொழுது, எனக்குதவி செய்யும், வேதாகமம் என் முன்னில் இதோ வைக்கப்பட்டுள்ளது. இந்த கேள்வியின் பேரில்கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை நான் பெற்றிருக்கிறான். இதைக் குறித்து தர்க்கம் செய்யும் இரு சாராருமே தவறாயிருக்கின்றனர். ஏற்கனவே விவாகமானவர்களை மறுபடியும் விவாகம் செய்கிறவர்கள், இருவருமே தங்கள் செயலில் தவறு செய்கின்றவர்களாயிருக்கின்றனர். ஆனால் இதற்கு இடையில் - பாதையின் நடுவில் - சத்தியம் உள்ளது. நான் விரும்பவில்லை... நான் ஒரு செய்தி ஒலிநாடாவை தயாரிக்கப் போகின்றேன், எனக்கு ஏதாவது நேரிடும் பட்சத்தில் நான் போய்விட்ட பிறகு (பாருங்கள்?) அதை சகோதரர்கள் சபைகளுக்கு போட்டுக் காட்டலாம். நான் அதன் பேரில் ஒரு ஒலிநாடாவை தயாரித்து, அது எங்குள்ளது என்பதை உங்களுக்கு சபையில் காண்பிக்க விரும்புகிறேன்; ஆனால் நான் கர்த்தரால் ஏவப்படும் வரைக்கும், அதைக் குறித்து ஒன்றையும் சொல்ல மாட்டேன். இப்படிப்பட்ட காரியங்களில் நான் கர்த்தரால் ஏவப்பட வேண்டுமென்று உணருகிறேன்; நான் ஏவப்படாமல் போனால், நான் நன்மை செய்வதைக் காட்டிலும் அதிக சேதத்தை விளைவிப்பேன். பாருங்கள்? 113இப்பொழுது இதை நீங்கள் கவனிக்க விரும்புகிறேன். கேள்வி: “ஒரு மனிதன் ஒரு ஸ்திரீயை விவாகம் செய்து கொண்ட பிறகு, அவள் அவனை விவாகரத்து செய்து விட்டு வேறொருவரை மணந்து கொள்ளலாமா? இருவருமே வேறொருவரை விவாகம் செய்து கொண்டால், அவர்கள் இருவருமே விபச்சாரம் செய்கிறவர்களாகி விடுவார்களா?” இப்பொழுது, என் நண்பனே, உங்கள் மனதை நோக வைக்க நான் விரும்பவில்லை, ஆனால் அதுதான் உண்மை . “தள்ளி விடப்பட்டவளை விவாகம் பண்ணுகிறவன் விபசாரஞ் செய்கிறவனாயிருப்பான்” என்று இயேசு கூறியுள்ளார் (மத். 5:32). பாருங்கள்? அதை நான் கூற விரும்பவில்லை, ஆனால் அதுதான் உண்மை... “இது சர்ப்பத்தின் வித்துடன் இணையும் என்று நீர் கூறினீர்”. பாருங்கள்? நான் அவ்விதம் கூறினதாக எனக்கு ஞாபகமில்லை. நான் ஒருக்கால் எங்காவது கூறியிருக்கக் கூடும், அதைக் குறித்து ஏதாவது கூறியிருக்கக் கூடும். 114அன்றொரு நாள், நான் ஒன்றைக் குழப்பிக் கொண்டது போல, அதை நான் கேட்க நேர்ந்தது. அது... அதை நான் அந்த நேரமே கண்டுபிடித்து விட்டேன்; அது ஒலிநாடாவில் பதிவாகியுள்ளது. அதை நான் ஒருக்கால் கேட்பேன். நான் ஏழு எக்காளங்களைக் குறித்து பேசிக் கொண்டிருந்த போது, அதை நான் ஏழு எக்காளங்கள் என்று சொன்னேன். நான் பெந்தெகொஸ்தே பண்டிகையை குறிப்பிட்டுக் கொண்டிருந்தேன். பெந்தெகொஸ்தே பண்டிகையிலிருந்து எக்காளப் பண்டிகை வரைக்கும் இடையே ஏழு ஓய்வு நாட்கள். பஸ்கா பண்டிகைக்கும் பெந்தெகொஸ்தே பண்டிகைக்கும் இடையே (பாருங்கள்?) அது ஐம்பது நாட்கள். அதை நான் குறிப்பிட்ட போது, “அது ஏழு சபை காலங்கள்” என்றேன். ஒலிநாடாவில் (நீங்கள் அந்த ஒலிநாடாவைப் பெற்றுக் கொள்ள நேர்ந்தால்) - அந்த ஒலிநாடாவில் அது அதற்கு பிறகு ஏழு மாதங்கள் கழித்து எக்காளப் பண்டிகை வருகிறது, அது ஏழு சபைக் காலங்களைக் குறிக்கிறது என்று இருக்க வேண்டும் - ஏழு மாதங்கள், ஏழு ஓய்வு நாட்கள் அல்ல. ஏழு ஓய்வு நாட்கள் என் பது... அதை நான் அங்கு விளக்கியிருக்கிறேன். நான் ஏழு ஓய்வு நாட்கள் என்று கூறினேன். ஆனால் நான் அதே கருத்தை பெந்தெகொஸ்தே பண்டிகைக்கு ஏழு மாதங்களுக்கு பிறகு என்பதற்கும் கொண்டு சென்று விட்டேன். அந்த பண்டிகையின் போது கதிர் கொண்டு வரப்பட்டு அசைவாட்டப்படுகிறது. அப்படியானால் பாருங்கள். இதை ஞாபகம் கொள்ளுங்கள், அந்த நேரத்துக்குப் பிறகு கதிர் அப்பமாக மாறுகிறது. ஒரு கதிர், அதன் பிறகு எல்லாமே அப்பத்துக்குள் சென்று விடுகிறது. ஓ, அதில் பெரிய போதகம் அடங்கியுள்ளது; அதன் ஓரத்தைக் கூட நான் தொட வில்லை. அதை நீங்கள் ஒலிநாடாவில் கேட்க நேர்ந்தால், உங்கள் வேதத்தை திறந்து பாருங்கள் (லேவியராகமம் 23ம் அதிகாரம் - தமிழாக்கியோன்). பாருங்கள், அதற்கு பிறகு ஏழு மாதங்கள் கழித்து. ஏழு மாதங்களை எண்ணுங்கள்: ஜனவரி, பெப்ருவரி, மார்ச்சு, ஏப்ரல், மே, ஜூன், ஜூலை - அது ஜூலை மாதம். ஏழு மாதங்கள், அது . ஏழு சபை காலங்கள் முழுவதையும் குறிக்கிறது. ஏதாவதொரு போதகர் அதை கண்டு பிடிக்கக் கூடும், அப்பொழுது குறை கூறப்படுவேன். அங்கு பார்த்தீர்களா? சரி. 115இப்பொழுது, இதன் பேரில், நாம் ஒருவாறு... நீங்கள்... இதை நான் கூறுகிறேன். இதை நான் கூறட்டும், கர்த்தர் அல்ல, இதை நான் கூறுகிறேன். இந்த நேரத்தில் உங்களுக்கு மறுபடியும் விவாகமாயிருந்து, நீங்கள் இருவருமே இரட்சிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டு, பிள்ளைகளைப் பெற்றிருப்பீர்களானால் (இப்பொழுது. இது நான் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள், கர்த்தர் அல்ல, பாருங்கள்), நீங்கள் தொடர்ந்து ஒன்றாக வாழுங்கள்; சந்தோஷமாயிருங்கள்; ஏனெனில் உங்கள் முதல் மனைவியுடன் நீங்கள் வாழ முடியாது, வாழ முடிந்திருந்தால் இவளை நீங்கள் விவாகம் செய்து கொண்டிருந்திருக்க மாட்டீர்கள். இவளை நீங்கள் விட்டு உங்கள் முதல் மனைவியிடம் செல்வீர்களானால், நீங்கள் முதலில் செய்ததை விட இன்னும் மோசமான காரியத்தை செய்பவராகி விடுவீர்கள். பாருங்கள்? எனவே பாருங்கள், நீங்கள் எல்லாவற்றையும் குழப்பிக் கொண்டிருக்கிறீர்கள், அதிலிருந்து மீள வழியேயில்லை. நான் வேதத்திலிருந்து உண்மையில் ஒரே ஒரு வழியைத் தான் எடுத்துக் கூற முடியும்; நீங்கள் இருவருமே தனியாக வாழுங்கள். பாருங்கள்? இப்பொழுது, ஆனால்... இந்த ஒரு வழியைத் தான் இப்பொழுது நான் கூற முடியும், ஆனால் வேறொரு காரியம் அதில் உள்ளது, அதை இப்பொழுது என்னால் உங்களிடம் கூற முடியாது. “இது கர்த்தர் அல்ல, நான், தொடர்ந்து வாழுங்கள்” என்று நான் கூறக் காரணம். இதை நீங்கள் ஒலிநாடாவில் பதிவு செய்ய நேர்ந்து என்றாகிலும் ஒரு நாள், இதைக் குறித்து நான் மறுபடியும் பேச நேர்ந்தால், இதை நான் கூறிய விதத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் ஞானமுள்ளவர்களாயிருந்தால், அதை நான் எவ்விதம் அப்பொழுது கூறினேன் என்பதை நீங்கள் கேட்டு அறிந்து கொள்ள முடியும் (பாருங்கள்?), அப்பொழுது நீங்கள் அறிந்து கொள்வீர்கள். 116சகோ. பிரான்ஹாமே, நம்முடன் வேற்றுமை கொண்டிருக்கும், மற்ற சபைகளுக்கு நாம் போகலாமா? நிச்சயமாக, ஆம்! அவர்கள் இயேசுவுடன் வேற்றுமை கொண்டிருந்த போதிலும், அவர் அங்கு சென்றார். போங்கள். “நம்முடன் வேற்றுமை கொண்டிருக்கும் மற்றொரு சபைக்கு நாம் செல்லலாமா?” என்று கேட்கப்பட்டுள்ளதை இங்கு நாம் கவனிக் கிறோம். நிச்சயமாக, நான்... நான் கடற்கரையில் உள்ள ஒரே ஒரு கூழாங்கல் அல்ல, உங்களுக்குத் தெரியும். தேவபக்தியுள்ள மற்ற மனிதர் எல்லாவிடங்களிலும் உள்ளனர். அவர்களில் நானும் ஒருவன் என்று நம்புகிறேன். பாருங்கள்? ஆனால் நீங்கள் இங்கு வந்து... அன்றொரு நாள் இது போன்ற ஒன்றைக் குறித்து என்னிடம் கேட்கப்பட்டது. அரிசோனாவிலுள்ள ஒரு குழு இதைக்குறித்து என் கவனத்தை ஈர்த்தது. போதகர் குழு ஒன்று என்னிடம், “சகோ, பிரான்ஹாமே, உங்களுக்கு விரோதமாக எங்களுக்குள்ள ஒரே ஒரு காரியம் (பல காரியங்களில் ஒன்று என்னவெனில், உங்களுடன் இங்கு வரும் மக்களை, வேறெந்த சபைக்கும் போக வைக்க எங்களால் முடியவில்லை. அவர்களுக்கு பிள்ளைகள் உள்ளனர், ஆனால் அவர்கள் சபைக்குச் செல்ல மறுக்கின்றனர்; எங்கள் சபைக்கு வருவதற்கு அவர்கள் வரவேற்கப்படுகின்றனர் என்று நாங்கள் சொன்னபோதிலும்' என்றனர். 117நீங்கள் அவர்களுடைய சபைகளில் சேர்ந்து கொள்ள உங்களை வற்புறுத்துகின்றனர் என்பதை அறிவேன், ஆனால் நீங்கள் சேரவேண்டிய அவசியமில்லை; உங்கள் பிள்ளைகளை எங்காவது ஞாயிறு பள்ளிக்கு அனுப்புங்கள். நீங்கள் சபைக்குச் செல்லுங்கள். ஞாயிற்றுக்கிழமையில் வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கவோ, மீன் பிடிக்கவோ, வேட்டைக்கோ செல்லாதீர்கள். நீங்கள், “நல்லது. நான் சட்டதிட்டங்களை கடைபிடிக்கும் ஒருவன் அல்ல (legalist)” எனலாம். நல்லது, நீங்கள் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை அவமதிக்காமல், சிறிது காலம் அவ்விதம் இருப்பது நல்லது. நீங்கள் எங்காகிலும் சபைக்குச் செல்லுங்கள். நான் போவேன் என்றால்... எனக்குக் கிடைக்கவில்லை என்றால். நான் விசுவாசிப்பவைகளில் ஒரே ஒரு காரியத்தை மாத்திரம் கூறுவதாக நான் அறிந்துள்ள ஒரு குறிப்பிட்ட சபைக்கு நான் செல்வேன் என்றால் - அவர்கள் இயேசு தேவனுடைய குமாரன் என்று விசுவாசிப்பதாக கூறுகின்றனர் என்று வைத்துக் கொள்வோம். நான் அங்கு சென்று அவர்கள் அதைக் கூறுவதைக் கேட்பேன். ஒருக்கால் நீங்கள் சொல்லல... அது இந்த சபை, 'அடுத்த சபை பாப்டிஸ்டைப் போல் ஏதோ ஒரு சபை. அவர்கள், “ஆம், உங்களுக்கு அனுபவம் உண்டாயிருக்க வேண்டும் என்பது எங்கள் விசுவாசம்” என்று சொன்னால், அதை நான் ஏற்றுக் கொள்வேன். அப்பொழுது நான் இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்கிறேன்; அத்துடன் எனக்கு அனுபவம் உண்டாயிருக்க வேண்டும் என்றும் நான் விசுவாசிக்கிறேன். சரி. அதன் பிறகு, அங்கு அசெம்பிளீஸ் ஆப் காட் சபை உள்ளதென்று வைத்துக் கொள்வோம். இப்பொழுது, அவர்கள்விசுவாசிப்பது என்னவெனில்... பாருங்கள், நான் அவர்கள் அனைவருடனும் சேர்ந்து இப்பொழுது மூன்று அல்லது நான்கு 'ஸ்லைஸ்' ரொட்டி சாப்பிட என்னால் முடிகிறது. பாருங்கள்? ஏனெனில் அவர்களால் விசுவாசிக்க முடிந்தது .... 118அன்றொரு நாள் இதே நபர் என்னிடம் வந்து அதைக் குறித்து அறிய விரும்பினது போல. அவர், “நீங்கள் சொன்னீர்கள்...' என்றார் (அங்குள்ள இந்த போதகர். அங்குள்ள இந்த ஆள் அதை விவாதிக்க விரும்பினார். பாவம் சகோதரன், அவர் அப்படிப்பட்ட ஒரு மாயையில் இருக்கிறார்). அவர், ”நல்லது. சகோ. பிரான்ஹாம் அசெம்பிளில் ஆப் காட் சபையாகிய உங்களுக்கு விரோதமாய் இருக்கிறார்' என்றார். இதை அசெம்பிளீஸ் போதகர் யாராகிலும் கேட்க நேர்ந்தால், நான் எப்பொழுது அசெம்பிளீஸ் ஆப் காட் மனிதருக்கு விரோதமாகவோ, அல்லது வேறெந்த மனிதருக்கும் விரோதமாகவோ இருந்திருக்கிறேன் என்று நீங்கள் என்னிடம் கூறும்படி விரும்புகிறேன். ஏன் அவ்விதமான கருத்து? நான் கிறிஸ்துவுக்காக பெற்றெடுத்த என் ஏழரை லட்சம் பிள்ளைகளை உங்களிடம் அனுப்பியிருக்கிறேன் என்று உங்கள் தலைமை அலுவலகமே ஒப்புக் கொண்டுள்ளதே. அப்படியிருக்க, நான் அசெம் பிளீஸ் ஆப் காட் சபைக்கு விரோதமாயிருக்கிறேன் என்று கூறுவது எப்படி? நான் ஏன் ஒருத்துவக்காரருக்கு விரோதமாக இருக்கப் போகிறேன்? நான் ஒருத்துவக்காரருக்கோ, அசெம்பிளீஸ் ஆப் காட் சபைக்கோ , சர்ச் ஆப் காட் சபைக்கோ விரோதமானவன் அல்ல! மனிதரைப் பிரிக்கும் ஒவ்வொரு முறைமைக்கும் நான் விரோதமானவன்! 119பாருங்கள், நான் அசெம்பிளீஸ் சபைக்கு அவர் களுடைய எண்ணிக்கையின்படியே, என் பிள்ளைகளில் ஏழரை லட்சம் பேரை அனுப்பியிருக்கிறேன். அவர்கள் அவ்வளவு கெட்டவர்களாக இருந்தால், நான் ஏன் அதை செய்ய வேண்டும்? ஏன்? அவர்களை ஒருத்துவக்காரரிடமோ அல்லது பெந்தெகொஸ்தே விசுவாசம் கொண்டுள்ள யாரிடமோ அனுப்புவதே மிகவும் சிறந்தது என்று எண்ணுகிறேன். ஏனெனில் அவர்கள் தெய்வீக சுகமளித்தலில் விசுவாசம் கொண்டுள்ளனர், இயற்கைக்கு மேம்பட்டவைகளில் அவர்கள் விசுவாசம் கொண்டுள்ளனர், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தில் அவர்கள் விசுவாசம் கொண்டுள்ளனர். அதுவே சிறந்தது. அவர்கள் எல்லோரையும் என்னால் இங்கு கொண்டு வரமுடியாது; அவர்கள் உலகெங்கிலும் உள்ளனர். எனக்கு உலகம் முழுவதிலும் நண்பர்கள் உள்ளனர் - நான் கிறிஸ்துவுக்காக . பெற்றெடுத்த பிள்ளைகள். அவர்களை மிகச் சிறந்த சபைக்கு அனுப்புகிறேன்... நான் பீட அழைப்பு கொடுக்கும் போது, நான் கூறுவதைக் கேட்டிருக்கிறீர்களா? நான் கூறுவது என்னவெனில்.... அவர்களை எழுந்து நிற்கச் செய்து, அவர்களை இரட்சிப்படையச் செய்த பிறகு, நான், “உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள ஏதாகிலும் ஒரு நல்ல' முழு சுவிசேஷ சபைக்குச் சென்று அதை உங்கள் சபையாக்கிக் கொள்ளுங்கள்' என்று கூறுவது வழக்கம். அவ்விதம் நான் கூறுவதை உங்களில் எத்தனை பேர் கேட்டிருக்கிறீர்கள்? நிச்சயமாக, நிச்சயமாக நல்லது. அப்படியானால் நான் ஏன் அவர்களை அங்கு அனுப்ப வேண்டும்? என் சொந்த பிள்ளைகளை மரணத்துக்கு அனுப்ப நான் என்ன மாய்மாலக்காரனா? அது எனக்கு தூரமாயிருப்பதாக. இல்லை, ஐயா! 120உங்களால் போக முடியாவிட்டால்... உங்களால் இந்த கூடாரத்துக்கு வர முடியாவிட்டால் எங்காவது ஒரு சபையைத் தெரிந்து கொண்டு அங்கு போங்கள். அவர்கள் செய்யும் எல்லாவற்றையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவர்கள் ரொட்டியின் எந்த பாகத்தைப் பரிமாறுகிறார்களோ அதைப் பெற்றுக் கொள்ளுங்கள் அவர்களுக்கு பூண்டு (garlic)இருக்குமானால், அதை விட்டு விடுங்கள். பாருங்கள்? அது உண்மை. அவர்களைச் செய்ய வைக்க என்னால் முடியாது, ஆனால் அது தான் முற்றிலும்... நிச்சயமாக, நீங்கள் சபைக்குப் போங்கள். சபை கதவு எங்கு திறவுண்டாலும், நீங்கள் முடிந்த வரையில் அங்கு விரைந்து செல்லுங்கள். அவர்கள் விசுவாசிக்காமல் போனால், நல்லது... இப்பொழுது. நீங்கள் பங்கு கொள்ள வேண்டியதில்லை. அவர்களைச் சேராதீர்கள், அந்த சபைகளில் ஏதொன்றையும் சேர்ந்து கொள்ளாதீர்கள்; ஆனால் அவர்களிடம் செல்லுங்கள்; அவர்களிடம் ஐக்கியம் கொள்ளுங்கள். அது கர்த்தருடைய சித்தம் அல்ல என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? அவர் சகலத்தையும் நன்மைக்கு ஏதுவாக செய்வாரென்று அவர் கூறியுள்ளார். ஒருக்கால் இரட்சிக்கப்பட வேண்டிய ஒரு ஆத்துமா அங்கு இருக்கக் கூடும். அப்படிப் பட்டவர்களுக்கு நீங்கள் வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்யலாம். பாருங்கள்? அங்கு செல்லுங்கள். அப்பொழுது ஜனங்கள், “அவள் மிகவும் நல்ல கிறிஸ்தவ பெண்மணி, அவர்கள் மிகவும் ஒரு நல்ல கிறிஸ்தவ தம்பதிகள்; அவன் மிகவும் ஒரு நல்ல கிறிஸ்தவ பையன், அவள் மிகவும் நல்ல கிறிஸ்தவ பெண்” என்று சொல்ல முற்படுவார்கள். “என்னே, அவர்களுடன் சம்மந்தம் கொள்ள எனக்குப் பிரியம். அவர்களுக்கு ஏதோ ஒன்று உள்ளது போல் அவர்கள் உண்மையில் நடந்து கொள்ளுகிறார்கள். அது என்ன? என்பார்கள். அப்பொழுது நீங்கள் “இதுதான் அது” என்று அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். நீங்கள் உப்பாயிருங்கள், அப்பொழுது அவர்களுக்கு தாகமுண்டாகும். 121அன்புள்ள சகோ. பிரான்ஹாமே, பரிசுத்த ஆவி உள்ள அனைவரையும் அடையாளங்கள் தொடர வேண்டு மென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இயேசு அவ்வாறு உரைத்துள்ளார், மாற்கு 16ம் அதிகாரம். அப்படியானால், தங்களுக்குள் இருக்கும் எல்லாவற்றைக் கொண்டும் செய்தியை விசுவாசித்தும், இந்த அடையாளங்களைப் பெற்றிராத மக்களைக் குறித்தென்ன? அவர்கள் அவிசுவாசிகளா, அல்லது அவர்களுக்கு பரிசுத்த ஆவி தேவையா? அப்படியானால், பரிசுத்த ஆவியை எப்படி பெற்றுக் கொள்வதென்று தயவுகூர்ந்து இன்றைக்கு எங்களுக்கு அறிவுரை கூறுங்கள். எங்கள் நாளுக்கு நீர் தேவனுடைய வாயாக இருக்கிறீர் என்று விசுவாசிக்கிறோம். உங்கள் சகோதரன். என் சகோதரனே, என்னை உங்கள் சகோதரனாக பாவிப்பதற்காக உமக்கு நன்றி. அது மிகவும் நல்ல ஒரு கேள்வி என்று நான் நினைக்கிறேன். நண்பர்களே, ஆம், இந்த விஷயத்தில் நாம் சிறிது தளர்ந்திருக்கிறோம். கூடுமானால் இதைக் குறித்து சற்று நீண்ட நேரம் பேச எனக்கு விருப்பமுண்டு. பாருங்கள்? அது தளர்ந்துள்ளது. பாருங்கள்! உங்களில் சிலர். பாருங்கள்? ஒரு அனுபவத்தை பெறாமல், நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. இப்பொழுது, நீங்கள் வார்த்தையின் ஒவ்வொரு எழுத்தின் உறுப்பையும் விசுவாசிப்பீர்களானால்... நீங்கள் ஒவ்வொரு எழுத்தின் உறுப்பையும் விசுவாசிப்பதாகக் கூறுகிறீர்கள். அப்படியானால் வார்த்தையானது அங்கு கிடந்து பரிசுத்த ஆவி அதை செயல்படுத்துவதற்காக காத்துக் கொண்டிருக்கிறது; அந்த மெழுகுவர்த்தியைப் பற்ற வைக்க வேண்டியதாயுள்ளது. இங்கு திரியுடன் கூடிய மெழுகுவர்த்தி உள்ளது. மெழுகுவர்த்திக்கு வேண்டிய மெழுகும் அதற்கு தேவையான அனைத்தும் அதில் உள்ளது. ஆனால் நெருப்பு அதன் மேல் வைக்கப்பட்டு அது கொளுத்தப்படும் வரைக்கும், அது எந்த ஒளியையும் தராது. அந்த மெழுகுவர்த்தி எவ்வளவு முழுமையாக இருந்தாலும், அது எவ்வளவு நன்றாக எரியக் கூடியதாயிருந் தாலும், அது கொளுத்தப்பட வேண்டும், அப்பொழுது அது எரி கிறது. நீங்கள் விசுவாசித்து, பரிசுத்த ஆவி என்னவென்றும் அது கொடுக்கக் கூடிய கனிகளாகிய அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம் ஆகியவைகளைக் குறித்து நீங்கள் போதிக்கப்பட்டு அறிந்திருந்த போதிலும், அக்கினி அனுபவத்துடன் பரிசுத்த ஆவி இறங்கி வந்து அந்த மெழுகுவர்த்தியை பற்ற வைக்காவிட்டால், நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள வில்லை. பாருங்கள்? நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்க, அந்த அனுபவத்தைக் கொண்டவர்களாயிருக்க வேண்டும். 122நான் ஒரு தொழிற்சங்க உறுப்பினன். ஒரு கிறிஸ்தவன் அதில் சேர்ந்திருப்பது தவறா? “சத்தியம் பண்ணாதே” என்று வார்த்தை உரைக்கிறது. தொழிற்சங்கத்தின் சட்டப்பிரமாணத்தை கடைபிடிப்போமென்று நாங்கள் ஆணையிட வேண்டும். நான் கிறிஸ்தவனான முதற்கொண்டு, நான் தீவிரமாக அதில் ஈடுபடவில்லை, ஆனால் என் சந்தாவை இப்பொழுதும் செலுத்திக் கொண்டு வருகிறேன், 123யூதாஸ்காரியோத்தின் பெயர் ஆட்டுக்குட்டியான வரின் ஜீவபுஸ்தகத்திலிருந்து கிறுக்கப்பட்டதா? அது ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் முதற்கண் இடம் பெற்றிருந்ததா? சரி. தொழிற்சங்கத்தைக் குறித்து: உங்கள் வேலையைக் குறித்து எனக்குத் தெரியும்... உங்களுக்கு தொழிற்சங்கங்களும் மற்றவைகளும் உள்ளன. நீங்கள் வேலையில் நிலைத்திருக்க வேண்டுமானால், அதில் சேர்ந்திருக்க வேண்டும். அது முற்றிலும் உண்மை. அதை நீங்கள் செய்ய வேண்டும். ஆனால் கவனமாயிருங்கள் (பாருங்கள்?), ஏனெனில் இந்நாட்களில் ஒன்றில் அது தொழிலிலிருந்து மதத்துக்கு வந்துவிடும். பாருங்கள்? எல்லாமே 'யூனியன்' ஆவதற்கு அது ஒரு முன்னோடி என்பதை ஞாபகம்கொள்ளுங்கள். உங்களால் வேலை செய்ய முடியாது; நீங்கள் வேலையில் நிலைத்திருக்க அவர்கள் விடமாட்டார்கள். நீங்கள் இந்த யூனியனில் சேர்ந்திருந்தாலொழிய, நீங்கள் அவர்கள் வேலை நிறுத்தம் செய்யும்போது மட்டும் வேலை செய்பவராக (scab)ஆகி விடுவீர்கள். இப்பொழுது. இளைஞர்களே, சகோ. பிரான்ஹாம் கூறுவதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். என் சொற்கள் இரும்பு பேனாவில் இரும்பு மலையின் மேல் பொறிக்கப்படட்டும். கர்த்தர் உரைக்கிறதாவது, அதே காரியம் மத விஷயத்திலும் நிகழும். நீங்கள் ஏதோ ஒரு விதமான ஸ்தாபனத்தைச் சேர்ந்திருக்க வேண்டும். இல்லையென்றால் உங்களால் கொள்ளவோ விற்கவோ முடியாது. எனவே மிகவும் ஜாக்கிரதையாயிருங்கள், சகோதரனே. அது தொழிலோடு மட்டும் இருக்கட்டும். அதை கவனித்து வாருங்கள். இது ஒரு எச்சரிக்கை ! 124“யூதாஸ்காரியோத்தின் பெயர் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்திலிருந்து கிறுக்கப்பட்டதா? அது ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் முதற்கண் இடம் பெற்றிருந்ததா?” ஆம், அது இடம் பெற்றிருந்து, பின் கிறுக்கப்பட்டது. பாருங்கள்? ஏனெனில் மத்தேயு 10ம் அதிகாரத்தில் இயேசு யூதாஸையும் மற்றவர்களையும் அழைத்து அவர்களுக்கு அசுத்த ஆவிகளின் மேல் அதிகாரம் கொடுத்தார். அவர்கள் சென்று பிசாசுகளைத் துரத்தினார்கள். இயேசு, “சாத்தான் வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்” என்றார் (லூக் 10:18). அது சரியா? அந்த சீஷர்கள் அனைவரும் சந்தோஷத்தோடே திரும்பி வந்தனர். அவர், “பிசாசுகள் உங்களுக்குக் கீழ்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்” என்றார் (லுக் 10:20). பாருங்கள்? அது உண்மை. யூதாஸ்காரியோத்தும் அவர்களுடன் கூட இருந்தான். பாருங்கள்? எனவே ஞாபகம் கொள்ளுங்கள், நியாயத்தீர்ப்பின் போது, கவனியுங்கள். நியாயாசனத்தில், “நியாய சங்கம் உட்கார்ந்தது; புஸ்தகங்கள் திறக்கப்பட்டது. ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகம் திறக்கப்பட்டது. அதன்படியே ஒவ்வொரு மனிதனும் நியாயத்தீர்ப்படைந்தான் (தானி. 7:10; வெளி, 20:12). 125இப்பொழுது பார்த்தீர்களா, சற்று முன்பு நாம் பார்த்த கேள்வி. பாருங்கள்? நியாயாசனத்தில் இயேசு - மணவாட்டி எடுத்துக் கொள்ளப்பட்டு மகிமையில் பிரவேசித்து. கலியாணம்செய்தவளாய் பூமிக்குத் திரும்ப வந்து, ஆயிரம் வருடம் வாழ்கிறாள். ஆயிரம் வருடம் முடிவடையும் போது, சாத்தான் தன் காவலிலிருந்து கட்டவிழ்க்கப்பட்டு விடுதலையாகிறான். அவன் ஒரு தேவதூதனால் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தான் - இரும்பு சங்கிலியினால் அல்ல, சூழ்நிலை என்னும் சங்கிலியினால், அவனுடைய பிரஜைகள் அனை வரும் நரகத்தில் இருந்தனர். பூமியில் உயிரோடெழுப்பப்பட்ட அனைவரும் மீட்கப்பட்டு இயேசுவோடு கூட இருப்பார்கள். இந்த ஆயிர வருட காலத்தில், சாத்தானால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் அதன் முடிவில், இரண்டாம் உயிர்த்தெழுதல்... முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தமுள்ளவனுமாயிருக்கிறான்; இவர்கள் மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை “ (வெளி. 20:6). இப்பொழுது கவனியுங்கள், இந்த இரண்டாம் உயிர்த்தெழுதலில் அவர்கள் உயிரோடெழுகையில், சாத்தான் தன் காவலிலிருந்து கொஞ்சக் காலம் விடுதலையாக்கப்படுகிறான்; பிறகு நியாயசங்கம் உட்கார்ந்தது. இப்பொழுது கவனியுங்கள், இயேசு மணவாட்டியுடன் கூட, ராஜாவும் ராணியுமாய் சிங்காசனத்தில் அமருவார்கள், வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு; அப்பொழுது புத்தகங்கள் திறக்கப்பட்டன - பாவிகளின் புத்தகங்கள். ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புத்தகமும் திறக்கப்பட்டது. அப்பொழுது ஒவ்வொருவரும் அதன்படி மணவாட்டியினால் நியாயத்தீர்ப்படைகின்றனர். “அறியீர்களா (சட்டத்திற்கு முன்பாக இந்த சிறு விவகாரங்களை கொண்டு போய்) பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று அறியீர்களா?” (1 கொரி 6:2). பாருங்கள், பாருங்கள்? சரி. 126வெளிப்படுத்தின விசேஷம் 20:4ல் குறிக்கப் பட்டுள்ள கூட்டத்தினர் யாரென்று தயவுகூர்ந்து விளக்கு வீர்களா? அவர்கள் முன் காலத்தில் இருந்த மணவாட்டியின் பாகமா, அல்லது வருங் காலத்தில் உள்ளவர்களா? அவர்கள் முன்காலத்திலும் இப்பொழுதும் உள்ள மணவாட்டி முழுவதுமே - அவர்கள் மணவாட்டி முழுவதுமே, ஏனெனில் அவர்கள் ஆயிரம் வருட காலத்தில் வாழ்கின்றனர். சரி.) 127நீங்கள் தயவுகூர்ந்து (நல்லது. இதுவும் சரியாக அதே கேள்வி தான்)... வெளிப்படுத்தின விசேஷம் 20:4, இவர்கள் மிருகத்தையாவது, அதின் சொரூபத்தையாவது வணங்காமல் அவனுடைய முத்திரையைத் தரித்துக் கொள்ளாமல், இயேசுவைப் பற்றிய சாட்சியினிமித்தம் சிரச்சேதம் பண்ணப் பட்ட ஆத்துமாக்களா? (ஓ, அவர்கள் எதைக் குறிப்பிடுகிறார்கள் என்பதை நான் காண்கிறேன். இப்பொழுது தான் இது என்னிடம் கொடுக்கப்பட்டது, என் கையில் கொடுக்கப்பட்டது).... அவர்கள் உயிர்த்துக் கிறிஸ்துவுடனே கூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள் என்று கூறப்பட்டுள்ளதே. துன்புறுத்தப்படுவது மணவாட்டி என்பதால் இது குழப்பமாக உள்ளது. இல்லை யென்றால், வேறு யார் கிறிஸ்துவுடனே கூட ஆயிரம் வருஷம் அரசாள முடியும்? இவர்கள் 144,000 பேர்களாக இருக்கக் கூடுமா? இல்லை, இல்லை. அவர்கள் மணவாட்டியே. இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், ஞாபகம் கொள்ளுங்கள், அவர்கள்... நீங்கள், “அவர்கள் இயேசுவைப் பற்றிய சாட்சியினிமித்தம் சிரச்சேதம் பண்ணப்பட்டவர்கள்” என்று கூறுகிறீர்கள், இப்பொழுது, நீங்கள், “இவர்கள் மிருகத்தை வணங்கவில்லை” என்று கூறுகிறீர்கள். நிச்சயமாக! நீங்கள், “மிருகம் இனியல்லவா வரப் போகிறான்” என்று கேட்கிறீர்கள். மிருகம் எப்பொழுதுமே இருந்து வருகிறான். மிருகம் தான் அவர்களை கெபியிலும் ரோமாபுரியிலிருந்த அரங்கத்திலும் சிங்கங்களுக்கு இரையாகக் கொடுத்தான். அது அந்திக்கிறிஸ்து; அங்கு மிருகம் ஒருவிதமான மதத்தை உருவாக்கினான். அது சரியாக ஏறக்குறைய ஒரு மாதிரி. ரோம சபையானது வேதத்திலிருந்து விலக்கப்பட்டது. அதன் பிறகு... அவர்கள் அதை செய்தபோது, அவர்கள் அதை ஒரு ஸ்தாபனமாகச் செய்து, ஒரு நிறுவனத்தை உண்டாக்கி, அதை உலகம் முழுவதுமுள்ள ஸ்தாபன சபையாக் கினார்கள். அதை வணங்காத அனைவரும் நிர்மூலமாக்கப்பட்டனர். பாருங்கள்? அதுதான். அவர்கள் அப்பொழுது இருந்த மணவாட்டியின் ஒரு பாகம்... இப்பொழுது சரீரமானது ஒரு மரத்தைப் போல் வளர்ந்து, தலைக்கு வந்துவிட்டது. பாருங்கள்? எல்லோருமே - துன்புறுத்தப்பட்டு இரத்த சாட்சிகளாக மரித்தவர்களும் மற்றவர்களும்... ஆனால் இயேசு நதியின் இக்கரையில் நமக்கு சமாதானத்தை அருளியிருக்கிறார், அந்த கோத்திரங்களுக்கு செய்தது போல.... அவர்கள் (பாருங்கள்?) கடந்து செல்லவில்லை. இப்பொழுது. 128அவருக்கு நான் என்ன செய்ய வேண்டும்? பண்ணையில் தந்தைக்கு தொடர்ந்து (ஓ!) உதவி செய்ய வேண்டுமா? என் ஜீவனத்துக்கு நான் என்ன செய்வேன்..? அவன் தன் பெயரைக் கையொப்பமிட்டுள்ளான். ஆம், என் சகோதரனே... அவன் பெயர் அங்கு எழுதப் பட்டுள்ளது. யாரென்று எனக்குத் தெரியவில்லை... இந்த கேள்வி, “சகோ. பிரான்ஹாமே...' என்று தொடங்கி, ”அவருக்கு நான் என்ன செய்ய வேண்டும்?“ என்று கேட்கிறது. இது ஏதோ ஒரு பையன் தன் தந்தையைக் குறித்து கேட்ட கேள்வி. பார், என் அருமை சகோதரனே, உன் தந்தையை நீ கவனித்துக் கொண்டால் பாக்கியவானாயிருப்பாய், ஏனெனில் உன்னை கவனித்துக் கொள்ள முடியாத நிலையில் நீ இருந்த போது, உன் தந்தை உன்னை கவனித்துக் கொண்டார். முதலாம் கற்பனை ஒரு வாக்குத்தத்தத்தைக் கொண்டுள்ளது: “பூமியில் உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு - கர்த்தர் நீடித்த நாட்களை உனக்குக் கொடுப் பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக”. பார்? உன்னால் முடிந்த எந்த விதத்திலாவது உன் தந்தைக்கு உதவியாயிரு. அவர் மிகச் சிறந்ததைப் பெற்றுக் கொள்கின்றாரா என்பதைப் பார்த்துக் கொள். 129காயீன் சர்ப்பத்தின் வித்து என்று நீங்கள் கூறினீர்கள். அப்படியென்றால் ஏவாள், “கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன்” என்று கூறக் காரணம் என்ன? இதற்கு பதிலளிக்க பகல் உணவு முடியும் வரைக் காத்திருப்பது நல்லது. ஆம், பகல் உணவு வரைக் காத்திருந்து பிறகு இதற்கு பதிலளிக்கிறேன். ஓ, இதை விளக்க சிறிது நேரம் எடுக்கும். சரி. 130அன்புள்ள சகோ. பிரான்ஹாமே. “கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடி வருவார்கள்' என்று ஏசாயா 2:2ல் கூறப்பட்டுள்ள வசனத்தை எனக்கு விளக்குவீர்களா? ஆம், போன ஞாயிறுக்கும் முந்தின ஞாயிறு அதை விளக்கினேன். பாருங்கள்? கர்த்தருடைய ஆலயம் பர்வதங்களின்கொடுமுடியில் ஸ்தாபிக்கப்படும், எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடி வருவார்கள். பெரிய ... உங்களிடம் இல்லாமல் போனால்.... மணவாளன் மற்றும் மணவாட்டியின் வருங்கால இருப்பிடம் என்னும் ஒலிநாடா உங்களிடம் இருந்தால், அது இதை சரியாக விளக்குகின்றது. ஓ, என்னே! இப்பொழுது நான் முடித்து விடுவது நலம். ஏனெனில், என்னே, ஓ என்னே, சகோதரனே, இங்குள்ள கேள்விகள் அனைத்துக்கும் பதில் சொல்லி முடிக்க முடியாது. வயூ! 131சகோ. பிரான்ஹாமே... (இது என்னவென்று பார்ப்போம்) சகோ. பிரான்ஹாமே, உமது செய்தியைப் பின் பற்றுபவர்கள், நீரே இந்நாளின் மேசியா என்று பொதுவாக விசுவாசிக்கின்றனர். அது அப்படித்தானா? இல்லை, ஐயா!சகோ. பிரான்ஹாமே, எங்களுக்கு வெளிப்படையாகக் கூறும். நீர் யாரென்று உம்மைத் தெரியப்படுத்த நீர் தயங்குவதாக தோன்றுகிறது. தேவன் உமக்கு அளித்துள்ள இத்தனை மகத்தான ஊழியத்தில், நீர் வேதத்தில் எங்காவது அடையாளம் கண்டுகொள்ளப்பட வேண்டுமென்று நாங்கள் அறிந்திருக்கிறோம். 132இரண்டாம் கேள்வி: முதல் முறை நீர் அரிசோனாவுக்குச் சென்ற நோக்கத்தை எங்களிடம் கூறினீர். ஏனென்று எங்களிடம் கூறினீர், அது நிறைவேறினது, நீர் மறுபடியும் ஏன் அங்கு சென்றீர் என்பதை எங்களுக்குத் தெரிவிக்கவில்லை. முதலாவதாக, நான் மேசியா அல்ல! பாருங்கள்? மேசியா இயேசு கிறிஸ்துவே. ஆனால் நாம் “குட்டி மேசியாக்கள்' (Messiahottes),நாம் ஒவ்வொருவரும். மேசியா என்றால் ”அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்று பொருள். தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருந்தது; எனக்குள்ளோ அவருடைய ஆவியின் ஒரு பாகமே வாசமாயுள்ளது. அதுவே உங்களுக்குள்ளும் வாசமாயுள்ளது. சில காரியங்களை அறிந்து கொள்ள, முன்கூட்டியே காண எனக்கு ஒரு வரம் அளிக்கப்பட்டுள்ளது. நான் இன்னும் உங்கள் சகோதரனே. பாருங்கள் நான் மேசியாஅல்ல; நான் உங்கள் சகோதரன் (பாருங்கள்?), மந்தைக்கு ஒரு மேய்ப்பன் மாத்திரமே. நான் மேசியாவென்று உங்களிடம் கூறுவேனானால், நான் ஒரு பொய்யனாயிருப்பேன். பாருங்கள்? நான் பொய்யனாயிருக்க விரும்பவில்லை. “முதல் முறை நான் ஏன் அரிசோனாவுக்குச் சென்றேன்?” அதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள். நான் கர்த்தருடைய நாமத்தில் அங்கு சென்றேன், ஏனெனில் ஒரு தரிசனத்தின் மூலமாக அங்கு நான் அனுப்பப்பட்டேன். நான் இரண்டாம் முறை அங்கு சென்றது ஒரு நோக்கத்துக்காகவே. அதை பற்றி ஒன்றும் கேட்காமல் தனியே விட்டு விடுங்கள். நான் எதற்காகப் போனேன் என்று எனக்குத் தெரியும். எல்லாவற்றையும் என்னால் கூற இயலாது. நீங்கள் - பிசாசுக்குத் தெரியாது - என் இருதயத்திலுள்ளதை அவனால் அறிந்து கொள்ள முடியாது. அதை நான் வெளிப்படையாகக் கூறினால், அப்பொழுது அவனால் அறிந்து கொள்ள இயலும், ஆனால் என் இருதயத்தில் உள்ள வரைக்கும் அவன் அறிந்து கொள்ள மாட்டான், அவனால் அறிந்து கொள்ள இயலாது. “அது நிறைவேறும் வரைக்கும் காத்திருங்கள்” என்று கூறுவேனானால்... ஞாபகம் கொள்ளுங்கள், இந்த ஒலிநாடாவை வைத்திருங்கள்; ஒரு நோக்கத்துக்காகவே நான் அரிசோனா சென்றிருக்கிறேன். என்னைப் பொறுத்துக் கொள்ளுங்கள். பாருங்கள்? நீங்கள் செய்ய நான் கூறுவதை மட்டும் செய்யுங்கள் (பாருங்கள்?), நான் சொல்வதை மட்டும் செய்யுங்கள். பாருங்கள்? ' 133சகோ.பிரான்ஹாமே, உங்களிடம் கேட்க விரும்பும் சில கேள்விகள் எனக்குண்டு. எல்லாவற்றையும் விற்க நீர் ஜனங்களுக்கு ஆலோசனை கூறினதாக ... ஜனங்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்... (அதையும் நான் தனியே விட்டு விடுவது நலமாயிருக்கும். நாம் பார்ப்போம். நல்லது, முடிக்க வேண்டிய நேரம் ஏற்கனவே கடந்து விட்டது. பகல் உணவுக்குப் பிறகு இதை நாம் பார்ப்போம். இதற்கு நான் பதிலளிக்கிறேன், அல்லது என்னால் முடிந்த வரையில் இதற்கு பதிலளிக்க முயல்கிறேன். எனக்குத் தெரியாது; இது இப்பொழுது தான் என் கையில் கொடுக்கப்பட்டது. பாருங்கள்? பில்லி சில கேள்விகளை கதவண்டையில் என்னிடம் கொடுத்தான். பாருங்கள்?) ஜனங்கள் தங்கள் வீடுகள் அனைத் தையும் விற்று உம்மை அரிசோனாவுக்குப் பின் தொடரவேண்டுமென்றும், இல்லையென்றால் அவர்கள் எடுத்துக் கொள்ளப்படுதலில் போகமாட்டார்கள் என்றும் நீர் ஆலோசனைக் கூறினதாக ஜனங்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இது உண்மையா? அது பொய். பாருங்கள்? உ.- ஊ!... அல்லது நாங்கள் எங்கள் வீடுகளை விற்க வேண்டுமா நீர் எப்பொழுதாவது இதைச் சொன்னீரா? 134இல்லை, ஐயா! நான் சொல்லவேயில்லை! அவ்விதம் செய்ய வேண்டாம் என்று நான் ஜனங்களுக்கு ஆலோசனை கூறினேன். ஊ - ஊ . நான் அங்கு சென்ற சமயத்தில் “ஜூனி” ஜாக்சன் கண்ட சொப்பனம் ஞாபகம் உள்ளதா? “ஜூனி” இதை சொப்பனத்தில் கண்டதாக... எத்தனை பேருக்கு அந்த சொப்பனமும் தேவன் எவ்விதம் அதன் அர்த்தத்தை உரைத்தார் என்பதும் ஞாபகமுள்ளது? அந்த பெரிய மலை, நாங்கள் அதன் மேல் நின்று கொண்டிருந்தோம், அங்கு கலைந்து போன எழுத்துக்கள் இருந்தன. அதற்கு நான் அர்த்தம் உரைக்க முயன்றேன், என்னால் முடியவில்லை. நான் - அவர்களுக்கு நான் அதன் அர்த்தத்தை உரைத்துக் கொண்டிருந்தேன். அதன் அர்த்தம் அனைத்தையும் நான் உரைத்து முடித்த பின்பு, என் கையை நீட்டி (அவருடைய சொப்பனத்தில்) ஒரு வித மான கடப்பாறையை எடுத்து மலையின் உச்சியை உடைத்து உள்ளே பார்த்தபோது, அது பனி வெண்மையாய் இருந்தது, சலவைக் கல் போல். அதில் ஒன்றும் எழுதப்படவில்லை. நான், “நீங்கள் எல்லோரும் இங்கு தங்கியிருந்து இதைப் பார்த்துக் கொண்டிருங்கள், நான் போகிறேன்” என்றேன். 135அப்பொழுது “ஜூனி... எல்லோரும் மேலே சென்றனர். எல்லா சகோதரர்களும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். வேறொருவர்... அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள். ”நல்லது. உங்களுக்கு என்ன தெரியும்? அதில் ஒன்றுமே எழுதப்பட்டிருக்கவில்லை, அவர் வெளியே எழுதப்பட்டிருந்ததை படித்தார். இதில் ஏன் ஒன்றும் எழுதப்பட்டிருக்கவில்லை? எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை“ என்றனர். ஜூனியர் திரும்பி பார்த்த போது, நான் மேற்கே, சூரிய அஸ்தமனத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதைப் பார்த்தார். நான் ஒரு மலையைக் கடந்து, மற்றொரு மலையைக் கடந்து, மிகவும்வேகமாக சென்று கொண்டிருந்தேனாம். பின்பு அவர்கள் திரும்பிப் பார்த்து நான் போய் விட்டதாக கண்டனர்; அவர்களிடம் நான் அங்கு தங்கியிருக்க கூறியிருந்த போதிலும், அவர்களில் ஒரு பெரிய கூட்டம் நான் சென்ற வழியை நோக்கிப் புறப்பட்டு, அவர்கள் அங்கு சென்று அதை செய்ய வேண்டுமென்று விரும்பினர். நான் அவர்களிடம் “அங்கேயே தங்கியிருங்கள், அங்கேயே தங்கியிருங்கள்; இதுவே அந்த இடம் என்று கூறியிருந்தேன். 136அதன் பிறகு, அதை நான் செய்த போது, பிறகு - நான் சரியாக சென்றேன். அதன் பிறகு சிறிது கழிந்து. கர்த்தருடைய தூதன் எனக்குப் பிரத்தியட்சமாகி, அரிசோனாவுக்குப் போ' என்றார். அந்த வெடிச் சத்தம் அங்கு உண்டானதைக் கேட்டு அங்கு சென்றேன். அது என்ன? அந்த பையன் சரியாக அப்படியே அந்த சொப்பனத்தைக் கண்டு, கர்த்தரும் சரியான ... “நான் ஏதோ ஒன்றுக்காக அங்கு செல்கிறேன்” என்று நான் கூறினதை நினைவில் கொள்ளுங்கள். அங்கு நான் சென்ற போது, அது கர்த்தருடைய பர்வதத்தின் உள்ளே முத்தரிக்கப்பட்டிருந்த ஏழு முத்திரைகளின் இரகசியமாயிருந்தது. ஏழு முத்திரைகள் திறக்கப்பட்டு, நான் திரும்பி வந்தேன். பாருங்கள்? இல்லை, நீங்கள் அவ்விதம் செய்யக் கூடாது. நீங்கள் போக விரும்பினால், அது உங்கள் விருப்பம். ஆனால் நான் .... நீங்கள் எங்கு சென்றாலும் எனக்கு அக்கறையில்லை, ஆனால் மணவாட்டி அங்கிருந்து போகப் போகிறாள் என்று எண்ணி, அதற்காக அங்கு செல்வீர்களானால் நீங்கள் தவறு செய்கின்றீர்கள். 137“மேலும் ஜனங்கள் இதைச் சொல்லக் கேட்டிருக்கிறேன். ... நான் (அந்த கேள்வியை நான் பார்க்கட்டும்... அதை எங்கோ தவறாக கூறிவிட்டேன். அதை பார்க்கட்டும்)... எடுத்துக் கொள்ளப் படுதல். அது உண்மையா? நாங்கள் எங்கள் வீடுகளை விற்க வேண்டுமா, நீர் எப்பொழுதாவது இதைச் சொன்னீரா? இல்லை, நான் ஒருபோதும் கூறவில்லை. நான் கூறவில்லை... ஜனங்கள் இருக்கும் இடத்திலேயே தங்கியிருந்து... இயேசு வரும் வரைக்கும் தொடர்ந்து அங்கேயே தங்கியிருக்க நான் ஜனங்களுக்கு எப்பொழுதும் ஆலோசனை கூறினதுண்டு. நான் உங்களிடம் அநேக முறை இதை கூறினதற்கு, இந்த ஒலிநாடா ஒரு ஞாபகச் சின்னமாக இருக்கட்டும். இந்த நாள் ஒரு ஞாபகார்த்தமான நாளாயிருக்கட்டும். என் சொல் ஞாபகமூட்டுவதாயிருக்கட்டும். நான் ஒரு முறையாவது நிர்ப்பந்தம்பண்ணினதேயில்லை. நான் ஒருக்காலும் செய்யவில்லை. அவர்கள் தங்கள் சொந்த சபையை விட்டு, தங்கள் பொருட்களை விற்கும் படி நான் கூறினதேயில்லை. தேவன் அதை அறிவார். நான். ஜனங்களிடம், தேவன் அவர்களை அழைக்கும் வரைக்கும். அவர்கள் கிறிஸ்தவராக நிலைத்திருந்து, அவர்கள் உள்ள இடத்திலேயே தங்கியிருக்க நான் எப்பொழுதும் ஆலோசனை கூறி வந்திருக்கிறேன்; அது எல்லோருக்கும் தெரியும். அங்கேயே தங்கியிருங்கள்! ஆனால் இப்பொழுதோ, நான் ஜனங்களிடம் இவ்விதம் கூறுவேனானால்.... யாராகிலும் ஒருவர், ”நான் அங்கு வரவேண்டுமென்று விரும்புகிறேன். அங்கு தங்க வேண்டுமென்று...“என்கிறார். நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள், அதனால் பரவாயில்லை. நீங்கள் எங்கு சென்றாலும் எனக்கு அக்கறையில்லை; அது என் வேலையல்ல. ஆனால் இப்பொழுது, இவ்விதம் எண்ணுவது... பாருங்கள், அது என்ன செய்கிறது? அது ஒரு பிரத்தியேக கொள்கையை (cult)துவக்குகிறது (பாருங்கள்?), அப்பொழுது நான் தொல்லையில் அகப்பட்டுக் கொள்கிறேன். அங்கு ஒரு கூட்டத்தினர் விரைவில் தர்மத்தை நம்பியிருக்கப் போகின்றனர். அது என்னவாயிருக்கும்? “நாங்கள் மணவாட்டியின் எடுத்தக் கொள்ளப்படுதலுக்காக இங்கு வந்திருக்கிறோம்”. அதற்காகவே செய்தித்தாள்கள் காத்துக் கொண்டிருந்தன. அவர்கள் தர்மத்தை நம்பியிருக்கத் தொடங்கி தங்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாத நிலையை அடைவதை வெளியிட அவர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அப் பொழுது அவர்கள் என்ன செய்யப் போகின்றனர். 138“நல்லது. நாங்கள் சகோ. பிரான்ஹாமை பின் தொடர்ந்து இங்கு வந்தோம். அவ்விதம் கருதப்பட்டது. அதைக் குறித்து நான் மிகவும் குற்றமற்றவனாயிருக்கிறேன். அருமையான, இனிமையான ஜனங்கள், அவர்களை நான் நேசிக்கிறேன் என்பதை அவர்கள் அறிந்திருக்கின்றனர் - அவர்கள் தவறு செய்த போதிலும். அவர்கள் ... ஏன், அது அவர்கள். அவர்களை எப்படியும் நான் நேசிக்கிறேன். பாருங்கள்? அவர்களை நான் நேசிக்கிறேன்; அவர்கள் என் பிள்ளைகள்; ஆனால் அவர்கள் நான் சொல்வதைக் கேட்பதில்லை - அவர்களிடம் நான் சொல்ல முயல்வதை. நான் கர்த்தருடைய நாமத்தில் ஏதோ ஒன்றைச் செய்ய வேண்டுமென்று விரும்புகி றேன். அவர்களோ அதை நான் செய்ய விடுவதில்லை. பாருங்கள்? அவர்கள் என் சார்பில் இருப்பதற்கு பதிலாக உண்மையில் எனக்கு விரோதமாக சென்று கொண்டிருக்கின்றனர். அவர்கள் செய்வது... எப்பொழுதாகிலும் ஒரு செய்தி பிரசங்கிக்கப்பட வேண்டுமென்றால், இது இந்த கூடாரத்தில் தான் பிரசங்கிக்கப் படும்; நான் எதைச் செய்ய வேண்டுமென்றாலும், நான் இங்கு வந்து, உங்களுக்கு முதலில் இந்த கூடாரத்திலிருந்து எடுத்துரைப்பேன் என்று நான் உங்களிடம் கூறவில்லையா? அது என் வாக்குறுதி! 139மேலும், நான் கேள்விப்பட்டது, அநேக ஆண்டுகளுக்கு முன்பு ஜீவ அப்பத்தைக் குறித்து நீர் எழுதின ஒரு புத்தகத்தின் பேரில் ஒரு போதகம் பரவியுள்ளது... அதாவது, நாங்கள் எல்லோரும் உம்முடன் இருக்க வேண்டுமென்றும், இல்லையென்றால் நாங்கள் எடுத்தக் கொள்ளப்படுதலை இழந்து விடுவோம் என்றும் அவர்கள் அதை வியாக்கியானம் செய்கின்றனர். நல்லது, அந்த புத்தகம் தவறு. ஜீவ அப்பம் என்னும் தலைப்பு கொண்ட அந்த புத்தகம், அது எனக்கு இப்பொழுது ஞாபகம் வருகிறது. அது உலகம் முழுவதும் உள்ள சபையை போஷிப்பதற்காக, எல்லாவிடங்களிலும் பாருங்கள், தொல்லை என்னவெனில். ... இப்பொழுது, இப்பொழுது, ஜனங்களாகிய நீங்கள் திடமாயிருக்கிறீர்கள், ஆனால் இது நடக்க வேண்டும், அது ஒவ்வொரு கூட்டத்தையும் தொடர்கின்றது. அண்மையில் நான் மார்டின் லூத்தரைப் பற்றி படித்துக் கொண்டிருந்தேன், நம்மை அதனுடன் ஒப்பிடுவதற்காக அல்ல; அதைப் போன்று இதுவும் ஒரு சீர்த்திருத்தமே. கேள்வி என்னவெனில்... வரலாற்று ஆசிரியர்கள், “மார்டின் லூத்தர் கத்தோலிக்க சபையை எதிர்த்துப் போராடி வெற்றி காண முடிந்தது ஆச்சரியமான ஒரு செயல்தான். ஆனால் அதைக் காட்டிலும் மிகவும் ஆச்சரியமான செயல். அவருடைய கூட்டங்களைத் தொடர்ந்த மூட பக்தி வைராக்கியத்துக்கு (fanaticism)மேல் தன் தலையை உயர்த்தி, எப்படி வார்த்தைக்கும் அவருடைய அழைப்புக்கும் அவரால் உண்மையாயிருக்க முடிந்தது என்பதே” என்று எழுதியுள்ளனர். பாருங்கள்? இல்லை, ஐயா! உங்கள் சொந்த கருத்தை... நான். கூறினதில் எந்த மனிதனாவது ஸ்திரீயாவது எதையாகிலும் நுழைத்தால், அதை விசுவாசிக்காதீர்கள். அவர்களுக்குத் தெரிவதில்லை... அவர்கள் சொல்கின்றனர்... அவர்கள்... 140மேலும் விற்று அரிசோனாவிலுள்ள சியரா விஸ்டாவில் குடியேறின குடும்பங்கள், “சிறு பெத்லகேம்” என்னும் தலைப்பு கொண்ட உம்முடைய ஒலிநாடாவிலிருந்து, எடுத்துக் கொள்ளப்படுதல் அரிசோனாவில் நிகழும் என்று ஊகித்துக் கொண்டனராம். அங்கு செல்ல அவர்களுக்கு நீர் ஆலோசனை கூறினீரா? நிச்சயமாக நான் அவ்விதம் செய்யவில்லை. அவர்கள் அதைக் குறித்து எனக்கு கடிதம் எழுதினபோது - கனெக்டிகட்டி லுள்ள யாரோ ஒருவர் அல்லது ஏதோ ஒரு இடம் - “நீங்கள் உங்கள் வாழ்நாளிலேயே மிகவும் மோசமான தீர்மானத்தை செய்திருக்கிறீர்கள். அப்படி ஒன்றும் செய்து விடாதீர்கள்” என்று அவர்களுக்கு பதில் கடிதம் எழுதினேன். பாருங்கள், உங்களால் முடியாது. நல்லது, இதை ஞாபகம் கொள்ளுங்கள், ஜனங்களாகிய நீங்கள்... இப்பொழுது, அவ்விதம் செய்ய நான் ஜனங்களிடம் கூறுகிறதில்லை என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும்; அவ்விதம் செய்ய வேண்டாமென்று அவர்களிடம் நான் கூறுகிறேன். ஆனால் பாருங்கள், அது கூட்டத்தை தொடர வேண்டியதாயுள்ளது. ஜனங்கள் என்னை மேசியா என்று ஏன் அழைக்கின்றனர்? ஜனங்கள் ஏன்... அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு... அங்குள்ள ஒருவர் அன்றொரு நாள் என்னிடம் ஒன்றைக் காண்பித்தார், அவரிடம் ஒரு சிறு காரியம் இருந்தது, அவர் தொடர்ந்து செய்து கொண்டு, எல்லோரும் என் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறவேண்டுமென்று ஜனங்களிடம் கூறினார். அது என்னை அந்திக்கிறிஸ்துவாகச் செய்து விடும்! இத்தகைய காரியங்களை நான் ஆதரிப்பவன் அல்ல, ஜனங்களாகிய நீங்கள் அனைவரும் அதை அறிந்திருக்கிறீர்கள். ஆனால் பாருங்கள், இது வரவேண்டியதாயுள்ளது. அது செய்தி உண்மையென்பதை அடையாளம் காட்டுகிறது. அவர் கள் கிறிஸ் துவின் முதலாம் வருகைக்கு முன்னோடியான யோவானிடம் வந்து, “நீர் மேசியாதானே” என்று கேட்கவில்லையா? அவன், “நான் மேசியா அல்ல. அவருடைய பாதரட்சைகளை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரன் அல்ல. அவரை நோக்கிப்பார்ப்பதற்கும் கூட நான் பாத்திரன் அல்ல” என்றான். பாருங்கள்? ஆனால் அவன், “எனக்கு பின் ஒருவர் வருகிறார்...” என்றான். 141சகோ. பிரான்ஹாமே, நாங்கள் ஏதாவதொன்றை இழந்து விட்டிருக்கிறோமா? நீர் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மையென்று நம்புவதாக இந்த ஜனங்கள் உரிமை கோருகின்றனர்' (ஆனால் அவர்கள் அவ்விதம் செய்வதில்லை! அவர்கள் நம்புவதில்லை. அவர்களுடைய செய்கைகள் அவர்கள் நம்புவதில்லை என்பதைக் காண்பிக்கிறது). இந்தக் காரியங்களைக் குறித்து ஆமாம். அல்லது இல்லை என்னும் உம்முடைய நேரடியான விடையை நான் அறிய விரும்புகிறேன் (நீர் பெற்றுக் கொள்வீர்! சரி). அது உண்மையானால், நாங்கள் ஆயத்தமாகி அங்குள்ள மற்றவர்களுடன் சேர்ந்து கொள்ள விரும்புகிறோம். இந்த கேள்விகளுக்கான உம்முடைய விடைகளுக்காக உமக்கு நன்றி, கர்த்தருடைய வருகை தாமதிக்குமானால், இந்த ஞாயிறன்று இந்த விடைகளைக் கேட்பதற்காக காத்திருப்பேன். ஓ, என்னே! நல்லது, சகோதரனே, சகோதரியே, நான் அவ்விதம் கூறினதில்லை, கூறுவதுமில்லை என்பது புரிந்து கொள்ளப் பட்டு விட்டதென்று நம்புகிறேன். இப்பொழுது, ஜனங்கள்... நீங்கள் அரிசோனாவுக்கு வந்து வாழ விரும்பினால், ஓ, நிச்சயமாக..... ஒருக்கால் இந்த முதலாம் 'செமஸ்டரின் போது, நான் அரிசோனாவில் தங்கியிருப்பேன். நான் இங்கு திரும்பி வர வேண்டும். நான் .... அங்கு தங்க எனக்கு விருப்பம்; பிள்ளைகளின் உடல் நலம் தேறி யுள்ளது, மற்றெல்லாமே. அங்கு சிறிது காலம் தங்க விரும்புகிறேன். அங்கு தங்குவதற்கு எனக்கு ஒரு நோக்கமுண்டு. ஞாபகம் கொள்ளுங்கள், இது ஒலிநாடாவில் பதிவாகிறது. கர்த்தர் உரைக்கிறதாவது. இப்பொழுது நான் செய்து கொண்டிருப்பதைச் செய்வதற்கு எனக்கு ஒரு நோக்கம் உண்டு; எனக்கு நோக்கமுண்டு என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; ஆனால் அது என்னவென்று உங்களிடம் நான் கூறமாட்டேன். வீடுகளை விற்க வேண்டாம் என்று நான் ஏன் கூறுகிறேன் என்றால், நீங்கள் அங்கு வந்து ஏதோ ஒன்றை இழந்து விட்டதாகக் காண்பீர்கள், நீங்கள் கயிற்றின் சிறிய முனைக்கு வந்து விடுவீர்கள். அப்படிச் செய்யாதீர்கள். நான் சிறிது காலம் மட்டுமே அரிசோனாவில் தங்கியிருப்பேன்; நிரந்தரமாக அல்ல. ஏன்? இப்பொழுது என்னால் அங்கிருந்து வெளியே வர இயலாது. 142அங்கு ஜனங்கள் தங்கி தர்மத்தில் வாழ நான் செய்து விட்டால், என்ன நடக்கும்? அதைதான் ஸ்தாபனங்களும் மற்றவைகளும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றன. “ஆஹா, அவருடைய நோக்கம் என்னவென்று நான் உங்களிடம் சொன்னேன் அல்லவா, மற்றுமொரு தீர்க்கதரிசிகளின் கூட்டம், அப்படி ஏதோ ஒன்று என் பார்கள். பாருங்கள்? அதை தான் அவர்கள் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த ஜனங்களுக்கு நான உத்திரவாதி; நான் செய்யச் சொன்னதை அவர்கள் செய்யவில்லை என்றாலும். அவர்கள் அதற்கு மாறாகச் செய்து விட்டனர். நீங்கள், ”அவர்கள் எப்படியோ போகட்டும், நீர் செய்ய வேண்டாம் என்று சொன்னதை அவர்கள் செய்து விட்டனர்“எனலாம். ஆனால் என் இருதயம் அதற்கு இடம் கொடுக்காது. நான் இன்னும் அவர்களை பின்தொடர விரும்புகிறேன். அவர்கள் என் பிள்ளைகள்; அவர்களை நான் திரும்பப் பெற்றுக் கொள்ளும்போது, அவர்களை ஒருவேளை நான் சிறிது அடிக்கக்கூடும். ஆனால் நான் நிச்சயம் அவர்களை பின் தொடரப் போகிறேன். நான் எப்படி அதை அங்கு செய்யப் போகிறேன். அவர்கள், “வார்த்தையைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இங்கு வந்திருக்கிறோம்” என்றனர். அவர்களை அனுப்புவதற்கு எனக்கு சபை கிடையாது. அவர்கள் அங்கு செல்லும் சபைகள், மற்ற இடங்களில் நீங்கள் விட்டுப் பிரிந்த சபைகளைப் போலவே இருக்கும். சொல்லப்போனால் இன்னும் மோசமாக இருக்க வகையுண்டு. பாருங்கள்? அவர்கள் எப்படியும் அந்த சபைகளுக்கு செல்ல மாட்டார்கள். அவர்களுக்குப் பிரசங்கிக்க எனக்கும் ஒரு சபையும் இல்லை. அதுவுமல்லாமல் என் பிள்ளைகளை நான் அரிசோனாவுக்கு வெளியே கொண்டு செல்ல தகப்பன் என்னும் முறையில் நான் கடமைபட்டிருக்கிறேன். 143உங்களை ஒன்று கேட்கிறேன். சென்ற வருடம் இந்த சபையில் முப்பதுக்கும் அதிகமான செய்திகளை பிரசங்கித்தேன். இந்த ஐந்து ஆண்டுகளில், வெளியே இருந்தபோது. நான் அரிசோனாவுக்கு சென்ற முதற்கொண்டு, மற்ற நேரங்களில், நான் ஐந்து ஆண்டுகளில் பிரசங்கித்ததைக் காட்டிலும், ஒரு ஆண்டில் இந்த சபையில் அதிகம் பிரசங்கித்திருக்கிறேன் (நிச்சயமாக!). இதுவேஎன் வீடு; இதுவே என் தலைமை அலுவலகம்; இங்குதான் எங்கள் அமைப்பு உள்ளது. என்ன நடந்த போதிலும், அதை மனதில் கொள்ளுங்கள். நீங்கள் ஞானமுள்ளவர்களாயிருந்தால், ஒன்றை கிரகித்துக் கொள்வீர்கள். என்ன நடந்தபோதிலும், அதுதான் எங்கள் தலைமை அலுவலகம், இந்த இடம் தான். அதை மனதில் கொண்டவர்களாய், என்றாகிலும் ஒரு நாள் இந்த ஒலிநாடாவைத் திரும்பவும் கேட்டு, நான் தீர்க்கதரிசனம் உரைத்ததை நீங்கள் கேட்டதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். சரி, அதை ஞாபகம் கொள்ளுங்கள். நீங்கள் விட்டு வந்து, சபைக்கு வருவீர்களானால், அதை கண்டு பிடிக்க அங்கு செல்லாதீர்கள், ஏனெனில் அங்கு நான் இருக்க மாட்டேன். எனக்குப் போக இடமில்லை; எனக்குப் பிரசங்கம் செய்ய இடமில்லை. அவர்களுடைய சபைகளில் நான் பிரசங்கிக்க அவர்கள் அனுமதிப்பதில்லை. எனக்கு எந்த ஒரு இடமுமில்லை. அந்த மனிதனிடம் நான் வாக்குக்கொடுத்தேன், அங்கு நான் வரும்போது... இங்கு வந்து நான் ஒரு பெரிய கட்டிடத்தைக் கட்டி, அவர்களுடைய சபைகளை காலியாக்கி விடுவேன் என்று அவர்கள் அனைவரும் பயந்தனர். ஆனால் அதுவல்ல என் வாழ்க்கையின் நோக்கம். பாருங்கள்? நான் ஜனங்கள் இரட்சிப்படைய உதவி செய்கிறேன். அதன் பிறகு அது அவர்களைப் பொறுத்தது. அந்த சமாரியன் அந்த மனிதனை சத்திரத்துக்கு கொண்டு சென்றது போல். அதன் பிறகு அவர்கள் தங்களை கவனித்துக் கொள்ளட்டும். நான் சபைகளை உடைப்பதற்காக இங்கில்லை. கிறிஸ்துவுக்காக மனம் மாறினவர்களைப் பெறவே நான் இங்குள்ளேன். பாருங்கள்? அவர்கள் தங்கள் சொந்த வழியில் வியாக்கியானம் செய்து நான் கூறுவதை கூறாதபோது, அது ஜனங்களிடையே என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளும்படி செய்கிறது. பாருங்கள்? 144அந்த தரிசனம் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? எத்தனை பேருக்கு ஜூனியர் ஜாக்சனின் சொப்பனம் ஞாபகமுள்ளது? நீங்கள் எல்லோரும் அதை அப்படியே பின்பற்றுங்கள். அது என்ன? நான் அங்கு போயிருக்கும்போது, இங்கு தங்கியிருங்கள்! பாருங்கள்? அர்த்தத்தைப் பெற்றுக் கொண்டு திரும்பி வந்தேன். என் இருதயத்தில் ஏதோ ஒன்றுள்ளது. அதைச் செய்ய நான் கர்த்தரால் எச்சரிக்கப்பட்டிருக்கிறேன். அது இந்த சபையைக் குறித்து, இந்த கூடாரத்தைக் குறித்து செய்யப்பட வேண்டிய ஒன்று; நான் அங்கு அல்லது வேறெங்காவது சிறிது காலத்துக்குச்செல்ல வேண்டும். அது ஒரு நோக்கத்துக்காக, பெரிய நோக்கத்துக்காக. அந்த நோக்கத்தைக் குறித்து உங்களுக்கு ஒன்றும் தெரியாது, நான் சுற்றித் திரிந்து கொண்டிருக்கவில்லை என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். நான் அவ்விதம் நடந்து கொள்வதாக எண்ண வேண்டாம். நான் கர்த்தருடைய சித்தத்தின்படி செயல்படுகிறேன். எனக்குத் தெரிந்த வரைக்கும் நான் செயல்பட்டு வருகிறேன். பாருங்கள்? ஆகையால் தான், நான் சொல்வதை நீங்கள் விசுவாசிப்பீர்களானால், நான் செய்யச் சொல்வதை செய்யுங்கள் (பாருங்கள்?), நான் சொல்வதற்கு செவிகொடுத்து, நான் உங்கள் சகோதரன் என்று நம்புங்கள். நான் தீர்க்கதரிசி என்று நீங்கள் விசுவாசிப்பீர்களானால், என் சொற்களுக்கு தவறான அர்த்தம் உரைக்காதீர்கள்! ஏதாவதொன்று இருக்குமானால், எனக்கு உதவி செய்வாராக, நீங்கள் அறிய வேண்டியது ஏதாவதொன்றை தேவன் என்னிடம் கூறுவாரானால், அதை நான் அப்படியே உங்களுக்கு எடுத்துரைப்பேன் என்பதை தேவன் அறிவார். அதனுடன் எதையும் கூட்டாதீர்கள், அதிலிருந்து எதையும் எடுத்துப் போடாதீர்கள். நான் சொன்னவிதமாகவே அதை செய்யுங்கள் (பாருங்கள்?), ஏனெனில் என் இருதயத்திலுள்ளதை எனக்குத் தெரிந்த வரைக்கும் சிறப்பாக உங்களிடம் கூறுகிறேன். பாருங்கள்? அதை நீங்கள் விசுவாசியுங்கள். அதைக் குறித்து நான் என்ன கூறுகிறேனோ அதை அப்படியே ஏற்றுக் கொண்டு. அதை அப்படியே போக விட்டு விடுங்கள். சரி. என் பிள்ளைகள் ஏதாவது உண்ண, அவர்களை நான் இங்கே கொண்டு வரவேண்டும். அவர்கள் அந்த வனாந்தரத்தில் பட்டினி கிடக்கின்றனர். 145அன்றொரு நாள் ஒரு போதகர் என்னிடம் வந்து, “சகோ. பிரான்ஹாமே, இதுவரை கண்டிராத மிகவும் மோசமான கொள்கையை (cult)அவர்கள் உடையவர்களாயிருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு காலையிலும் வெளியே செல்கின்றனர். அவர்கள் வேலைக்குப் போகமாட்டோம் என்கின்றனர், ஏனெனில் அவர்கள் எடுத்துக் கொள்ளப்படுதலுக்கு மிகவும் அருகாமையில் உள்ளனராம்' என்றார். அவர்கள் வேலைக்கு செல்வதில்லை. நல்லது, நீங்கள் அதைப் புரிந்து கொள்ளவேயில்லை என்பதை அது காண்பிக்கிறது. பாருங்கள்? உண்மை (இந்த ஒலிநாடா அங்கும் செல்கின்றது). எனவே, ஆம். ஐயா! நீங்கள் எறும்பிடமிருந்துஒரு பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டுமென்று வேதம் உரைக்கிறது என்று உங்களுக்குத் தெரியும். அவர்கள் வேலை செய்யாவிட்டால், சாப்பிடக் கூடாது. எனவே அது முற்றிலும் உண்மை . அதை போன்ற கேள்விகளில் ஒன்றை இப்பொழுது கையிலெடுத்தேன். 146இது... (எனக்குத் தெரியவில்லை. பாருங்கள், இது வித்தியாசமாயுள்ளது - இது மற்ற கேள்விகளைக் காட்டிலும் வித்தியாசமான கையெழுத்தைக் கொண்டுள்ளது. உங்களுக்கு காண்பிக்க இது போன்ற எட்டு அல்லது பத்து கேள்விகள் உள்ளன என்று எண்ணுகிறேன். பாருங்கள்?) மிகவும் பரிபூரணமான சபை அரிசோனாவிலுள்ள டூசானில் இருக்கப் போகின்றதா? நான் தேவனுடைய பரிபூரண சித்தத்தில் இருக்க விரும்புகிறேன். நாங்கள் டூசானுக்கு வந்துவிடலாமா? இது மற்ற கையெழுத்து அல்லவே அல்ல. அது... நான். ... இங்கு பாருங்கள். இந்த ஒரு விஷயத்தின் பேரில் எத்தனை கேள்விகள் உள்ளதென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன். எனக்குத் தெரியவில்லை... என்னால் கண்டுபிடிக்க முடியவில்லையென்று நினைக்கிறேன். இங்கு... இவைகளில் சிலவற்றில், “உங்களுக்கு நான் தெரியப்படுத்துகிறேன்” என்று எழுதி வைத்திருக்கிறேன். 147சகோ. பிரான்ஹாமே, தயவுகூர்ந்து... (இதைப் பார்ப்போம்) நாம் வாழும் இந்நேரத்துக்கான தீர்க்கதரிசி நீர் என்பதை அறிந்துள்ளோம் (அதுதான் அது). தேவனுடைய மக்கள் உம்முடன் அரிசோனாவுக்கு ஓடிப்போக வேண்டிய நேரம் ஒன்று வருமா? அப்படியானால், அந்த நேரம் வரும்போது எங்களுக்குத் தெரிவிப்பீரா? நிச்சயமாகத் தெரிவிப்பேன், உங்களுக்குத் தெரிவிப்பேன். இப்பொழுது பாருங்கள், இங்கு இரண்டு வெவ்வேறு கையெழுத்துக்கள் உள்ளன, வித்தியாசமான இருவர். பாருங்கள்? இது ஒரு கையெழுத்து, இது வேறொரு கையெழுத்து. பாருங்கள்? இதுவே சபையின் மனதில் உள்ள ஒன்றாக இருக்க வேண்டும். பாருங்கள்? நல்லது, இதை நாம் தீர்த்து விடுவோம். என்னால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று பார்ப்போம்... நாம் பார்ப்போம். 148சகோ.பிரான்ஹாமே... (இது வேறொன்று. முற்றிலும் வித்தியாசப்பட்டது). சகோ. பிரான்ஹாமே, “மணவாட்டி மற்றும் மணவாளனின் வருங்கால இருப்பிடம் என்னும் செய்தியில் அந்த இடம் கூடாரத்திலிருந்து ஆயிரத்தைந்நூறு மைல்கள் இருக்குமென்றும், அது ஒவ்வொரு பக்கமும் எழுநூறு மைல் கொண்ட சதுரமாயிருக்கும் என்றும் நீர் சொன்னதாக சிலர் புரிந்து கொண்டுள்ளனர் (வேறு விதமாகக் கூறினால், நடுவில் உள்ள கூடாரம், ஒவ்வொரு பக்கமும் எழு நூறு மைல்கள் இருக்கும் - ஆயிரத்தந்நூறு மைல்கள். ஓ!). அது உண்மையா? நான் இந்த இடத்துக்கு வெளியே வாழ்கிறேன். அதற்குள்ளே நான் வந்து விட வேண்டும்.) இல்லை, தேனே, அதை செய்யாதே. பார்! ஜனங்கள் தவறாகப் புரிந்து கொள்வது எவ்வளவு எளிதாயுள்ளது! அந்த செய்தியை நான் பிரசங்கித்த போது, எத்தனை பேர் இங்கிருந்தீர்கள்? நான் என்ன சொன்னேன் என்றால், நான் புதிய எருசலேமை அளந்து கொண்டிருந்த போது, அது ஆயிரத்தைந்நூறு மைல் சதுரமாக இருக்கும் என்றேன். அது ஏறக்குறைய மேய்ன்னிலிருந்து பிளாரிடா வரைக்கும். பசிபிக்குக்குமேற்கே அறநூறு மைல் பரப்பாயிருக்கும் என்றும், அந்த பரப்பு ஆயிரத்தைந்நூறு மைல் சதுரமாயிருக்கும் என்றேன். என் கருத்தின்படி அது ஆபிரகாம் அந்த நகரத்தை தேடிக்கொண்டிருந்த அந்த இடத்தில் இருக்குமென்றும், அப்பொழுது சமுத்திரம் இனி இராதென்றும் சொன்னேன். சமுத்திரம் இனி காணப்படாது என்று வேதம் கூறுகிறது. பூமியின் முக்கால் பாகம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. சமுத்திரம் இனி இராது; எனவே அது அப்படிப்பட்ட ஓரிடத்தில் இருக்கும் மிகப் பெரிய நகரமாயிராது. அது அவர்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறதும், தேவன் பிறந்த இடமுமாகிய பெத்லகேமில் இருக்கும் என்று நம்புகிறேன். அது பாலஸ்தீனாவில் இருக்குமென்றும், அது அங்கு பூமியிலிருந்து எழும்பி அந்த மலையாயிருக்குமென்றும் நம்புகிறேன். 149ஆனால், அருமை நண்பரே, அதற்கும் இந்த கூடாரத்துக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. பார்? ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு. பவுல், பரிசுத்தவான்கள் அனைவரும் உலகம் முழுவதும் மரித்தனர். அவர்கள் சுட்டெரிக்கப்பட்டனர். தண்ணீரில் முழுக்கி கொல்லப்பட்டனர், சிங்கங்களுக்கு இரையாயினர், எல்லா விதத்திலும் மரித்தனர். அவர்கள் உலகத்தின் ஒவ்வொரு முட்டு முனையிலிருந்தும் எழும்பி வருவார்கள். நான் அங்கிருப்பேன் என்று நம்புகிறேன். நான் எங்கிருப்பேன் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அது எங்கிருந்தாலும், நான் அந்த கூட்டத்தில் இருப்பேனென்றால், அங்கு நான் இருப்பதற்கு எதுவும் என்னை தடை செய்ய முடியாது. பாருங்கள்? நான் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. நான் இருக்க வேண்டிய ஒரே இடம் கிறிஸ்துவுக்குள். கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களை தேவன் அவரோடு கூட கொண்டு வருவார். அது எங்கிருந்தாலும் எனக்கு கவலையில்லை, அவர் கொண்டு வருவார். என்னை இயேசுவுக்குள் அடக்கம் செய்யுங்கள். 150முன்காலத்து தீர்க்கதரிசிகளைப் பாருங்கள். அவர்கள் முதலாம் உயிர்த்தெழுதல் - முதற்பலன்கள் - பாலஸ்தீனாவில் இருக்கும் என்று அறிந்திருந்தனர். ஆபிரகாம் ஒரு இடத்தை வாங்கி அங்கு சாராளை அடக்கம் செய்தான். அவன் ஈசாக்கைப் பெற்றான். ஈசாக்கு அவனுடைய பெற்றோர் பக்கத்தில் அடக்கம் செய்யப் பட்டான். ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு எகிப்தில் மரித்தான், ஆனால் பாலஸ்தீனாவுக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டான் . யோசேப்பும் அங்கு மரித்தான். அவர்கள் அவனுடைய எலும்புகளை இங்கு கொண்டு வந்தனர். ஏனெனில் அவன் ... யோசேப்பு யாக்கோபை எகிப்தில் அடக்கம் பண்ணக் கூடாதென்றும் அவனை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு கொண்டு வரவேண்டும் என்றும் அவனை ஆணையிடுவித்தான். யோசேப்பு, “என்றாவது ஒரு நாள் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை சந்திப்பார். அப்பொழுது என் எலும்புகள் இங்கிருந்து கொண்டு செல்லப்பட்டு என் தகப்பனுடன் அடக்கம் பண்ணப் படட்டும்” என்றான். அவர்கள் அவ்விதமே செய்தனர். ஏனெனில், அவர்கள் தீர்க்கதரிசிகளாயிருந்தபடியால், உயிர்த்தெழுதலின் முதற்பலன்கள் பாலஸ்தீனாவில் இருக்கும் என்பதை அறிந்திருந்தனர். 151இப்பொழுது, வேதம் என்ன கூறுகிறதென்றால்... நீங்கள் என்னைத் தீர்க்கதரிசி என்று அழைப்பீர்களானால் - நான் அவ்விதம் என்னைக் கூறிக் கொள்ளவில்லை - ஆனால் நீங்கள் என்னைத் தீர்க்கதரிசியென்று அழைப்பீர்களானால், ஞாபகம் கொள்ளுங்கள், இதை உங்களுக்கு தீர்க்கதரிசியின் நாமத்தினால் உரைக்கிறேன் (பாருங்கள்?). உயிர்த்தெழுதலும் எடுத்துக்கொள்ளப்படுதலும் பொதுவாக உலகம் முழுவதிலும் நிகழுமென்று தீர்க்கதரிசியின்நாமத்தினால் உரைக்கிறேன். நீங்கள் எங்கே இருந்தபோதிலும், அந்த நேரம் வரும்போது, அவரைச் சந்திக்க நீங்கள் எடுத்துக் கொள்ளப் படுவீர்கள். அவ்வளவுதான்! நீங்கள் எங்கிருந்தபோதிலும், உங்களை எதுவும் நிறுத்த முடியாது. நான் அவர்களில் ஒருவனாக அங்கிருப்பேன் என்று நம்புகிறேன், அது போன்று நீங்கள் ஒவ்வொருவரும் அங்கிருப்பீர்கள் என்று நம்புகிறேன். நமக்கு இன்னும் ஒரு கேள்விக்கு நேரமுண்டா? இப்பொழுது ஏறக்குறைய 1.00 மணி ஆகப் போகிறது. 152அன்புள்ள சகோ. பிரான்ஹாமே, என் மனைவியும் நானும் பிரிந்து விட்டோம். அவள் என் மேல் விவாகரத்து வழக்கு தொடுத்திருக்கிறாள். அவள் கிறிஸ்தவள் அல்ல. நான் செய்தியை விசுவாசிக்கிறேன், அவள் இரட்சிக்கப்பட்டு விசுவாசிக்க வேண்டுமென்று விரும்புகிறேன் (அது இனிமையானது அல்லவா? அது தான் உண்மையான கிறிஸ்தவ மனப்பான்மை. பாருங்கள்?) நான் என்ன செய்ய வேண்டும்? எங்களுக்கு இரண்டு பையன்கள் இருக்கின்றனர் (பெயரைக் கையொப்ப மிட்டுள்ளார்). சகோதரனே, பாருங்கள், இதை உங்களிடம் கூற விரும்புகிறேன், அவள் உங்கள் மேல் விவாகரத்து வழக்கு தொடுத்தால் அது பிசாசு. பாருங்கள்? அவள் அதை செய்யக் கூடாது. ஆனால் நீங்கள் ஒரு கிறிஸ்தவனாக இருந்து, அந்த ஸ்திரீக்கு இடறலாக நீங்கள் இவ்வுலகில் ஒன்றுமே செய்யவில்லை என்றால், அதைச் செய்வது சாத்தானே. உங்களைப் பிரிக்க அவன் முயற்சி செய்கிறான். இப்பொழுது, அவள் தேவனால் தெரிந்து கொள்ளப் பட்டவர்களில் ஒருத்தியாக இருந்தால், அவள் அவரிடம் வருவாள். இல்லையென்றால், அவளைக் குறித்து கவலைப்படுவதனால் பிரயோஜன மில்லை. அது அப்படி செய்யுமானால்... நீங்கள் கவலைப்பட்டால் அது உங்கள் உடல்நலத்தைப் பாதிக்கும், அதைதான் சாத்தான் செய்ய விரும்புகிறான். அவன் உங்களுக்கு எதிராக கிரியை செய்கிறான் என்று நான் அறிகிறேன். எனவே நீங்கள் எல்லாவற்றையும் தேவனிடத்தில் ஒப்புவித்து, உங்களால் முடிந்த வரைக்கும் சந்தோஷமாக தேவனுக்கு சேவை செய்து கொண்டிருங்கள். “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்” (யோவான் 6:37). முழங்கால்படியிடுங்கள். நான் உங்களுடன் ஜெபிப்பேன், எதையும்செய்வேன். இந்த விஷயத்துக்காக நானும் ஜெபிக்கிறேன். நீங்கள். “தேவனாகிய கர்த்தாவே, அவளை நான் நேசிக்கிறேன்; அவள் என் பிள்ளைகளுக்குத் தாய்' (அவள் அந்த பிள்ளைகளுக்கு தாயாக இருப்பாளானால்). ”கர்த்தாவே, எல்லாவற்றையும் உம்மிடம் சமர்ப்பிக்கிறேன். அவர்கள் இரட்சிக்கப்பட வேண்டுமென்று விரும்புகிறேன்; அதை நீர் அறிந்திருக்கிறீர்; ஆனால் இதற்கு மேல் என்னால் செல்ல முடியவில்லை. அவள் எப்படியும் என்னை விவாகரத்து செய்து விடப்போகிறாள். நான் ஒன்றுமே செய்யவில்லை; நான் எதையாகிலும் செய்திருந்தால், அதை எனக்கு வெளிப்படுத்தும். நான் சென்று அதை சரி செய்து கொள்கிறேன், நான் எதையும் செய்யத் தயார்' என்று ஜெபித்து, அதை கர்த்தரிடம் ஒப்புவித்து, அதை தனியே விட்டு விடுங்கள். ஒன்றுமே நடக்காதது போல் நீங்கள் தொடர்ந்து வாழுங்கள். தேவன் மற்றவைகளைப் பார்த்துக் கொள்வார். - 153சகோ. பிரான்ஹாமே, ஜனங்கள் அரிசோனாவில் குடியேற வேண்டுமாமே (ஓ; மறுபடியும்!), இதெல்லாம் என்ன? இதை விளக்குங்கள். இது வேறு விதமான கையெழுத்து. பாருங்கள், பாருங்கள்? நல்லது, நாம் ஏற்கனவே அது என்னவென்று விளக்கி விட்டோம். 154சகோ. பிரான்ஹாமே, ஆதி அப்போஸ்தல திருச்சபையைப் போல, மணவாட்டி உபத்திரவத்தின் வழியாக கடந்து செல்வாளா? இல்லை, சில நிமிடங்களுக்கு முன்பு அதை விளக்கி னேன். இல்லை, அடுத்தபடியாக எடுத்துக்கொள்ளப்படுதல். ஞாபகம் கொள்ளுங்கள். நாம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் இருக்கிறோம், அதன் எல்லையில். இஸ்ரவேல் அணிவகுத்து சென்றது உங்களுக்கு விளங்குகிறதா? ( 155எந்தவிதமான குடும்பக் கட்டுப்பாட்டு முறையையும் கையாளுவது நியாயமா? இதை நான் பிற்பகல் வரை விட்டு வைப்பது நல்லது (பாருங்கள்?), ஏனெனில் அது. அதைக் குறித்து நான் சிறிது பேச விரும்புகிறேன். 156சகோ. பிரான்ஹாமே, நான்... (கூடுமானால் இன்னும் மூன்று நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்வேன். சிறியது ஏதாவதொன்றை நான் எடுத்துக் கொள்கிறேன்). என்னை இயேசுவுக்கு முழுவதுமாக ஒப்புக்கொடுக்க இயலவில்லை: எனக்குப் பொல்லாத ஆவி உள்ளதா? மீதியான நேரத்தை நான் இதன் பேரில் செலவிட விரும்புகிறேன். உங்களை இயேசுவுக்கு முழுவதுமாக ஒப்பு கொடுக்க இயலவில்லை. அவர்கள்... பாருங்கள், அது ஆணா, பெண்ணா என்று தெரியவில்லை; அது யாரென்று என்னால் கூற முடியவில்லை. தேவன் அதை அறிவார். உங்களை இயேசுவுக்கு ஒப்புக்கொடுக்க முடியவில்லை. ஏன்? என்ன விஷயம்? நீ ஸ்திரீயானால், மனைவியாயிருக்க உன்னை முழுவதும் உன் கணவருக்கு சமர்ப்பிக்க வேண்டுமல்லவா? உனக்கு விவாகமான போது நீ நற்பண்பு கொண்ட இளம்பெண்ணாய் இருந்தாய். நீ நற்பண்பு கொண்டவளாயிருந்து, அவ்விதம் நிலைத்திருக்க உன் வாழ்க்கையில் போராடி வந்தாய். பிறகு ஒரு நாள் நீ நேசிக்கும் ஒரு மனிதனைக் கண்டுபிடித்தாய். நீ முழுவதும் அவருடையவளாகி விட்டாய். நீ வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் எதிராக போராடி, நற்பண்பு கொண்டவளாய் சுத்தமாக வாழ முயன்றாயே, அது அனைத்தையும் ஒரு மனிதனிடம் சமர்ப்பித்து விடுகிறாய். அது சரியா? உன்னை முழுவதுமாக அவருடைய கரங்களில் ஒப்படைத்து. நீ அவருடையவளாகி விடுகிறாய். நீ நாணயத்திலும் ஒழுக்கத்திலும் உறுதியாக நின்றிருந்த இவ்வனைத்தையும் ஒரு மனிதனிடம் கொடுத்து விடுகிறாய். அதையே நீ இயேசு கிறிஸ்துவுக்கு செய்யக்கூடாதா என்ன? அந்த விதமாக உன்னை சமர்ப்பித்து விடு - உனக்குள்ள எல்லாவற்றையும், என் சிந்தையை, என் எண்ணங்களை நிச்சயமாக. நீ பொல்லாத ஆவியால் பீடிக்கப்பட்டிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. நான் என்ன நினைக்கிறேன் என்றால், அந்த விதமான எண்ணங்களினால் அந்த பொல்லாத ஆவி உன்னை அபிஷேகித்து, நீ தேவனுக்கு உன்னை முழுவதுமாக ஒப்புக் கொடுக்க முடியாது என்று நினைக்கும்படி செய்கிறது. அப்பொழுது... உனக்கு ஒன்றை நான் காண்பிக்கட்டும். நீ ஏன் உன்னை அவருக்கு ஒப்புக் கொடுக்க விரும்புகிறாய்? ஏனெனில் நீ ஒப்புக்கொடுக்க வேண்டும் மென்று ஏதோ ஒன்று உன்னை அழைத்துக் கொண்டிருக்கிறது. நீ ஒப்புக்கொடுக்க வேண்டுமென்பதற்கு அது ஒரு நல்ல அடையாளம். 157இப்பொழுது, நீ செய்ய வேண்டியதெல்லாம் சகோ தரனே, சகோதரியே (ஒருக்கால் வாலிபமாக அல்லது வயோதிபமாக இருக்கலாம்), நீ கூறியிருக்கிறாய். முழுவதுமாக ஒப்புக் கொடுக்க இயலவில்லை என்று. உன்னைச் சமர்ப்பித்து, “கர்த்தாவே, என் சிந்தனையையும், எனக்குள்ள எல்லாவற்றையும் உமக்குக் கொடுக்க விரும்புகிறேன். என் ஜீவியத்தை, சேவிக்கும் ஜீவியமாக் கொடுக்கிறேன். கர்த்தாவே, என்னை எடுத்து, நான் உள்ளவாறே என்னை உபயோகிப்பீராக” என்று சொல். அது மிகவும் எளிதான காரியம். சபை இதை உணருவது நலம். இந்த கூடாரத்திலுள்ள வர்கள் இந்தக் கேள்விகளினால் பயனடைகிறீர்கள் என்று நம்புகிறேன். இவைகள் உங்களுக்குப் பிடிக்கிறதா? சரி. அது சிறிது உதவியாயிருக்கும். இப்பொழுது பாருங்கள், சபையோர் இதை செய்ய லாமா அதை செய்யலாமா என்று கேட்கும் பட்சத்தில் (பாருங்கள்?) என்னால் முடிந்த வரைக்கும் அவைகளுக்குப் பதிலளிக்க நான் பிரயாசப்படுகிறேன். உங்களுக்கு நான் தவறான ஆலோசனை அளித்திருந்தால், அவ்விதம் செய்ய வேண்டுமென்று என் இருதயத்தில் நான் எண்ணவில்லை. என் சொந்த கருத்துக்களை நான் ஆதரிக்க - அது தவறென்றும் அறிந்தும் கூட - உங்களுக்கு நான் எடுத்துரைத்திருந்தால், நான் மிகவும் மோசமான மாய்மாலக்காரனாயிருப்பேன். அது உண்மை . நான் தவறாயிருந்தால், என் இருதயத்திலுள்ள எல்லாவற்றைக் கொண்டும் உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க அவ்விதம் செய்தேன் என்பதை தேவன் அறிவார். 158இந்த ஒலிநாடா செல்லவிருக்கும் தேசத்திலுள்ள போதகர்களே, உங்களைப் புண்படுத்துவதற்காக இவைகளை நான் கூறவில்லை. உங்களை நான் நேசிப்பதால் இவைகளைக் கூறினேன். பாருங்கள்? உண்மையாக, என் இருதயப்பூர்வமாக .... அது.... இப்பொழுது, உங்களுக்குத் தெரியாத ஒன்று எனக்குத் தெரியும் என்று காண்பிக்க நான் முயலவில்லை. அதுவல்ல என் நோக்கம், சகோதரனே. உங்களை நான் நேசிக்கிறேன் என்பதனால் தான் இவைகளைச் செய்கிறேன். நீங்களும் என்னை நேசிக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். இப்பொழுது நாம் இருக்கின்ற இந்த கூடாரத்துக்கு அருகிலுள்ள இந்த நதியில், இந்த ஒஹையோ நதியில், நான் ஒருபழைய படகில் செல்கிறேன் என்றும், அதில் வெள்ளப்பெருக்கு உள்ளதென்றும், எனக்கு கீழே நீர்வீழ்ச்சி உள்ளதென்றும் வைத்துக் கொள்வோம். இந்தப் படகு அந்த நீர்வீழ்ச்சியில் செல்ல முடி யாதென்று உங்களுக்குத் தெரியும். அதனால் செல்லவே முடியாது. நான் தலையை பின்னால் சாய்த்துக் கொண்டு, பாடிக் கொண்டு, இளைப்பாறிக் கொண்டு, மெதுவாக அந்த நீர் வீழ்ச்சியை அடைந்து கொண்டிருக்கிறேன். அந்த இடத்தை அடைந்தவுடனே, படகு சேதமடைந்து விடுமென்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் என்னை நேசிப்பீர்களானால், நீங்கள் கூச்சலிடுவீர்கள் அல்லது ஒரு படகில் குதித்து, வேகமாக என்னை அடைந்து, என் தலையை ஏதாவ தொன்றைக் கொண்டு அடித்து, அதிலிருந்து என்னைக் காப்பாற்று வீர்கள். “சகோ, பிரான்ஹாமே, உங்களுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா என்ன? நீர்வீழ்ச்சி அங்கு உள்ளது” என்பீர்கள். அப்பொழுது நான், “ஓ, வாயை மூடுங்கள்! என்னை விட்டு விடுங்கள்” என்பேனானால்; நீங்கள் என்னை அப்பொழுதும் நேசிப்பதால், என்னைக் காப்பாற்ற உலகிலுள்ள எதையும் நீங்கள் செய்வீர்கள்; என்னை நீங்கள் பிடித்துக் கொள்வீர்கள்; நீங்கள் படகை உடைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதையும் செய்து, என்னை அதி லிருந்து வெளியே தூக்கிக் காப்பாற்றுவீர்கள். ஏனெனில் நீங்கள் என்னை நேசிக்கிறீர்கள். என்ன நடக்கப் போகிறதென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். 159சகோதரனே, ஸ்தாபனத்துக்கு அதுதான் நடக்கப் போகிறதென்பதை நான் அறிந்திருக்கிறேன். அவள் அந்த பேரலையிலிருந்து தப்ப முடியாது. பாருங்கள்? நீங்கள் நேராக உலக சபை களின் ஆலோசனை சங்கத்துக்கு சென்று கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும், அல்லது இப்பொழுது நாங்கள் உள்ளதுபோல அதை விட்டு வெளி வர வேண்டும். எனவே நீங்கள் இவ்விரண்டில் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும்... நான் படகை உடைக்க விரும்புகிறேன், நான் எதையும் செய்ய விரும்புகிறேன் - உங்களைப் புண்படுத்த அல்ல, சகோதரனே, அதை செய்யாதீர்கள், நீங்கள் செய்வது தவறென்று உங்களைத் தட்டியெழுப்பி உணர்த்த. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கொடுக்கப்படும் ஞானஸ்நானத்தைக் குறித்து உலகிலுள்ள எந்த மனிதனும் வேதவாயிலாக அது தவறென்று குற்றப்படுத்த முடியாது. எந்தமனிதனுமே அதை குற்றப்படுத்த முடியாது. வேதவசனம் எதுவுமே... ஜனங்களே, சகோதரரே, வேதத்தை ஆராய்ந்து, புதிய ஏற்பாட்டின் காலத்தில் ஒருவராவது இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலேயன்றி, வேறெந்த வகையிலாவது ஞானஸ்நானம் பெற்றதாக எனக்குக் காண்பியுங்கள். (பழைய ஏற்பாட்டின் காலத்தில் அவர்கள் ஞானஸ்நானம் கொடுக்கவில்லை, புதிய ஏற்பாட்டின் காலத்தில்தான்). அல்லது வரலாற்று நூல்களைத் தேடிப் பார்த்து. கடைசி அப்போஸ்தலனுடைய மரணத்துக்குப் பிறகு நூறு ஆண்டுகள் வரைக்கும் அவர்கள் எந்த விதமான ஞானஸ்நானம் கொடுத்து வந்தனர் என்பதைக் கண்டறியுங்கள்... கத்தோலிக்க சபைதான் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் தொடங்கினது. அவர்களுடைய பிரமாண புத்தகம் அவ்விதம் செய்யக் கூறுகிறது. 160இங்கு புனித இருதய ஆலயத்திலுள்ள குருவானவர் என்னைப் பேட்டி கண்டபோது அவர் அதைதான் கூறினார். இந்த ப்ரேஸியர் பெண்ணுக்கு எந்த விதத்தில் ஞானஸ்நானம் கொடுத்தேன் என்று பேராயர் அறிய விரும்புவதாக அவர் கேட்டபோது, நான் அவரிடம் கூறினேன். அவர், கத்தோலிக்க சபை முன்காலத்தில் அவ்விதம் ஞானஸ்நானம் கொடுத்து வந்தது என்று கூறினார். அவர், “இந்த வாக்குமூலத்தின் பேரில் சத்தியம் பண்ணுவீர்களா? என்று கேட்டார். “நான் சத்தியம் பண்ணுவதில்லை” என்றேன். அவர், “பேராயர் நீங்கள் சத்தியம் பண்ணவேண்டும் என்கிறார்” என்றார். நான், “பேராயர் என் வார்த்தையை நம்பினால் நம்பட்டும், நம்பாவிட்டால் போகட்டும். சத்தியம் பண்ணக்கூடாது என்று வேதம் உரைக்கிறது” என்றேன். அவர், “நல்லது. உ...”என்றார். நான், “அவளுக்கு நான் கிறிஸ்தவ தண்ணீர் ஞானஸ்நானத்தைக் கொடுத்தேன். அவளை நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஸ்பிரிங் தெருவின் கீழே தண்ணீரில் முழுக்கினேன் ” என்றேன். குருவானவர் அதை எழுதிக் கொண்டு, அந்த விதமாகத்தான் கத்தோலிக்க சபை முன்பு ஞானஸ்நானம் கொடுத்தது என்றார். “எப்பொழுது?” என்று கேட்டேன். “அப்போஸ்தலர்களின் நாட்களில்” என்றார். “அவர்களை கத்தோலிக்கர் என்றா அழைக்கிறீர்?” என்றேன். “நிச்சயமாக, அவர்கள் கத்தோலிக்கரே” என்றார். அப்படியானால் உம்மை விட நான் மேலான கத்தோலிக்கன். அவர்களுடைய உபதேசத்தை நான் பின்பற்றுகிறேன்' என்றேன். அது உண்மை . பாருங்கள், பாருங்கள்? அவர்கள் அவ்விதம் உரிமை கோருகின்றனர், ஆனால் அது அப்படியல்ல. கத்தோலிக்க சபை ரோமாபுரியிலுள்ள நிசாயாவில் கான்ஸ்டன்டைன் அரசனின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டது. அப்பொழுது சபையும் நாடும் ஒன்றாக இணைந்தன. நாடு சபைக்கு சொத்துக்களையும் மற்றவைகளையும் கொடுத்தது; அவர்கள் உண்மையில் ஆயிரம் வருட அரசாட்சியின் காலத்தில் இருப்பதாக எண்ணினர். அது சாத்தானின் ஆயிர வருட காலம். அது முற்றிலும் உண்மை . அதை நம்பாதீர்கள். ஆம், ஐயா! 161இப்பொழுது, ஆனால்... அவர்களிடையே சமரசம் ஏற்பட்ட போது. அஞ்ஞான விக்கிரகங்களை அவர்கள் வைத்துக் கொள்வதற்கு பதிலாக, அவர்கள் வீனஸ் சிலையை எடுத்துப் போட்டு, மரியாளின் சிலையையும், ஜூபிடர் சிலையை எடுத்துப்போட்டு, பவுல் அல்லது பேதுருவின் சிலையையும் அவைகளுக்குப் பதிலாக வைத்துக் கொண்டனர். ரோமாபுரியிலுள்ள அந்த வாடிகனில், இப்பொழுது பத்தொன்பது அடி உயரமுள்ள பேதுருவின் சிலை உள்ளது. அவர்கள் அதை முத்தமிட்டு, மூன்று கால்விரல்களை அந்த சிலையிலிருந்து எடுத்துவிட்டதாகக் கூறுகின்றனர். பாருங்கள்? எல்லாமே... கீழே சென்றோம். ஒரு நாள் காலை நானும் பில்லியும் அங்குள்ள ஒரு ஆலயத்துக்குச் சென்றோம். நாங்கள் அடித்தளத்துக்குச் சென்றோம். அங்கு அவர்கள் சாமியார்களை (monks)புதைத்து அவர்களுடைய சரீரங்கள் மண்ணில் அழுகும்படி விட்டு விடுகின்றனர். அவர்கள் அந்த எலும்புகளை எடுத்து விளக்கு அமைப்புகளை உண்டாக்குகின்றனர். அந்த கையெலும்பு இப்படி தொங்கிக் கொண்டிருக்கிறது. மண்டை ஓடுகளும் கூட. ஜனங்கள் அங்கு வந்து, மரித்தோரின் மண்டை ஓடுகளின் மூலம் ஆசிர்வாதம் பெற எண்ணி, அவைகளைத் தேய்த்து வெண்மையாக்கியுள்ளனர்.அது ஒரு வகையில் மரித்தோரின் ஆவியுடன் தொடர்பு கொள்ளுதல் (spiritualism):பாருங்கள்? 162அது அங்குதான் - ரோமாபுரியில் - தொடங்கினது. அங்குதான் மிருகத்தின் சிங்காசனம் உள்ளது. அதிலிருந்து தான் தாய் வேசி தோன்றினாள். அவளுடைய குமாரத்திகளும் அவளைப் போலவே வேசிகளே. ஏனெனில் அவள் உலகம் முழுவதற்கும் உக்கிர கோபமாகிய மதுவை - அவளுடைய சாட்சியைக் குடிக்கக் கொடுக்கிறாள். அது பூமியின் கசப்புடன் கலந்துள்ளது. அவளுக்கு ஒரு சாட்சி உள்ளது. அவள், “நான் கன்னிகையாக - இல்லை, நான் விதவையாக உட்கார்ந்திருக்கிறேன், எனக்கு ஒரு குறைவுமில்லை” என்கிறாள். அவள் பரிதபிக்கப்படத்தக்கவளும், நிர்ப்பாக்கிய முள்ளவளும், குருடாயும், தரித்திரமாயும் இருப்பதை அறியாமல் இருக்கிறாள். அதுதான். அது கத்தோலிக்க சபைக்கு மட்டுமின்றி ஒவ்வொரு பிராடெஸ்டெண்டு ஸ்தாபனத்துக்கும் பொருந்தும். ஆனால் இந்த குழப்பம் அனைத்தின் மத்தியிலும் தேவனாகிய கர்த்தரை தங்கள் முழு இருதயத்தோடும் ஆத்துமாவோடும் சிந்தையோடும் அன்புகூரும் விலையேறப்பெற்ற ஜனங்கள் உள்ளனர். அவர்கள் சரியென்று நினைக்கின்றனர். அவர்கள் செய்வது சரியென்று நினைக்கின்றனர். தேவனே உன்னத நியாயாதிபதியாயிருப்பார். 163என்னைப் பொறுத்தவரையில், கத்தோலிக்க சபை கூறுவது போல், தேவன் உலகத்தை சபையைக் கொண்டு நியாயந் தீர்ப்பாரானால்! என்னை பேட்டி கண்ட மனிதனிடம் நான் கேட்டேன், . அவர், “தேவன் உலகத்தை சபையைக் கொண்டு நியாயந்தீர்ப்பார்” என்றார். நான், “எந்த சபையைக் கொண்டு?” என்று கேட்டேன். அவர், “கத்தோலிக்க சபையைக் கொண்டு' என்றார். நான், “எந்த. கத்தோலிக்க சபையைக் கொண்டு? அவர்கள் ஒருவரோடொருவர் வேறுபாடு கொண்டுள்ளனரே” என்றேன். எந்த சபையைக் கொண்டு? கிரேக்க வைதீக சபையைக் கொண்டா, அல்லது ரோம சபையைக் கொண்டா? எந்த சபையைக் கொண்டு அவர் நியாயந்தீர்க்கப் போகிறார்? அவர் பிராடெஸ்டெண்டு சபையைக் கொண்டு நியாயந்தீர்ப்பாரானால், அது எந்த பிராடெஸ் டெண்டு சபை? மெலோடிஸ்டா, பாப்டிஸ்டா, லுத்தரனா, பெந்தெ கொஸ்தேயினரா? அவர் உலகத்தை இயேசு கிறிஸ்துவைக் கொண்டுநியாயந்தீர்ப்பார் என்று. வேதம் உரைக்கிறது, இயேசு கிறிஸ்து வார்த்தையாயிருக்கிறார். எனவே என்னைப் பொறுத்த வரையில் அவர் உலகத்தை தேவனுடைய வார்த்தையைக் கொண்டு நியாயந்தீர்ப் பார். அது உண்மை . அவருடைய நியாயத்தீர்ப்புகள் இப்பொழுது பூமியில் உள்ளதென்று நான் நம்புகிறேன். இந்த அவிசுவாசம் கொண்ட உலகத்தின் மேல் ஊற்றப்படவிருக்கும் தேவனுடைய கோபாக்கினையினின்று தப்பித்துக் கொள்ள நம்முடைய முழு இருதயத்தோடும் அவரைத் தேடுவோமாக. அதிலிருந்து தப்ப ஒரு வழியும் இல்லை. 164இவ்வுலகத்துக்கு இரட்சிப்பு இனி வரவே வராது. அவர்கள் கிருபைக்கும் நியாயத்தீர்ப்புக்கும் இடையே உள்ள கோட்டை தாண்டி விட்டனர். அது... நீங்கள் அமெரிக்காவிலுள்ள ஒவ்வொரு நாட்டிலும் ஒரு ஆபிரகாம்லிங்கனை வைக்கலாம், இருப்பினும் இந்த 'ரிக்கிகளையும் 'எல்விஸ்'களையும் தேவனிடம் திருப்ப முடியாது. நீங்கள் செய்தித்தாளை பார்த்தால் (அது என்னிடம் உள்ளது. நீங்கள் இன்றிரவு அதைக் காண விரும்பினால், அதை பிற்பகல் கொண்டு வருகிறேன்), ஒரு பஸ்டபிடேரியன் சபையில் (நீங்கள் அதை செய்தித்தாளில் பார்த்திருப்பீர்கள்) ராக் அண்டு ரோல் இசையோடு அவர்கள் இராப்போஜனத்துக்கு செல்கின் றனராம். போதகர் அங்கு நின்று கொண்டு இசைக்கேற்ப இப்படி கைகொட்டுகிறாராம். அவர்கள் சிலுவையில் அறைதல் போன்ற வைகளை ராக் அண்டு ரோலாக செய்து காட்டுகின்றனராம். இது பிரஸ்பிடேரியன் சபையில் நடக்கிறது. இந்த கீழ்த்தரமான, கூச்சலிடுகின்ற, அசுத்தமான, 'பீட்டல்ஸ்' (Beatles)என்று அழைக்கப்படுகின்றவர். அவர்கள் மனிதரை விட கீழ்த்தரமாகி வண்டுகளாகி (beetles)விட்டனர். ஒரு வாரத்துக்கு முன்பு அவர்கள் செயின்ட் லூயியில் ஒரு லட்சம் டாலர்கள் ஒப்பந்தத்தை வேண்டாமென்று தள்ளி விட்டனர். அத்துடன் அவர்கள் நிறுத்திவிடவில்லை. அவர்கள் இங்கு வந்திருக்கின்றனர் - ஒரு கூட்டம் ஆங்கிலேய துரோகிகள் தங்கள் தலை மயிரை வளர்த்து கண்களின் மேல் விட்டுக் கொண்டுள்ளனர். இப்பொழுது அவர்களுக்கு சொந்தமான மார்க்கம் ஒன்றை தொடங்கவிருக்கின்றனர். அதை நீங்கள் 'லுக்' (Look)பத்திரிகயில் கண்டிருப்பீர்கள். பாருங்கள்? 165ஓ, இவ்வுலகம் எவ்வளவாய் கறைபட்டுள்ளது. அதற்கு எந்த நம்பிக்கையும் கிடையவே கிடையாது; அவர்கள் விவேகத்தையும் பொதுவான அறிவையும் பிரிக்கும் கோட்டை கடந்து விட்டனர். மனிதனால் நிதானித்துப் பார்க்க முடியவில்லை. நமக்கு முன்பிருந்த மனிதர்களைப் போல இப்பொழுது நமக்கில்லை. பாட்ரிக் ஹென்றி எங்கே? ஆபிரகாம் லிங்கன் எங்கே? அவர்கள் தங்கள் உறுதிப்பாட்டில் திடமாயிருந்தனர். மனிதருக்கு முன்பாக உடைகளைக் களைந்து நிர்வாணமாக அவர்களுக்கு முன் காட்சியளிக்கும் இந்த பைத்தியம் பிடித்த பெண்களை எழுந்து அடக்க முடியும் ஆண்கள் இன்றைக்கு எங்கே? ஏதாவதொரு பையன் அவர்களில் ஒருத்தியை அவமதித்தால் அவனை சிறைச்சாலையில் போடுகிறார்கள். உங்கள் விவேகம் எங்கே? சாதாரண அறிவு என்றால் என்ன? அவள் அவ்விதம் நிர்வாணமாயிருந்தால், அவளை ஒரு நாய் போல் போகவிட்டு விடுகிறீர்கள். ஆம், ஐயா! அவளுக்கு சாதாரண ஒழுக்கம் கூட இல்லையே. அதை நிறுத்த நாட்டின் சட்டங்கள் எங்கே? 166295, இங்கே கென்டக்கியிலுள்ள லூயிவில்லில், இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு ஸ்திரீ தன் பெயர் செய்தித்தாளில் வரவேண்டுமெனும் நோக்கத்துடன் ஒரு ப்ளாஸ்டிக் 'பிக்கினியை' (bikini)உடுத்துக் கொண்டு, ப்ரவுன் ஹோட்டலிலிருந்து வெளியே நடந்து வந்தாள், ஒரு போலீஸ்காரன் அவளை நிறுத்த முயன்றான், அவளோ நிற்காமல் அவனைப் பார்த்து சிரித்தாள். அவளை நிறுத்த அவன் ஒரு துப்பாக்கியை அவளை நோக்கி நீட்டி, அவளைக் காருக்குள் தள்ளி, ஒழுக்கங்கெட்ட விதத்தில் உடுத்தியிருந்ததற் காக, அவளை காவல் நிலையத்தில் சந்திக்கும்படி செய்தான். அவள் போய் சந்தித்து .... அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? போலீஸ்காரனை வேலையை விட்டு நீக்கினார்கள். அழுகிப்போன இந்த தேசத்துக்கு தேவன் உதவி புரிவாராக. நீங்கள் தவறு செய்யாமல் மீள முடியாது. நாம் ஒருக் கால் மீளாமல் இருக்கக் கூடும், ஆனால் நம்மால் மேலே ஏறிச் செல்ல முடியும். நாம் தலைவணங்குவோம். 167கர்த்தராகிய இயேசுவே, அந்த மகத்தான மேய்ப்பர் வந்து இதிலிருந்து எங்களைக் கொண்டு செல்லட்டும், கர்த்தாவே. நாங்கள் அவருக்காக காத்திருக்கிறோம். அந்த நேரத்துக்காக நாங்கள் விழித்திருக்கிறோம். உலகம் இவ்வளவு இழிவான நிலையில் உள்ளதை நாங்கள் காணும்போது, அது அவ்விதம் இருக்கும் என்று நீர் உரைத்துள்ளதை நினைவுகூருகிறோம். அந்த நேரம் வரும் என்று உம்முடைய மகத்தான தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் உரைத்துள்ளனர். நாங்கள் தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறோம், கர்த்தாவே; நாங்கள் அதை விசுவாசிக்கிறோம். இப்பொழுது, தேவனே, இந்த வார்த்தையை எங்களுக்கு வியாக்கியானம் செய்ய, தீர்க்கதரிசிகளை எங்களுக்குத் தரவேண்டும் மென்று ஜெபிக்கிறோம். அப்பொழுது நாங்கள் அது சரியா தவறாவென்று அறிந்து கொள்வோம். கள்ளத்தீர்க்கதரிசிகள் எழும்புவதை நாங்கள் காண்கிறோம். அவர்கள் வனாந்தரங்களில், எல்லா விதமான வனாந்தரங்களிலும், எல்லாவிதமான இரகசிய அறை வீடுகளிலும்; எல்லாவிதமான தெய்வீக பிதாக்கள் எல்லாவிடங்களிலும் உள்ளனர். இந்த ஏழை கறுப்பு நிற சகோதரர்களையும் சகோ தரிகளையும் இப்பொழுது அங்கு காண்கையில்; அவர்கள் ஒருமைப் பாடு (integration)வேண்டும் என்றனர். அவர்களுக்கு அது கிடைத்தவுடனே... அது உண்மை ; அது அவர்களுக்கு கிடைக்க வேண்டும்; அவர்கள் சகோதரரும் சகோதரிகளுமாவர். இப்பொழுது, அவர்களுக்கு அது கிடைத்துவிட்ட பிறகு, அவர்கள் முன்னைவிட மோசமாகி விட்டனர். அது கம்யூனிஸ்டுகளால் ஊக்கு விக்கப்பட்டது என்பதை அது காண்பிக்கிறது. ஓ, தேவனே, அந்த ஏழை மனிதர்களால் அதை காண முடியவில்லையா? அது மாத்திரம் செய்யப்பட்டால்... நல்லது, அது செய்யப்பட வேண்டும், கர்த்தாவே. 168வாரும், அதுதான் எங்களுக்கு வேண்டும். பிதாவே, நீர் வருவீராக. நாங்கள் காத்திருக்கிறோம். வாரும், கர்த்தாவே. எங்களை உமது கரங்களில் அணைத்துக் கொள்ளும். எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும். இந்த உலகத்தில் நியாயம் என்பதே இல்லை. ஒன்று மற்றொன்றுக்கு விரோதமாக இழுக்கிறது, இருப்பினும் அது பூச்சிகளால் அரிக்கப்பட்டு சாரமில்லாததாய் இருக்கிறது. சரீரம் முழுவதுமே நொதிக்கிற இரணமாய் உள்ளது என்று நீர் கூறியிருக்கிறீர். உண்மையாகவே, ஒவ்வொரு போஜன பீடமும் வாந்தியினால் நிறைந்திருக்கிறது. நீர், “யாருக்கு உபதேசத்தை உணர்த்துவேன்? யாருக்கு அந்நாளில் அறிவை உணர்த்துவேன்?” என்று கேட்பீர். போஜன பீடம் முழுவதும் வாந்தியினால் நிறைந்திருக்கிறது, அதை நாங்கள் காண்கிறோம், கர்த்தாவே. அந்த நேரம் இங் குள்ளதைக் காண்கிறோம். தயவுகூர்ந்து எங்களுக்கு உதவி செய்வீராக. அன்புள்ள தேவனே, ஜனங்கள் அரிசோனாவுக்கு வரு வதைக் குறித்து அநேக கேள்விகள் இங்கிருந்தன. ஓ, அன்புள்ள தேவனே, அந்த அருமையான, விலையேறப்பெற்ற ஜனங்கள். மற்ற விடங்களில் அவர்கள் இந்த ஒலிநாடாவைக் கேட்பார்கள். அவர்கள் எங்கு வாழவேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு கட்டளையிட நான் சர்வாதிகாரியல்ல என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்களாக. அவர்கள் அதை தெளிவாக புரிந்து கொள்ளட்டும். அவர்கள் அந்த தேசத்தை நேசிக்கின்றனர் என்றால், நானும் கூட நேசிக்கிறேன், அவர்கள் அங்கேயே இருக்கட்டும், பிதாவே. ஆனால் எடுத்துக்கொள்ளப்படுதல் அங்குதான் நிகழ வேண்டுமென்றும், அவர்கள் என்னுடன் கூட இருக்க வேண்டும் என்றும் அவர்கள் போதிக்கும்போது! நான் தகுதியற்ற, அசுத்தமான பாவி, தேவனுடைய கிருபையால் இரட்சிக்கப்பட்டவன் - அப்படிப்பட்ட என்னுடன் கூட இருக்க வேண்டுமாம். கர்த்தாவே, நான் பவுலுடன் கூட இருக்க விரும்புகிறேன், அவன் எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்வான் என்று எனக்குத் தெரியும். மற்றும் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோருடன். அவர்கள் பாலஸ்தீனாவில் எங்கோ அடக்கம் பண்ணப்பட்டுள்ளனர். என் பெயரை உலகத்தோற்ற முதல் அந்த புத்தகத்தில் நீர் எழுதியிருப்பீரானால், நான் அவர்களுடன் செல்வேன் என்று அறிந்திருக்கிறேன். தேவனே, இவர்கள் ஒவ்வொருவரும் அங்கிருக்க வேண்டுமென்று ஜெபிக்கிறேன். கர்த்தாவே, இவர்களையெல்லாம் நான் ஓரிடத்தில் கூட்டிச் சேர்க்க எனக்குதவி செய்யும், அங்கு அவர்கள். மகத்தான போதகர்களாகிய சகோ. நெவில், சகோ. காப்ஸ் மற்றும் இங்குள்ள சகோதரர்களாகிய “ஜூனி”, சகோ. ரட்டல், ஓ, ஜே. டி., சகோ. காலின்ஸ், சகோ. பீலர் மற்றும் சகோ. பாமர் ஆகியோரின் செய்திகளை கேட்க வேண்டுமென்று விரும்புகின்றனர். தேவனே, இதை இவர்களுக்கு அருளுவீராக. அவர்கள் உண்மையில் செய்தியைக் கேட்கும் இந்த இடத்துக்கு வருவார்களாக - அவர்கள் அதைக் கேட்க விரும்பினால், அந்த வனாந்தரத்துக்கு அவர்கள் ஓடிப்போக வேண்டாம். அவர்கள் செய்யக் கூடாது என்று வேதம் கூறியுள்ளதை அவர்கள் அப்படியேசெய்ய முயல்கின்றனர். “அதோ வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால், நம்பாதீர்கள். இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள் . என்னால் முடிந்த வரைக்கும் அவர்களை எச்சரிக்க முயல்கிறேன், ஆனால் இவை யெல்லாம் அந்த நேரம் அருகாமையிலுள்ளது என்பதை காண்பிக்கிறது. 169நான் இரக்கத்துக்காக ஜெபிக்கிறேன், கர்த்தாவே. என்மேல் இரங்கும்; எனக்குதவி செய்யும்படி ஜெபிக்கிறேன். என் ஜீவனை முத்தரிக்க... இங்கு நான் செய்த வேலை அனைத்தும், ஏதோ ஒரு மதவெறி கொண்டவன் ஒரு கூட்டத்தை அல்லது ஒரு கொள்கையினரை (cult)எங்காவது ஒரு வனாந்தரத்துக்கு கொண்டு செல்லும்படி செய்து விடுமோ என்று பயப்படுகிறேன். என் பெயர் அவ்விதம் கெட்டுப் போக விடாதேயும். என்னால் முடிந்த வரையில் நான் உத்தமமாய் இருந்து வந்திருக்கிறேன். தேவனே, அது நடக்க விடாதேயும். எனக்கு எந்த விதத்திலாவது உதவி செய்யும். எனக்கு . என்ன செய்வதென்று தெரியவில்லை. நான் உம் பேரில் சார்ந்திருக்கிறேன், எனக்கு உதவி செய்யும். நீர் என்ன சொன்னாலும் நான் செய்ய ஆயத்தமாயிருக்கிறேன். நான் உம்முடைய ஊழியக்காரன், இவர்கள் உம்முடைய பிள்ளைகள். கர்த்தாவே, இந்த... இந்த ஜனங்களில் பெரும்பாலோர், நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது பேர், கர்த்தாவே, உண்மையில் திடமானவர்கள். அவர்கள் விசுவாசிக்கின்றனர்; அவர்கள் அறிந்திருக்கின்றனர்; அவர்கள் புரிந்து கொள்கின்றனர். அது நானல்ல என்று அவர்களுக்குத் தெரியும்; ஆனால் ஒவ்வொரு எழுப்புதலையும் இக்காரியங்கள் தொடரவேண்டிய தாயுள்ளது என்பதை நான் அறிகிறேன், இது அதற்கு விலக்கு அல்ல. எனவே எங்களுக்கு இப்பொழுது உதவி செய்ய வேண்டு மென்று ஜெபிக்கிறேன், நாங்கள் சிறிது பகல் உணவு அருந்த இன்று செல்லும்போது, எங்களுக்கு உதவி செய்வீராக. நாங்கள் ஒருமித்து ஐக்கியம் கொள்வதை ஆசீர்வதிப்பீராக. பிற்பகலில் நேரத்தோடு எங்களை மறுபடியும் இங்கு கூட்டிச் சேரும். அநேகர் இப்பொழுது தங்கள் வீட்டுக்கு போகவேண்டும், கர்த்தாவே, அவர்களுக்கு உதவி செய்யும்படி ஜெபிக்கிறேன். அவர்களுடைய மற்ற கேள்விகளுக்கு அளிக்கப்படுகின்ற பதில்களைக் கேட்க அவர்கள் எப்படியாகிலும் அந்த ஒலிநாடாவைப் பெற்றுக் கொள்வார்களாக. ஒருக்கால்அவர்களுடைய கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படாமல் இருக்கலாம். அவர்களுக்கு உதவு செய்யுமாறு ஜெபிக்கிறேன், கர்த்தாவே. இந்த கேள்விகளுக்கு இன்றிரவு நான் வேகமாக பதிலளிக்கவும், என்னால் முடிந்தவரை அவை ஒவ்வொன்றையும் எடுத்து பதிலளிக்க எனக்கு உதவி செய்வீராக. நாங்கள் மறுபடியும் பிற்பகல் இங்கு சந்திக்கும் வரையில், எங்களை ஆசீர்வதிப்பீராக. இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறேன். ஆமென். நான் அவரை நேசிக்கிறேன் நான் அவரை நேசிக்கிறேன் முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் 170எனக்கு முன்பாக இது எப்பொழுதும் இருப்பதற்காக “இந்த கேள்விகளுக்கு நான் பதிலளிக்கையில், கிறிஸ்து எனக்கு முன்னால் இருக்கிறார்” என்று நான் எழுதி வைத்திருக்கிறேன். என் இருதயத்திலிருந்து இதை கூறினேன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களுக்கு உதவி செய்ய எல்லாமே என் இருதயத்திலிருந்து எழுகிறது. அவர்களில் சிலர் தங்கள் பார்சல்களைப் பெற்றுக் கொள்ள இங்கு வரக்கூடும். 171அன்புள்ள தேவனே, இங்கு உறுமால்கள், பார்சல்கள் கிடக்கின்றன. இது வியாதிப்பட்டோரிடமும் அவதியுறுவோரிடமும் செல்கின்றது. வார்த்தையை எழுதியவரும் அதன் மகத்தான வியாக்கியானியுமான பரிசுத்த ஆவியானவர் தாமே, ஆராதனையின் இந்த பாகத்தின் போது இப்பொழுது அருகில் வந்து, இந்த துணிகளை ஆசீர்வதிப்பாராக. கர்த்தாவே, என்னைக் குறித்து நான் சிந்திக்கையில், அநேகருக்கு மரணத்துக்கும் ஜீவனுக்கும் இடையே நிற்கின்ற இந்த உறுமால்களின் குறுக்கே என் அசுத்தமான சரீரத்தை வைக்க நான் எம்மாத்திரம்? ஓ. தேவனே, எனக்கு நடுக்கம் உண்டாகிறது. ஆனால் அதே நேரத்தில் நான் நினைத்துப் பார்க்கையில்... நீர் என்னைக் காண்பதில்லை, என் சத்தத்தை மட்டுமே கேட்கிறீர். அது கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தின் மூலம் அங்கு வருகிறது. அவருக்கு நீர் உத்தரவு அருளினது போலவே எனக்கும்அருளுவீர் என்று விசுவாசிக்கிறேன். ஏனெனில் அவர் எனக்கு முன்பாக சென்று உன்னதமானவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். அவருடைய இரத்தம் பாவநிவிர்த்திக்காக அங்கு கிடக்கின்றது. அந்த இரத்தத்தால் நான் மூடப்பட்டிருக்கிறேன். அவர்களை நீர் சுகமாக்குவீர் என்று நான் விசுவாசிக்கிறேன், கர்த்தாவே, ஏனெனில் அவர்கள் தேவையுள்ளவர்களாய் இருக்கின்றனர். இல்லையென்றால் அவர்கள் இவைகளை இங்கு வைத்திருக்க மாட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் குணமாக்கும் படி வேண்டிக்கொள்கிறேன். என்னை நான் அவைகளுக்கு குறுக்கே வைக்கையில் .... அவர்கள் பவுலின் சரீரத்திலிருந்து எடுத்ததாக கூறப்பட்டுள்ளது... அவனும் கிருபையினால் இரட்சிக்கப்பட்ட ஒரு பாவியே. அவன் ஜனங்களைக் கடிந்து கொண்ட போதிலும், அவர்கள் அவனை விசுவாசித்தனர். அவன் மேய்ப்பன் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அவன் உம்மிடத்திலிருந்து அனுப்பப்பட்டவன் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர், ஏனெனில் அவனுடைய ஊழியத்தின் மூலம் நீர் உம்மை நிரூபித்தீர். தேவனே, இந்த ஜனங்கள் இன்றைக்கு அதே காரியத்தை விசுவாசிக்கின்றனர். அவர் களுக்கு இப்பொழுது நீர் உதவி செய்து அவர்கள் ஒவ்வொரு வரையும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் சுகமாக்குவீராக. ஆமென். 172உங்களுக்கு பசிக்கின்றதா? நான் இன்னும் அநேக கேள்விகளுக்காக பசியுள்ளவனாயிருக்கிறேன். “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான். இப்பொழுது, நான் ஒருக்கால்... இந்த கேள்விகளில் சிலவற்றிற்கு, நான் ஒருக்கால் சரியாக பதில் அளித்திருக்க மாட்டேன். ஆனால் என்னால் முடிந்த வரையில் நான் சிறப்பான பதில்கள் அளித்தேன். இன்றிரவு நான் 7.00 மணிக்கு தொடங்க முயற்சி செய்கிறேன். நல்லது, ஆராதனை 6.30 மணிக்கு தொடங்கும். உங்களால் தங்க முடியுமானால்... நீங்கள் தங்க முடியாவிட்டால், உங்கள் நிலைமை எங்களுக்குப் புரிகிறது; அதனால் பரவாயில்லை. இன்றிரவு என்னால் முடிந்த வரையில் இவை ஒவ்வொன்றுக்கும் பதிலளிக்க முயற்சி செய்கிறேன். இப்பொழுது, நாம் எழுந்து நின்று, கூட்டத்தை முடிக்க நாம் வழக்கமாக பாடும் இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல் என்னும் அந்த பழமையான பாடலைப் பாடுவோம். இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல் துயரமும் துக்கமும் உள்ள பிள்ளையே அது உனக்கு மகிழ்ச்சியும் ஆறுதலும் அளிக்கும் நீ எங்கு சென்றாலும் அதைக் கொண்டு செல் விலையுயர்ந்த நாமம், ஓ, என்ன இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம் விலையுயர்ந்த நாமம். ஓ, என்ன இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம் 173இந்த அறிவிப்பைச் செய்ய விரும்புகிறேன். இன்று காலை அன்பின் காணிக்கை எடுத்ததாக பில்லி இப்பொழுது என்னிடம் கூறினான் (பாருங்கள்?), நிறைய அன்பின் காணிக்கை கிடைத்துள்ளதாக அவன் கூறினான். அவன் சென்று கட்டிடத்தின் பின்னால் நிற்கும்படி சொல்லியிருக்கிறேன். ஆயத்தமாக வராதவர்களுக்கு, உங்கள் பகல் உணவுக்கு பணம் இல்லாதவர்களுக்கு, பில்லி பகல் உணவுக்காகவும், நீங்கள் விடுதியில் தங்குவதற்காக செலுத்த வேண்டிய தொகைக்காகவும் பணம் கொடுப்பான். அதை பெற்று செலுத்தி விடுங்கள். நீங்கள்... உங்களால் தங்க முடியும்மானால்... பில்லி உங்களை பின்பாகத்தில் சந்தித்து, உங்கள் பெயரையும் நீங்கள் எங்கு தங்கியிருக்கிறீர்கள் என்பதையும் குறித்துக் கொள்வான். இன்று காலை எடுக்கப்பட்ட அன்பின் காணிக்கையில்லிருந்து நாங்கள் உங்கள் பகல் உணவுக்காகவும், விடுதியில் தங்கினதற்காகவும் பணம் செலுத்தி விடுவோம். நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை! இயேசுவின் பாதங்களில் நாம் சந்திக்கும் வரை;